அவளின் பேச்சில், அசைவில் இருக்கும் மென்மை கலந்த நளினம்... ஆனாலும் அன்று அவனுடைய கையை ஈசியாக விளக்கி சென்ற அவளின் பலம்... இரண்டுமே அவனுக்கு பிடித்திருந்தது... அவனைப் போலவே... நீரும் நெருப்பும் கலந்த மிக்ஸர் இவள்...
மனசுக்குள் ஓடியதை பின்னே தள்ளி விட்டு அவளுக்கு பதில் சொன்னான்...
“பரவாயில்லை ரோஹினி. உனக்கு யார் அந்த ஐடியா கொடுத்திருப்பான்னு எனக்குத் தெரியும்...”
விஜயை தெரியாமல் மாட்டி விட்டு விட்டாளோ என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் ரோஹினி...
“இது ட்ரேட்மார்க் விஜய் வாலுத்தனம்ன்னு நல்லாவே தெரியும்... அவன் இதையே நிறைய பேருக்கு செஞ்சிருக்கான்...”
“ஓ... ஆனால் அவர் கிட்ட கோபப்படாதீங்க... நான் வருத்தப்பட்டேன்னு தான் அவர் ஐடியா கொடுத்தார்...”
“அவன் கிட்ட ஏன் கோபப்படுறேன்... அதான் என் கோபத்தை காட்ட நீ கிடைச்சிருக்கீயே... இனிமேல் கோபப் படுறது, ...................... எல்லாமே உன் கிட்ட தான்...”
அவன் ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ பாணியில் கோபப் படுறது’க்கு பக்கத்தில் சொல்லாமல் விட்டது என்னவாக இருக்கும் என்ற யோசனையில் ரோஹினியின் மனம் மீண்டும் புதிய தாளத்தில் டான்ஸ் ஆடத் தொடங்கியது...
அப்போது, ஒரு வழியாக சாரதா அங்கே வந்து சேர்ந்தாள்.
“அஜய், இட்லி ஆச்சே உனக்கு சீக்கிரமா பசிக்குமேன்னு நினைச்சேன்... அதே மாதிரி சீக்கிரம் வந்துட்ட... எல்லாம் ரெடியா இருக்கு... வந்து சாப்பிடு, வா...”
சாரதா மகனுக்கு கேட்டு கேட்டு பரிமாற, அஜய் ருசித்து சாப்பிடுவதை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தாள் ரோஹினி...