“ம்ம்ம்ம்...! நல்ல பொண்ணு நீ! இப்போ யோசிக்க வேண்டிய விஷயம் தான் இது...”
“இல்லை துளசி...”
“நந்து... நந்து... ரிலாக்ஸ்...! நான் சும்மா தான் கிண்டலா பதில் சொன்னேன்... நீ எப்படி ஃபீல் செய்றேன்னு எனக்கு நல்லா புரியுது... எனக்கும் சரத்துக்கும் கல்யாணம் நடந்தப்போ அத்தை இப்போ போல என் கிட்ட பேசிட்டு இருந்தாங்கன்னா நினைக்குற? இதெல்லாம் மெதுவா டெவலப் ஆனதுடி...”
“ப்ச்... ஆனாலும் ஆன்ட்டி வேற மாதிரி...”
“அதெல்லாம் இல்லை... ரேவதி அத்தையும் நல்ல டைப் தான்... என் கிட்ட எல்லாம் நல்லா தானே பேசுறாங்க... பழகுறாங்க... உன்னை பத்தியும் புரிஞ்சுக்கிட்டா நல்லா தான் இருப்ப்பாங்க...”
“ப்ச்...”
“இங்கே பாரேன்... லவ் மேரேஜ்... அப்புறம் நமக்கு பெருசா தெரியலைனாலும் அந்த ஏஜ் விஷயமும் இருக்கு...! ரேவதி அத்தையை தவிர வேற யாரும், இப்படி எல்லாத்தையும் இக்னோர் செய்துட்டு கல்யாணத்தை நடத்தி வச்சிருக்க மாட்டாங்க...”
“அது உதய் செய்தது...”
“சரி அவன் ஏதோ செய்தானாலும், அவங்க ஒத்துக்கிட்டாங்க தானே? எத்தனை அம்மா அமைதியா ஒத்துப்பாங்கன்னு நினைக்குற? “
“ம்ம்ம்...”
“இதை ஒரு சேலஞ்சா எடுத்துக்கோ நந்து... மாமியார்னா மான்ஸ்டர் எல்லாம் இல்லை...