(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

  

“இப்போ எதுக்கு நந்து இது? அதான் நாங்க எல்லாம் இருக்கோமே....”

  

“என்னன்னு சொல்ல தெரியலை துளசி... கொஞ்சம் பயமா இருக்கு...”

  

“பயமா?”

  

“ம்ம்ம்ம்.... அந்த சந்தோஷை...”

  

நந்திதாவின் பேச்சை நிறுத்தி இடையில் பேசினாள் துளசி.

  

“அவன் பேரை கூட சொல்லாதே... அவனை பத்தி யோசிக்குற டைமாடி இது?”

  

“இல்லை துளசி... அவனை இன்னைக்கு இங்கே... மண்டபத்துல பார்த்தேன்...”

  

“ஓ...! இங்கே பார் நந்து... நல்லா தெளிவா கேட்டுக்கோ... அந்த சந்தோஷ் விஷயம் முடிஞ்சு போன விஷயம்...”

  

“அதில்லை...”

  

“இரு, நான் சொல்றதை கேளு... அவனை பார்த்தா ஷாக் ஆகுறது... அது இது எல்லாம் வேண்டாம்... இப்போ நீ உதயோட மனைவி அதை ஞாபகம் வச்சுக்கோ...”

  

“ம்ம்ம்ம்... அவனை யார் இன்வைட் செய்ததுன்னு யோசிச்சேன் அவ்வளவு தான்...”

  

“அவனை யார் இன்வைட் செய்தா உனக்கென்ன? அதை விட்டு தள்ளு....! ஆனால் அவனை பார்த்து உனக்கென்ன பயம்?”

  

“ப்ச்... அவனை பார்த்துன்னு இல்லைடி... பொதுவாவே என்ன செய்ய போறேன்னு தெரியலை... உதயோட அம்மா என்னை நேரா பார்த்து கூட பேச மாட்டேங்குறாங்க...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.