“ஆமாம்... ஜூனியர் எல்லாம் கூட சைட் அடிச்சிருக்கனும் போலருக்கு... ச்சே மிஸ் செய்துட்டேனே,” என்றாள் அருணா.
“அடிப்பாவி, கல்யாணம் ஆகி ஆறு ஏழு வருஷத்துக்கு அப்புறமும் நீ மாறவே இல்லையா? ஆனால் சீனீயரோ ஜூனியோ... என் சரத்தை விட்டா சரி தான்,” என்ற துளசி, நந்திதா அபியை முறைப்பதை கவனித்து விட்டு,
“ஹேய் என்ன முறைக்குற? ‘விளையாட்டுக்கு தானேடி சொல்றாங்க... உனக்கு அது கூடவா புரியலை’ன்னு அன்னைக்கு எனக்கு மட்டும் அட்வைஸ் செய்த???? இப்போ உதய்யை பத்தி சொன்னா முறைக்குற?????” என்றாள்!
“அதெல்லாம் ஒண்ணுமில்லை... நான் என் முறைக்கிறேன்,” என்றாள் நந்திதா சிணுங்கலாக!
“ஹையோ பார்த்து... பார்த்து... நம்ம நந்துக்கு கூட வெட்கம் வருது...!”
இப்படி கலட்டா, கேலி, கிண்டல் என நேரம் ஓடிப் போக, திருமண நாளும் வந்து சேர்ந்தது.
திருமண மண்டபம் உதயின் உறவினர்கள், பிஸ்னஸ் நண்பர்கள், நதி எம்பெடட் சொல்யுஷனில் வேலை செய்பவர்கள் என நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது...
ரேவதி வருபவர்களை வரவேற்பதும் மற்ற வேலைகளை கவனிப்பதுமாக இருந்தாள்...
அவளின் முகத்தில் சின்னதாக கவலை கோடுகள் இருந்தது! ஒரே மகனின் திருமணம் நல்ல விதமாக நடக்க வேண்டுமே என்ற டென்ஷனினால் வந்த கவலை!
திருமணத்திற்கு தயாராகி இருந்த நந்துவை பார்த்து நிஜமாகவே ‘ஆ’ என்று ஆச்சர்யத்தில் நின்றார்கள் அவளின் தோழிகள்.
“வாவ் நந்து, செம ப்ரீட்டியா இருக்கடி...”