(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

  

“அப்புறம் ஏன் அவன் முகத்தை பார்த்துட்டு அலறலை?”

  

“அது அது... நான் சீரியஸா அவர் முகத்துல தாடி மீசை வரைஞ்சுட்டு இருந்தப்போ... அவர்... அவர் தூக்கத்துல இருந்து எழுந்துட்டார்...”

  

“ஐயையோ! தொலைஞ்சோம் போ! உன்னை திட்டி தீர்த்திருப்பானே??”

  

அஜயின் உதடுகள் சுதந்திரமாக இருந்தால் தானே அவன் திட்டுவதற்கு!!! விடிகாலையில் நடந்தது நினைவுக்கு வந்து ரோஹினியின் முகம் கன்றியது...

  

“ஹ்ம்ம்... திட்டினாரு...”

  

“நான் சொன்ன மாதிரி மூணு மணிக்கு மேல தானே போன?”

  

“ஹ்ம்ம்... இரண்டு மணி போல இருக்கும்...”

  

“ஏன் ரோ அவசரப் பட்ட? அவன் லேட்டா தூங்குவான்னு சொன்னேன்ல... நாலு மணி மாதிரி போயிருந்தேன்னா அவன் கல்லு மாதிரி தூங்கிட்டு இருந்திருப்பான்...”

  

“ம்ம்ம்...”

  

“சரி விடு, அடுத்து வேற ஏதாவது ப்ளான் செய்வோம்.”

  

“இன்னுமொரு தடவையா? வேண்டவே வேண்டாம்!”

  

“என்ன இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்க? சரி இதைப் பத்தி ஈவ்னிங் பேசுவோம்...”

  

சரி என்று தலை அசைத்து வைத்தாள் ரோஹினி!

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.