அஜய் முன்பு போல எரிந்து விழுந்தாலே பரவாயில்லை!!!!
அவள் கதவை விட்டு விலகிப் போகவும், வீட்டுக்குள் வந்தான் அஜய்!
“இந்தா உனக்காக வாங்கிட்டு வந்தேன்...”
‘எனக்கா’ என்ற கேள்வியுடன் அஜய் என்ன வாங்கி வந்தான் என்றுப் பார்த்தாள் ரோஹினி...
பல கலர்களில் குச்சி ஐஸ் மற்றும் ஒரு மை ஸ்டிக்!
அவள் அவனை நிமிர்ந்துப் பார்க்க, குறும்பாக சிரித்தான் அஜய்... அந்த சிரிப்பில் மென்மையாகி இருந்த அவனின் முகம் டிஜிட்டல் ஃபோட்டோ போஸ் போல அவளின் மனசுக்குள் அப்படியே பதிவானது...
“மை காலி ஆயிடுச்சுன்னு இன்னைக்கு காலைல கொடுத்த சர்ப்ரைஸ்... ஸ்வீட் சப்ரைசை நாளைக்கு கொடுக்க மறந்திரப் போற...”
அஜயின் பேச்சிலும் குறும்பு நிறைந்திருந்தது...
முன்பை விட பல பல மடங்கு இதய துடிப்பு அதிகமாகி விட...
“நான் அப்படி நடுராத்திரி வந்திருக்க கூடாது... அப்படி வரைஞ்சிருக்கவும் கூடாது... தப்பு தான்... எப்போ பாரு என்னை ஹர்ட் செய்ற மாதிரி ஏதாவது சொல்லிட்டே இருந்தீங்க... அது தான்... ம்ம்ம்... சாரி... மன்னிச்சுக்கோங்க...”
அவள் தட்டு தடுமாறி சொன்ன சாரியை ரசனையுடன் கேட்டுக் கொண்ட அஜய், மனதுக்குள் ஆச்சர்யப்பட்டான்...
இவள் ஏன் மற்ற பெண்களில் இருந்து எல்லா விதத்திலும் மாறுப்பட்டே இருக்கிறாள்...!!!