(Reading time: 21 - 42 minutes)

நீ சிரிமா. நல்லா சிரி. நீ ஏன் சிரிக்க மாட்ட.”

“இளா இளா போதும் என்னால சிரிக்க முடியலை” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தாள்.

இளவரசன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையை கண்ட இனியா திடீரென்று சிரிப்பை நிறுத்தி விட்டாள்.

“என்ன இளா இப்படி பார்க்கறீங்க. இது கோவில்”

“நான் என்னம்மா பண்ணேன். நீ சிரிச்சிட்டு இருந்த. நான் ஜஸ்ட் அதை பார்த்துட்டு இருந்தேன்”

“சரி சரி” என்று விட்டு டைமை பார்த்து விட்டு “ஐயய்யோ. என்ன இளா நீங்க. வேணும்னே இப்படி டைம் ஆக்கிட்டீங்க. இப்பவே ட்வெல் ஆகிடுச்சி.”

“ஹேய் இனியா அதான் டைம் ஆகிடுச்சி இல்ல. என் கூட ஒரு லஞ்ச் மட்டும் வந்து சாப்பிடு. அப்புறம் நானே உன்னை ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு போய் விடறேன். ப்ளீஸ்”

“அதெல்லாம் முடியாது போங்க. பர்ஸ்ட் நீங்க என்ன சொன்னீங்க. இப்ப வேணும்னே லேட் பண்ணீங்க இல்ல. நான் வர மாட்டேன். போங்க.”

“என்னடி இப்படி பண்ற. என் செல்லம்ல. ப்ளீஸ் ப்ளீஸ்”

“ஐயோ. இது கோவில் இளா.”

“அது எனக்கு தெரியுது. நீ வரேன்னு சொல்லு.”

“சரி சரி. போகலாம். முதல்ல இப்ப கிளம்பலாம் வாங்க.”

ன்ன சாபிடற இனியா. வெஜ் ஆர் நான் வெஜ்”

“ஐயய்யோ. அபச்சாரம் அபச்சாரம். இன்னைக்கு சனிக் கிழமை. நான் வெஜ் சாப்பிட கூடாது. எனக்கு மஷ்ரூம் ப்ரைட் ரைஸ்”

“என்னடி இது. சனிக்கிழமை நான் வெஜ் சாப்பிட மாட்டியா. அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் என்னையும் சாப்பிட விட மாட்டியா”

“ஹலோ சார். கல்யாணத்துக்கு அப்புறம் இல்லை. இப்போத்துல இருந்தே நீங்க சாப்பிட கூடாது”

“சரி. ரைட் விடு”     

“இளா அங்கவே எதாச்சும் ரெஸ்டாரண்ட் போயிருக்கலாம் இல்ல. எதுக்கு தாம்பரம் வரைக்கும் வரணும்”

“இது என்னோட பேவரட் ரெஸ்டாரண்ட். அதான்”

“ம்ம்ம். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்”

“போடி”

“என்ன நீங்க. இருந்தாலும் ஓவரா வாடி போடின்னு பேசறீங்க”

“எனக்கு அப்படி கூப்பிட பிடிச்சிருக்கு. அப்படி கூப்பிட்டா உன் மேல எனக்கு ஏதோ ரொம்ப உரிமை இருக்குன்ற மாதிரி ஒரு பீல்”

“இளா அத்தை ஒத்துப்பாங்க இல்ல”

“அதுல உனக்கு என்ன டவுட் மா. அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ். எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோச படுவாங்க. உடனே நம்ம கல்யாணம் நடக்கணும்ன்னு அடம் பிடிப்பாங்க. தெரியுமா”

“ம்ம்ம். அப்பாவும் ஒத்துப்பார் இல்ல”

“இப்ப நீ ஏன் இப்படி எல்லாம் உன்னை போட்டு குழப்பிக்கற. மாமா உன் மேல ரொம்ப அபெக்ஷன் வச்சிருக்காரு. சோ அவர் இதை கண்டிப்பா ஒத்துப்பாரு”

“ம்ம்ம்.”

“என்னடா.”

“இல்லை. எல்லாம் ஸ்மூத்தா போகுது இல்லை. அதான் பயமா இருக்கு”

“ஹேய் லூஸ் மாறி பீல் பண்ணாத. என்ன இப்படி எல்லாம் ஸில்லியா தின்க் பண்ற”

“சரி விடுங்க. லெட்ஸ் என்ஜாய்”

“ஹ்ம்ம். இப்ப தான் நீ குட் கேர்ள்”

“வவ்வ வவ்வ”

“ஹேய் செல்லம். நீ இப்ப தான் ரொம்ப அழகா இருக்க”

“கொழுப்பு. பார்த்துக்கறேன்”

“ஹேய் ஸ்வீட்டி. ஒரு சின்ன ரெக்வஸ்ட். எனக்கு ஒரு பேவர் பண்றியா”

“என்ன ரெக்வஸ்ட்ன்னு பர்ஸ்ட் சொல்லுங்க. தென் நான் அதை செய்யலாமா வேண்டாமான்னு யோசிக்கறேன்”

“ஹேய் ஹேய் ப்ளீஸ். எனக்காக ஒரு சின்ன விஷயம் செய்ய மாட்டியா. நீ பர்ஸ்ட் செய்யறேன்னு சொல்லு.”

“ம்ம்ம். இல்லையே. இது சரியில்லையே. இருந்தாலும் ஓகே. செய்யறேன். சொல்லுங்க”

“அது ஒன்னும் இல்லை. இவ்வளவு நேரம் என் கூட இருந்திட்ட இல்லை. மதியமும் லீவ் போட்டுடரியா.”

“அதானே பார்த்தேன். நோ வே. நான் ஒத்துக்கவே மாட்டேன்”

“ப்ளீஸ் டா. ஐ ஜஸ்ட் லைக் டு ஸ்பென்ட் டைம் வித் யூ”

“இல்ல இளா. ஹாஸ்பிடல் போகணும்.”

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்”

“சரி சரி ஓகே.”

“அதை ஏன் மா முகத்தை இப்படி வச்சிட்டு சொல்ற”

“சரி ஹாஸ்பிடல் லீவ் போடறேன். பட் என்ன பண்ண போறோம்”

“எங்கயாச்சும் போலாம் இனியா”

“எங்க போறதுன்னு பர்ஸ்ட் சொல்லுங்க.”

“மகாபலிபுரம். போலாமா. எனக்கு அந்த ப்ளேஸ் ரொம்ப பிடிக்கும்”

“ஹலோ டைம் என்னன்னு தெரியுமா. இதுக்கு அப்புறம் எல்லாம் அங்க போக முடியாது”

“ஹ்ம்ம். ஓகே. அப்ப பீச் போகலாம். க்ளைமேட்டும் நல்லா தான் இருக்கு”

“கண்டிப்பா போகனுமாப்பா”

“ஹேய் ப்ளீஸ் டா”

“ஹ்ம்ம் சரி ஓகே”

துக்கு பெசன்ட் நகர் பீச் வந்தோம். மெரினா போயிருக்கலாம் இல்ல”

“மெரினா கூட்டமா இருக்குமே” என்றான் மெதுவாக.

“என்ன சொன்னீங்க.”

“எனக்கு இங்க வர தான் பிடிக்கும். மெரீனா எப்பவுமே க்ரவ்டா இருக்கும். இங்க கொஞ்சம் அமைதியா இருக்கும். அதான்”

“ம்ம்ம்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.