அவங்களும் ஒரு மனுஷி தானே... உனக்கு உதய்யோட சப்போர்ட் வேற இருக்கு.... நல்ல மருமகளா நடந்துக்கோ.... நல்ல பேரு வாங்கு... எல்லாம் தானா சரியாகிடும்... நீயே ஸ்மார்ட்... யார் கிட்ட எப்படி பேசனும், நடந்துக்கனும்னு உனக்கே நல்லா தெரியும்...”
“ப்ச்...”
“இங்கே பாருடி... உதய் உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு உனக்கே தெரியும்... அதை அப்படியே மெயின்டெயின் செய்றது உன் சாமர்த்தியம்.... ஆனால் அதை ரேவதி அத்தைக்கு கோபம் வராதது போல செய்றது எக்ஸ்ட்ரா சாமர்த்தியம்... பழைய காலம் போல உதய் தான் எல்லாம்ன்னு அவன் கால்ல விழுந்து கிடன்னு சொல்ல மாட்டேன்... உன்னோட சுய மரியாதை முக்கியம்... ஆனால் விட்டுக் கொடுத்தும் போ நந்து... நமக்கு பிடிச்சவங்களுக்காக அப்பப்போ கொஞ்சமா விட்டுக் கொடுத்தா நாம குறைஞ்சு போயிட மாட்டோம்...”
துளசி பேசிக் கொண்டே போக, அவளே எதிர்பாராத வண்ணம் நந்திதா அவளை அணைத்துக் கொண்டாள்...
“அடி லூசே...! நான் உதய் இல்லை... விடுறி...”
கேலி மின்ன துளசி சொன்னதை கேட்டு சிரித்த போதும் நந்திதாவின் கண்கள் கலங்கி இருந்தது...
“என்னடி ஆச்சு உனக்கு நந்து???”
“ம்ம்ம்.... சொல்றேன்... “ என்ற நந்திதா, அவள் கீழே வைத்திருந்த டைரியை திறந்து தேடி ஒரு பக்கத்தை துளசி பக்கம் நீட்டினாள்...
துளசி என்ன என்பது போல பார்க்க,
“அம்மா என்ன எழுதி இருக்காங்கன்னு படிச்சு பாரு,” என்றாள் நந்திதா.