விஷயத்தைக் கேட்டான்.
“இனிமேல் குணா கிட்ட கேட்டா நடக்குமான்னு தெரியலையே... உதய் ஆல்ரெடி ப்ளான் செய்து வச்சிருந்தா அவன் கிட்டேயே ஓகேன்னு சொல்லிடுங்க... எந்த வண்டில போனாலும் எங்களுக்கு ஒண்ணுமில்லை... ஆனால், சும்மா சும்மா இப்படி ஏதாவது காரணத்தை சொல்லிட்டு பொண்ணுங்க இருக்க இடத்துக்கு வந்து நிக்காதீங்க... அதும் மாப்பிள்ளை சாரை வேற கூட அலைய வச்சுட்டு,” என்றாள் துளசி.
“நீ சொன்னா சரியா தான் இருக்கும் துளசி,” என மனைவிக்கு ஜிங்-சாங் போட்டு ஏற்று விட்டு, “உதய் உன் கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சா?????” என்று தம்பியிடம் கேள்வியை திருப்பினான் சரத்.
நந்திதாவை சைட் அடிக்கும் முக்கியமான வேலையில் மும்முரமாக இருந்த உதய்,
“கேள்வி??? ஓ....! ஆமாம் ஆமாம் கேள்வி... பதில் கிடைச்சிருச்சு சரத்... தேங்க்ஸ்,” என்று எதையோ சொல்லி வைத்தான்.
“அப்போ வா இங்கேருந்து கிளம்புவோம்... நிறைய வேலை இருக்கு... உன் அண்ணி வேற திட்டுவா,” என்றான் சரத்.
நந்திதாவிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, மற்றவர்களிடமும் சொல்லி விட்டு சரத்துடன் கிளம்பி சென்றான் உதய்...
அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும்,
“என்ன நினைக்குறீங்க?” என்று மற்ற தோழிகளிடம் கேட்டாள் துளசி.
“சரத் இன்னும் ஸ்மார்ட்டா இருக்கார்,” என்றாள் மனுஜா
“மனு... துளசி கேட்குறது உதய் பத்தி......! சான்ஸே இல்லை ஒசிமம்...! உதய் சூப்பர் ஸ்மார்ட்,” என்றாள் அபி.