(Reading time: 21 - 42 minutes)

ளவரசன் கடலையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

“என்ன சார். இப்படி அமைதியா இருக்கீங்க.”

“ஹேய் நல்ல க்ளைமேட். பீச்ல, பக்கத்துல பிடிச்ச பொண்ணு கூட இருந்தா என்ன தோணும்”

“என்ன தோணும்”

“என்னென்னவோ தோணும்”

“அடி வாங்க போற டா”

“என்னது டா வா”

“ஆமா. ஏன் சொல்ல கூடாதா.”

“எப்படியும் ப்யூசர்ல சொல்ல போற. இப்பவே சொல்லிக்க”

“ஹிஹிஹி”

“இனியா ஒரு பாட்டு பாடேன்”

“ஐயய்யோ. எனக்கு பாட்டு எல்லாம் பாட வராது.”

“பரவால்லமா. எனக்காக ஒரே ஒரு பாட்டு பாடு. ப்ளீஸ்”

“ம்ம்ம்”

கண்ணனுக்கு என்ன வேண்டும்                                 

கண்ணனுக்கு என்ன வேண்டும்

தினமும் உதிக்கும் பொன்மலரோ                                          

இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ                                  

உன்னை எண்ணி ஏங்கித் தவிக்கும்                                 

உள்ளம் எண்ணும் மலரோ                                        

சொல்லு கண்ணா சொல்லு கண்ணா

“ஹேய் பாட வராதுன்னு சொல்லிட்டு சூப்பரா பாடுற”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நம்மளுக்கு பிடிச்ச பாட்டு, அதுவும் நம்ம அடிக்கடி பாடுற பாட்டுன்னா ஓரளவுக்கு நல்லா தான் வரும். அதுக்காக எனக்கு பாட வரும்ன்னு எல்லாம் நம்பி வேற பாட சொன்னீங்கன்னா உங்க காதுக்கு என்னால கேரண்டி குடுக்க முடியாது. சொல்லிட்டேன்”

“சரி சரி”

“எனக்கு பாடறதை விட, பாட்டு கேட்கறது தான் ரொம்ப பிடிக்கும், என் பிரண்ட்ஸ் எல்லாரையும் பாட சொல்லி உயிரை வாங்குவேன். தெரியுமா”

“ம்ம்ம். நல்ல என்டர்டெய்ன்மன்ட் தான்”

“வவ்வ வவ்வ”

“இனியா. நாளைக்கு ஸாரி கட்டறியா”

“நோ வே. சேன்சே இல்லை.”

“ஹேய் எனக்காக டீ”

“இப்படியே எத்தனை விஷயம் தான் என்னை செய்ய வைப்பீங்க. அதெல்லாம் முடியாது”

“ஸாரி கட்டரதுல உனக்கு என்ன ப்ராப்லம்”

“என்ன ப்ராப்லம்னா எனக்கு ஸாரியே கட்ட தெரியாது”

இளவரசன் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.

“என்ன இளா”

“ஹேய் உனக்கு இன்னும் என்ன எல்லாம் தெரியாதுன்னு இப்பவே எனக்கு சொல்லிடு டீ”

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா”

“எஸ் டார்லிங்.”

“சுடி தான்ப்பா பெட்டெர். ஸாரி எல்லாம் கம்போர்ட்டாவே இருக்காது.”

“ம்ம்ம். நோ ப்ரோப்லம் மேடம். ஆக்சுவலி இது ஒரு நல்லதுக்கு தான். நான் உனக்கு சொல்லி தரேன் டா. நல்லா இருக்கும்ல”

“சீ சீ. நீங்க ரொம்ப மோசம்”

“போடீ. உனக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்லி தரேன்னு சொன்னது ஒரு தப்பா. யார் கிட்ட வேணும்னாலும் கேட்டு பாரு. இதை தப்புன்னே சொல்ல மாட்டாங்க”

இனியா கையில் இருந்தா ஹான்ட் பேகால் இளவரசனை அடித்தாள்.

“என்னடி. கல்யாணத்துக்கு அப்புறம் தான் அடி வாங்குவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். என் விசயத்துல என்ன, முன்னாடியே கிடைக்குது”

“வாய் ரொம்ப அதிகமா இருக்கு இல்ல. அதான்”

“ஓ. அப்படியா விஷயம். ஆனா என்னால வாயெல்லாம் குறைக்க முடியாதே. அப்ப எனக்கு டெய்லி அடி தானா”

இனியா கண் சிமிட்டினாள்.

“இளா நான் பாடினேன் இல்ல. நீங்க ஒரு சாங் பாடுங்க பாக்கலாம்”

“ம்ம்ம். ஓ எஸ். பாடலாமே. வெயிட் பண்ணு. யோசிச்சி பாடறேன்”

“டேக் யுவர் ஓன் டைம்”

“ஓகே. எனக்கு பிடிச்ச சாங் பாடறேன். அதுவும் உனக்காக, எனக்கு பிடிச்ச லைன்ஸ் மட்டும் பாடறேன்.”

“ஓகே. ஓகே. பாடுங்க”

"காஞ்சிப் பட்டு சேலை கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும்            

கன்னி பொண்ணே நின்னு கேளம்மா..

என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று

சேர்த்து வைத்த ஆசை சொல்லவா.. 

சேலை தான் ஓல்ட் ஆச்சி.. சுடிதாரும் போர் ஆச்சி.                    

நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு முட்டி தொடும் மிடியும் போட்டு       

கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு தினமும் அவளை நான் ரசிப்பேன்.

மாசத்துக்கு ரெண்டு தரம் பியுட்டி பார்ல கூட்டி போவேன்.        

ராத்திரியில் நைட்டியை போல் நானே தான் இருப்பேன்.

ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்.

இடுப்பில் கையை போடுவேன்.    

முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கிள்ளுவேன்.           

தூங்கி போனா சம்மதம்.. தோசை நானே ஊத்துவேன்.          

ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன்.

கோபப்பட்டு திட்டி விட்டு கொல்லப்பக்கம் போயி நின்னு

அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்ல நான் அழுவேன்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.