“க்கும்...”
யாரோ பக்கத்தில் தொண்டையை சரி செய்யும் சத்தம் அவளை அவளின் சிந்தனையில் இருந்து வெளியே இழுத்து வந்தது...
சத்தம் வந்த திசையைப் பார்த்தவள், அங்கே உதய் அவனின் ட்ரேட்மார்க் புன்சிரிப்புடன் நிற்பதை பார்த்து திகைத்துப் போனாள்...
அவள் பார்த்த உடன் வெகு இயல்பாக நாற்காலியை அவளின் அருகே இழுத்து போட்டு அமர்ந்த உதய்,
“என்ன நதி சில்லுன்னு ஜூஸ் குடிச்சப்புறமும் தக தகன்னு கோபத்துல இருக்க???” என்றான் ஈஸியாக!
“ப்ச்... நீங்க ஆஃபிஸ் போகலையா???” என்றாள் நந்திதா அலுப்புடன்.
“போகனும்... அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருந்தது...”
“ம்ம்ம்ம்... ஓ...”
“என்ன வேலை தெரியுமா???”
“ப்ச்... எனக்கு தெரிஞ்சு என்ன ஆகப்...”
பேசிக் கொண்டிருந்த நந்திதா, உதய் ஒரு புடவை பாக்ஸை கையில் வைத்து, அதில் இருந்து திறந்துக் காட்டிய பட்டுப் புடவையை பார்த்து அதிசயித்துப் போனாள்! அது அவள் ஆசைப் பட்ட அதே புடவை...
“ஹ்ம்ம்ம்... என் r&d டிபார்ட்மென்ட் ஹெட் இப்படி ஒரு புடவைக்காக மூஞ்சியை தூக்கி