(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”நல்லது அப்ப ஒண்ணு பண்ணுங்க, என் ஆளை கூட்டிக்கிட்டு போய் கார் வாங்கிடுங்க, பணத்தை நான் கொடுத்துடறேன்“

   

”சரிங்க சார்” என சொல்ல தில்லையும் தன் அடியாளிடம்

   

”ரூம்ல ஒரு பேக் இருக்கும், அதுல 2 கோடியிருக்கும் அதுல இருந்து தேவையான பணத்தை கொண்டு போய் சம்யுக்தாவுக்காக கார் வாங்கிடு”

   

”அண்ணா அவங்களை நிஜமாவே அனுப்பிடறியா”

   

”ஆமாம் ஏன் கேட்கற” என சந்தேகமாக கேட்க அவனோ

   

”ஆனா அவங்க போவாங்களா, இன்னும் நீ அவங்களுக்கு நியாயமே வழங்கலையே அண்ணா”

   

”அதுவா அது நேத்து நடந்த பிரச்சனையில அவள் பயந்துட்டா பாவம், அவளை அனுப்பிடலாம், அவளோட அப்பாவும் தேடுவாரு”

   

”ஆமாம்ணா விசயம் வந்துச்சி, அவரை ஆஸ்பிட்டல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்களாம், ஆஸ்பிட்டல்ல இருந்த நம்மாளு சொன்னான், அப்படியே அங்க இருந்த நம்மாளும் இங்க வந்துட்டான் அண்ணா“

   

”சரி விடு இன்னிக்கே சம்யுக்தாவை அனுப்பிடலாம், அதுக்கான ஏற்பாடுகளை செய் போ”

   

”சரிங்கண்ணா” என சொல்லியவன் தில்லை சொன்னது போலவே பணத்தை எடுத்துக் கொண்டு கார் டிரைவரை அழைத்துக் கொண்டு சென்று ஒரு மணி நேரத்தில் எரிந்து போன வண்டியை போலவே ஒரு புது காருடன் வந்து சேர்ந்தார்கள்.

   

இங்கு சம்யுக்தாவை தேடிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றான் தில்லை.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.