என சொல்ல அவளோ அவனை கேவலமாக பார்த்து முறைத்துவிட்டு சென்றுவிட தில்லைக்கே தன் மீதே கோபம் வந்தது
”என்னடா நீ, பக்குவமா பேசாம இப்படி பேசிட்டியே, போச்சி, இப்ப எப்படி அவளை சமாளிச்சி அனுப்பி வைக்கறது, என் எதிரிகளுக்கு மட்டும் எனக்கும் சம்யுக்தாவுக்கும் கல்யாணம் ஆச்சின்னு தெரிஞ்சது அவ்ளோதான், அவளை ஏதாவது செய்ய முடிவு எடுப்பாங்க, அதுக்குள்ள அவளை நான் பத்திரமா அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்” என நினைத்தவன் சம்யுக்தாவிடம் பேச வெளியே வந்தான், அங்கு அவள் இல்லை
”சம்யுக்தா சம்யுக்தா” என அழைத்தபடியே சுற்றி முற்றி அவளை தேடிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவன்
”சித்தா சித்தா” என மேல் இருந்தே அழைக்க அவனது அடியாட்களில் ஒருவனோ
”அண்ணா சித்தன் இல்லை”
”எங்க போயிருக்கான்”
“உங்க பாட்டி வீட்டுக்கு”
”அவன் ஏன் அங்க போனான்”
”பாட்டிகிட்டயிருந்து போன் மேல போன் வந்துச்சி, வேற வழியல்லாம போனான்”
”அவனை முதல்ல பிடிங்க, அவன் பாட்டியை பார்க்க கூடாது”
”அண்ணா அவன் காலையிலேயே போயிட்டான், இப்ப சாயங்காலம் ஆகுது”
”ப்ச் ஏன்டா இப்படி, பாட்டிக்கு ஏதாவது தெரிஞ்சா பிரச்சனையாயிடுமே”