அதற்கு மேலே பேசிக் கொண்டிருக்காமல் உடனே நந்திதாவை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
✽✽✽
மண மேடையில் தன் அருகே வந்து அமர்ந்த நந்திதாவை ரகசியமாய் திரும்பி பார்த்த உதய், தன்னை மறந்து, “வாவ்,” என்றான்....
அவனின் ரியாக்ஷனினாலும், அதற்கு பின்னால் இருந்து ஒலித்த தோழிகளின் கேலி சிரிப்பினாலும் நந்துவின் வெட்கம் அதிகமான போதும், அருகில் இருந்தவனை பார்க்க அவளும் தயங்கவில்லை...
“சரி, சரி.... இரண்டு பேரும் நாளைல இருந்து ஃபுல் டைம் இப்படி நேருக்கு நேர் உட்கார்ந்து பார்த்து ரசிச்சுக்கோங்க... நாங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டோம்... இன்னைக்கு ஒரு நாள் குட் கேர்ள் அண்ட் பாயா திரும்பி உட்காருங்க...”
துளசி சொன்னதை கேட்டு நந்திதா தானாக திரும்ப, உதய் அப்போதும் திரும்ப மனமில்லாமல் நந்திதாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்....
அவனை மாற்ற முடியாது என்று புரிந்தோ என்னவோ, அவனை அப்படியே விட்டுவிட்டு மற்ற சம்பிரதாயங்கள் நடக்க, தாலி அவன் முன் நீட்ட பட்டது....
மனம் முழுவதும் சந்தோஷமும், பெருமிதமுமாக, நந்திதாவின் கழுத்தில் தாலியை அணிவித்தான் உதய்....!
அவனின் காதலி இப்போது அவனின் மனைவி....!
வானத்தில் பறப்பது போல மனம் லேசாகி இருந்தது....!