நளினியின் பேச்சில் இருந்த வருத்தம் புரிந்தாலும், மைத்ரேயிக்கு நளினி பேச்சைக் கேட்டு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது.
அதை காட்டிக் கொள்ளாமல்,
“ஆமாம்மா... நானும் அதை தான் நினைச்சேன்,” என்று பாதி உண்மையை மட்டும் சொன்னாள் அவள்...
✽✽✽
அந்த வாரத்தின் இறுதியில் வந்த சனிக்கிழமை முழு நாளுமே நிஷா மித்ரனை தேடி வரவே இல்லை...
பொதுவாக காலை பத்து மணிக்கே வருபவள் மாலை ஆறு மணிக்கு மேலும் வராமல் இருக்கவே, மித்ரன் நளினியிடம் கேட்டுப் பார்த்தான்...
“தெரியலைப்பா... உடம்பு ஏதாவது சரியில்லையோ என்னவோ...”
மித்ரனுக்கும் அதே கேள்வி வரவும், அணிந்திருந்த ஷார்ட்ஸை மாற்றி ட்ராக் பேன்ட் ஒன்றை அணிந்துக் கொண்டு சரண்யாவின் வீட்டை நோக்கி சென்றான்...
✽✽✽
சரண்யா காலை முதலே வீட்டு வேலை செய்வதும், ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பதுமாக தான் இருந்தாள்...
நிஷா அவளின் பிறந்த நாள் அன்று நடந்துக் கொண்டிருந்த விதம் அவளை ஒரு கலக்கு கலக்கி இருந்தது.
இந்த வீட்டில் இருப்பது அவளுக்கு வசதியாக இருந்தது என்பது என்னவோ உண்மை... ஆனால்