(Reading time: 7 - 13 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

சரண்யா நிஷா கையை பிடித்து கேக்கை வெட்ட, மித்ரன் கைத்தட்டி பாட்டு பாடிக் கொண்டிருந்தான்...

   

மைத்ரேயி, தன் அம்மாவின் முகத்தில் வந்த பாவங்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

   

அவளின் மனதில் இருக்கும் எண்ணம் தெரிந்தால் அம்மா என்ன சொல்வார்களோ என்று மைத்ரேயிக்கு கவலையாக இருந்தது...

   

மித்ரனுக்கு சரண்யா மீது புது விதமான ஈடுபாடு இருப்பதாக மைத்ரேயிக்கு தோன்றியது... மற்றபடி சரண்யாவை பார்த்தாலே எரிந்து விழுந்துக் கொண்டிருந்தவன் திடீரென இப்படி தலைகீழாக மாற வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

   

ஆனால் இது அவளின் ஊகம் மட்டும் தான்...

   

மித்ரன், சரண்யா இருவரும் இரண்டு துருவங்கள் என்பதும் மைத்ரேயிக்கு தெரியும்...

   

ஆனால் ஒருவேளை அவளின் ஊகம் சரியாக இருந்தால்...???

   

அம்மாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

   

அந்தஸ்து வேற்றுமை மட்டும் என்றால் பரவாயில்லை... நான்கு வயது மகளுடன் இருக்கும் சரண்யாவை அம்மா ஏற்றுக் கொள்வார்களா???

   

கேள்விகளுடன் அம்மாவின் முக பாவனைகளை ஆராய்ந்தாள் மைத்ரேயி...

   

ஃபோட்டோக்களை பார்த்த நளினி, மைத்ரேயிடம் ஃபோனை கொடுத்து விட்டு,

   

“ஃபோட்டோஸ் நல்லாருக்கு மைத்தி... மித்ரனுக்கு கல்யாணம் ஆகி இப்படி அவன் குடும்பத்தோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ல??” என்றுக் கேட்டாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.