துளசி அந்த பக்கத்தில் இருந்ததை படித்தாள்....
அம்லு, உன் கல்யாணத்தை பார்க்கும் கொடுப்பினை எனக்கும் உன் அப்பாவிற்கும் இல்லை.
ஆனால் எங்களோட ஆசி உன்னோடு எப்போதும் இருக்கும்.
உனக்கு நல்ல விதமான வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.
அன்பு!
அன்பு அது ஒன்று தான் வெற்றிகரமான கல்யாண வாழ்க்கையின் ரகசியம்.
நீ புத்திசாலி. நல்ல பண்புள்ளவனாக தேர்வு செய்வாய் என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த கல்யாண வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது உன் கையில் தான் இருக்கு.
ஒரு அம்மா குழந்தையிடம் பாசமாக இருப்பது போல உன்னவரிடம் பாசமாக இரு... விட்டுக் கொடு... விட்டுக் கொடுப்பதால் நீ குறைந்து போக போவதில்லை.
ஆனால் எதிலும் வரைமுறை உண்டு. அதுவும் உனக்கே தெரியும்...
புத்திசாலியாக நடந்துக் கொள்...
நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக, அம்மா அப்பா உன்னை நல்ல விதமாக வளர்த்திருப்பதாக பேர் வாங்குவது போல நட...
துளசி நிமிர்ந்து நந்திதாவை பார்த்தாள்...
அவள் இப்போதும் கண்ணில் கண்ணீர் மின்ன அமர்ந்திருந்தாள்....