(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

அங்கு சம்யுக்தா நின்றுக் கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் சோகத்தை புரிந்துக் கொள்ள முடிந்த காரணத்தால் நேராக அவளிடம் சென்று தைரியமாக

   

”மன்னிச்சிடு சம்யுக்தா” என்றான் கைகூப்பி.

   

பிரபல தாதா தன்னிடம் கைகூப்பி 2-வது முறையாக மன்னிப்பு கேட்பது அவளுக்கு ஆச்சர்யமாக இல்லை ஆனால் இம்முறை அவனது மன்னிப்பில் சற்று உதறல் இருந்தது, குற்ற உணர்வில் அவனது கண்கள் அவளை காண முடியாமல் தவிர்த்தது, அவனும் சற்று தலை குனிந்திருந்தான். அதைக் கண்டு உண்மையில் அவன் தான் செய்த தவறுக்காகவே மன்னிப்பு கேட்பதாக எண்ணி

   

”மன்னிக்கறதால என்ன லாபம்” என சொல்ல அவனோ உடனே புரிந்துக் கொண்டு சட்டென அவளின் கழுத்தில் இருந்த தாலியை பிடித்தான். அவளோ அதிர்ந்தாள்

   

”நான் செஞ்ச தப்பை நானே சரி செய்றேன்” என அமைதியாக சொல்லிக் கொண்டே அந்த தாலியை கழட்ட முயல அவளோ கோபத்தில் அவனது கன்னத்தில் அறைந்தே விட்டாள். 

   

அந்த அறையை அவன் எதிர்பார்க்கவில்லை, 2வது முறையாக அவளிடம் அறைவாங்கினான்  இப்போது வெறும் தாலிக்காக தன்னை ஆவேசத்துடன் அறைந்தாளே என நினைத்தவன் திடுக்கிட்டு

   

”எதுக்கு இந்த கோபம்”

   

”தாலியை எதுக்காக கழட்டற”

   

”அதுக்காக அதோட எப்படி நீ ஊருக்குப் போவ“

   

”ஊருக்கா” என அதிர்ச்சியுடன் கேட்க அவனோ

   

”ஆமாம் உனக்காக புது கார் வாங்கிட்டு வரச் சொல்லி ஆட்களை அனுப்பியிருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில புது கார் வந்துடும், அதுல ஏறி நீ உன் வீட்டுக்குப் போயிடு, அப்ப இந்த தாலி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.