தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 54 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
துளசி மணமகள் அறையில் நந்திதாவை தேடினாள்.
அங்கே மற்ற தோழிகள் மட்டும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்...
எங்கே போய் விட்டாள்? என்ற யோசனையுடனே அங்கேயே இருந்த சின்ன உள்ளறையில் எட்டிப் பார்த்தாள்...
நந்திதா அங்கே தான் இருந்தாள்...
“ஹேய் நந்து, நீ என்ன லூசாடி? இங்கே உட்கார்ந்து என்ன செய்துட்டு இருக்க?”
தோழியின் குரல் கேட்டு திரும்பி பார்த்த நந்திதா, அவளுக்கு பதிலாக கையில் இருந்த டைரியை காட்டினாள்.
“அது என்னன்னு தெரியுதுடி... ஆனா இப்போ எதுக்கு அதை எடுத்து படிச்சிட்டு இருக்க?”
“இதுல இருக்குறது எல்லாம் அம்மா எப்போ எழுதினது தெரியுமா துளசி?”
“எப்போ?”
“அப்பா இறந்தப்புறம், அவங்களும் நிறைய நாள் இருக்க போறதில்லைன்னு தெரிஞ்சப்புறம் எழுதி கொடுத்தாங்க...”
“ஓ...!”
“அவங்க கூட இருந்து அட்வைஸ் செய்றது போல இதை யூஸ் செய்துக்க சொல்லிக் கொடுத்தாங்க....”
தளுதளுத்த குரலில் நந்திதா சொல்ல, துளசியால் அவளின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது...