தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 53 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அங்கிருந்த ஐந்து பெண்களின் பார்வையும் திடீரென்று வந்து நின்ற உதய், சரத் பக்கம் திரும்பியது...
“ஹாய்,” என்று பொதுப்படையாக அனைவருக்கும் சொன்னான் உதய்...
மற்றவர்கள் பதில் சொன்னார்களோ இல்லையோ... அதைப் பற்றிய கவலையில்லாமல் உதயின் பார்வை தானாக நந்திதாவிடம் சென்றது... கூடுதலாக அவளுக்கான அவனின் ஸ்பெஷல் புன்சிரிப்பு வேறு...
பதிலுக்கு புன்னகைத்த நந்திதாவின் கண்கள் ஆட்டோமேட்டிக்காக தழைந்து அவளின் கை விரல் நகங்களின் அழகை மும்முரமாக ரசிக்க தொடங்கியது. அவளின் வெட்கமும் எப்போதும் போல உதயை பைத்தியமாக்கியது! இமைக்காமல், சுற்றி இருப்பவர்களை பற்றிய கவலை இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்!
உதய் – நந்திதா காதல் நாடகம் பார்வை பரிமாற்றத்தால் நடந்துக் கொண்டிருந்த அதே நேரம் துளசி, ‘உங்களுக்கு இங்கே என்ன வேலை?’ எனும் லுக்கை சரத் பக்கம் வீசினாள்.
துளசியின் முறைப்ஸ் எல்லாம் சரத்துக்கு பி.ஹெச்டி அளவிற்கு பரிச்சயமானது என்பதால், அவசரமாக, வந்த விஷயத்தை சொன்னான் அவன்.
“மனடபத்துக்கு போக அரேஞ் செய்திருந்த வண்டி வர முடியாதாம் துளசி... உதய் வேற வண்டி அரேஞ் செய்றேன்னு சொல்றான்... நான் நம்ம குணா கிட்ட சொல்லலாம்னு சொல்றேன்...”
“எவ்வளவு பொறுப்பானவரா இருக்கீங்க சீனியர்... லுக் மட்டுமில்லாமல் குணத்திலேயும் அப்படியே தான் இருக்கீங்க...”
“ஹி ஹி...” என்று சிரிப்புடன் மனுஜா சொன்னதை ஏற்றுக் கொள்ள தொடங்கிய சரத், துளசியின் பார்வையில் ஏறிய சூடை புரிந்துக் கொண்டு,
“அவனையே அரேஞ் செய்ய சொல்லிடவா??? இல்ல குணாவை கேட்போமா?” என்று வந்த