”எதுவும் ஆகாதுண்ணா நீ பாட்டியை நேரத்தோட பேசி சமாளிச்சிருந்தா, இவ்ளோ பிரச்சனை வந்திருக்குமா”
”சரி சம்யுக்தா எங்க“
”உங்க வீட்லதான் இருந்தாங்க“
”இப்ப இல்லையே”
”தெரியலைண்ணா”
”சரி அவளோட கார் டிரைவர் எங்க”
”சித்தன் வீட்ல இருக்கான்”
”அவனை கூப்பிடு” என சொல்ல சில நிமிடங்களில் சம்யுக்தாவின் கார் டிரைவர் வந்தார், தில்லையை கண்டதும் பவ்யமாக நின்றதோடு வணக்கம் வைத்தார்
”சம்யுக்தாவோட கார் எரிஞ்சி போயிடுச்சி, அதே போல ஒரு காரை விலைக்கு வாங்கிடுங்க, அப்படியே அவளை கூட்டிட்டு போயிடுங்க”
”சரிங்க சார் சின்னம்மா நல்லாயிருக்காங்களா”
”அவளுக்கென்ன ராணி மாதிரியிருக்கா, ஆமா நீங்க எப்படியிருக்கீங்க, நல்லாயிருக்கீங்களா, உங்களை வசதியா பார்த்துக்க சொல்லி சித்தன்கிட்ட சொன்னேனே, நல்லா பார்த்துக்கறானா இல்லையா”
”நல்லா பார்த்துக்கறாரு சார், உங்களை நினைச்சி நான் முதல்ல பயந்தேன் ஆனா, இப்ப பயமில்லை சித்தன் என்னை தன்னோட குடும்பத்தில ஒருத்தராவே பார்த்துக்கறாரு”