“உதய் சும்மாவே உன் பக்கம் தான் பார்த்துட்டு இருப்பான்... இன்னைக்கு அவனுக்கு சைட்ல உன்னையே பார்த்து சுளுக்கே வந்திர போகுது...”
ஆளாளுக்கு கிண்டல் செய்ய,
“சும்மா இருங்கப்பா... எனக்கே டென்ஷனா இருக்கு,” என்று சிணுங்கினாள் நந்து.
“என்ன நந்து நீ? எதுக்கு டென்ஷன்? லைஃப் லாங் ஞாபகம் வச்சுக்க போற நாள் இது... நிறைய சின்ன சின்ன ஸ்பெஷல் மொமன்ட்ஸ் கிடைக்க போற நாளும் கூட... டென்ஷன் எல்லாம் தூக்கி போட்டுட்டு, ஜாலியா ஒவ்வொன்னையும் ரசிச்சு என்ஜாய் செய்...”
“ம்ம்ம்ம்....”
“பொய் சொல்லலை நந்து... நிஜமாவே இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க...”
“அதுக்கு காரணம் உதய் தான் அபி... அவன் என்ன மாயம் செஞ்சானோ தெரியலை... ரொம்ப ஓவர் குட் கேர்ளா இருந்த இந்த பொண்ணை தலைகீழா மாத்தி வச்சிருக்கான்...”
“பின்ன!!!! ஒரு வருஷமா, இரண்டு வருஷமா! எத்தனை வருஷ காதல் அவனோடது....!”
துளசியின் பேச்சை வெட்க சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த நந்திதா, அவளை கேள்வியாக பார்த்தாள்.
“என்ன துளசி நிறைய வருஷ லவ்ன்னு சொல்ற?”
இதில் மறைக்க எதுவுமில்லை என்ற எண்ணத்துடன் துளசி பதில் சொல்ல தொடங்கிய நேரம்,
“துளசி, சீக்கிரம் நந்துவை அழைச்சிட்டு வா... கூப்பிடுறாங்க பாரு,” என்ற காமாட்சியின் குரல் கேட்டது.