(Reading time: 21 - 42 minutes)

போனை வைத்த ஜோதி “இது என்னவோ எனக்கு சரியா படலை இனியா. நான் இருக்கற வரைக்கும் இந்த அத்தை இந்த பூஜையை பத்தி ஒரு வார்த்தை சொல்லலை. எனக்கு உன்னை தனியா அனுப்ப பிடிக்கலை. இரு நான் மாமா கிட்ட கேட்டுட்டு வரேன். நானும் வர முடியுதான்னு பார்க்கறேன்”

“இல்லைக்கா நீயே நேத்து நைட் ட்ராவல் பண்ணி இன்னைக்கு வந்திருக்க. திரும்ப எப்படிக்கா இன்னைக்கும் வருவ”

“அதெல்லாம் இருக்கட்டும் டீ. அதுக்காக உன்னை தனியா எல்லாம் அனுப்ப முடியாது.”

ஜோதி போனில் பேசி விட்டு வந்து “மாமா என்னையும் போக சொல்லிட்டார், நானும் வரேன்” என்றாள்.

இனியாவிற்கு தான் ஏதோ மனசே சரியில்லை. இளவரசனை பார்த்தாள்.

இளவரசனுக்கோ அவளை அனுப்பவே மனம் இல்லை. ஆனால் அவன் எப்படி போகாதே என்று கூறுவது.

இதில் அவன் அம்மா வேறு குல தெய்வத்துக்காக போங்க. மத்தவங்களை ஏன் பார்க்கறீங்க என்றார். எனவே அவனால் ஏதும் கூற இயலவில்லை.

போன் செய்து டிக்கெட் புக் செய்தான்.

பிறகு அனைவரும் சாப்பிட்டனர். இளவரசன் தானே இருவரையம் பஸ் ஏற்றி விடுவதாக கூறினான்.

கிளம்பும் நேரத்தில் என்ன நினைத்தானோ “பஸ்ல வேண்டாம். நானே கார்ல உங்களை கூட்டிட்டு போய் விடறேன்” என்றான்.

இனியாவிற்கோ ஆச்சரியம். ராஜலக்ஷ்மிக்கோ அதிர்ச்சி.

“நீ ஏன்ப்பா போற” என்றார் மகனிடம்.

“இல்லம்மா. இவங்களை தனியா அனுப்ப மனசில்லை. நானே கூட்டிட்டு போறேன் மா. நேரா விட்டுட்டு வந்துடறேன்”

“நீங்க ஏன் எங்களை விட்டுட்டு உடனே வரணும். எங்க கூட நீங்களும் பூஜைல கலந்துக்கோங்க” என்றாள் ஜோதி.

“அதெப்படிம்மா. இவனை யாருன்னு எல்லாரும் கேப்பாங்க. உண்மை தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும். எல்லா சொந்த காரங்களும் ஊர் புல்லா வந்திருப்பாங்க. அதெல்லாம் வேண்டாம்”

“இல்லை அத்தை. நான் சமாளிச்சிக்கறேன். என் வீட்டுக் காரரோட சொந்தம்ன்னு சொல்லிக்கறேன். நீங்க பயப்படாதீங்க. நான் பார்த்துக்கறேன்” என்று கூறி அந்த பயணத்தை உறுதி படுத்தினாள்.

“நானும் வரேன்” என்று கூறிய சந்துருவை அம்மாவை பார்த்துக் கொள்வதற்காக அவன் வீட்டில் இருப்பதே நல்லது என்று கூறி விட்டான் இளவரசன்.

பின்பு மூவரும் கிளம்பினர்.

இனியாவும் ஜோதியும் பின் புறம் அமர்ந்திருக்க இளவரசன் காரை ஓட்டினான்.

சிறிது நேரத்திலே நேற்றும் ட்ராவல் செய்த அசதியில் ஜோதி தூங்கி விட இளவரசன் இனியாவை முன்னே வந்து அமர சொன்னான்.

இனியாவும் முன்னே சென்று அமர்ந்தாள்.

இருவரும் மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர். பின்பு இனியாவும் தூங்கி விட்டாள்.

காலையில் ஜோதி விழிக்கும் போது இனியா முன்புறம் இருப்பதை கண்டாள்.

இவள் எப்போது முன்னே சென்று அமர்ந்தாள் என்று எண்ணிக் கொண்டாள். தங்கை விழித்ததற்கு பின்பு அதையே கேட்க “நீ சீக்கிரம் தூங்கிட்டக்கா. நீ நல்லா ப்ரீயா தூங்கறதுக்காக நான் முன்னே வந்துட்டேன்” என்றாள் சளைக்காமல்.

இளவரசன் இதை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான்.

ஜோதிக்கு ஓரளவுக்கு விவரம் புரிந்தது. ஆனால் அதை அவர்களே சொல்லட்டும் என்று எண்ணி விட்டு விட்டாள்.

வர்கள் காலை ஆறு மணிக்கெல்லாம் போய் சேர்ந்து விட்டனர். ஆனால் அதற்குள்ளே அவர்களின் அத்தை அங்கு இருந்தார்.

ஊரில் இனியாவின் தந்தைக்கென வீடு உள்ளது. அதனால் அவர்கள் காலையிலேயே அத்தை அங்கு இருப்பார் என்று எண்ணவில்லை.

அதிலும் கார் சத்தம் கேட்டு வெளியில் வந்தவர்கள் ஜோதி பின்னால் இருந்தும், இனியா முன்னால் அதுவும் இளவரசன் பக்கத்தில் இருந்து வந்ததை அவள் அத்தையால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

எனவே அவர் கேட்ட முதல் கேள்வி “இந்த பையன் யார்”

இதை கேட்ட எல்லோருமே அதிர்ந்தனர்.

ஜோதி அவள் பெற்றோரிடம் இளவரசன் வருவதை பற்றி ஏதும் கூறி இருக்கவில்லை.  எனவே அவர்களுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஜோதியே முதலில் சுதாரித்து “இவர் என் வீட்டுக்காரருக்கு தம்பி முறை” என்று கூறி வைத்தாள்.

எல்லோரும் அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

அவள் அத்தை அதற்கும் சளைக்காமல் “தம்பி முறைன்னா எப்படி” என்று கேள்வி எழுப்பினார்.

ஜோதி “என்ன அத்தை வந்ததும் வராததுமா கேள்வி. நானே முந்தா நேத்து நைட் இங்கிருந்து போய் இதோ நேத்து கிளம்பி வந்திருக்கேன். எவ்வளவு டையர்டா இருக்கேன் தெரியுமா” என்றவாறே உள்ளே சென்று விட்டாள்.

பின்பு அவள் அத்தை இனியாவின் கன்னத்தை பிடித்து கொஞ்ச ஆரம்பித்து விட்டார்.

இனியா குளிப்பதற்கு தண்ணி வைப்பதில் இருந்து அவளுக்கு உணவு பரிமாறுவது வரை எல்லாமே அவள் அத்தையே செய்தார்.

இனியாவிற்கு அதை எல்லாம் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவளுக்கு மூச்சு முட்டுவதை போல் ஆகி விட்டது.

ஒரு வழியாக அவள் அத்தை வீட்டிற்கு கிளம்பிய பிறகு தான் அவள் நிம்மதியானாள்.

அதன் பின்பு ஜோதி எல்லாவற்றையும் விவரமாக கூறினாள்.

இளவரசன் “நான் இப்பவே கிளம்பறேன் மாமா. அம்மா அப்பவே சொன்னாங்க. அங்க போய் என்ன சொல்வீங்கன்னு, ஏதோ தைரியத்துல வந்துட்டேன். இங்க வந்த உடனே உங்க தங்கச்சி என்னை யாருன்னு கேட்ட உடனே ஷாக் ஆகிட்டேன், நான் வந்திருக்க கூடாது. நான் கிளம்பறேன் மாமா” என்றான்.

“அட என்னப்பா. அதான் எப்படியோ சமாளிச்சிட்டோம் இல்லை. விடு. நீ இருந்து பூஜையை பார்க்க தான் போற. நாம எல்லாம் திரும்ப ஒன்னா தான் போறோம்” என்றார்.

பின்பு அனைவரும் சாப்பிட்ட பின்பு நைட் புல்லா கண் விழிச்சி கார் ஓட்டியதால் இளவரசனை ஓய்வெடுத்துக் கொள்ள சொனார்கள்.

இளவரசனும் சரியென்று மாடியில் தனக்கு கொடுத்த அறைக்கு சென்றான். அவனுக்கும் அசதியாக இருக்கவே சீக்கிரமே உறங்கி விட்டான்.

மதிய உணவிற்கு கூட அவன் எந்திரிக்கவில்லை.

தண்ணி மாறியதால் மதியத்திற்குள்ளாகவே இனியாவிற்கு கோல்ட் ஆகிவிட்டது. அவள் குரலே மாறி விட்டது.

ஏதேதோ மாத்திரையும் வாங்கி வந்து கொடுத்தும் ஒன்றும் சரியாக வில்லை.

பின்பு நான்கு மணி அளவில் வந்த உறவுக்கார பாட்டி மஞ்சளை சுட்டு அதை முகர சொன்னார். அப்படி செய்தால் சரியாகி விடும் என்று கூறினார்.

இனியாவால் அதை சிறிது நேரம் கூட செய்ய முடியவில்லை. கண்ணில் இருந்து நீர் வந்துக் கொண்டே இருந்ததுள். அந்த பாட்டியே அவளை அதட்டி மிரட்டி செய்ய வைத்துக் கொண்டிருந்தார்.

“அவளால் தான் முடியலையே சித்தி விட்டுடுங்க” என்று ராஜகோபால் பரிந்து கொண்டு வந்ததால் அவருக்கும் திட்டு விழுந்தது.

“பிள்ளைக்கு நல்லா ஆகணும்னு தானே சொல்றேன். அதுக்குள்ளே என்ன பரிஞ்சிகிட்டு வந்துடற. எல்லாரும் இங்கிருந்து போங்க. நான் பார்த்துக்கறேன்” என்று விட்டு அவரே இனியாவை அதை செய்ய வைத்தார்.

ஒரு வழியாக அதை செய்து முடித்த பின்பு தான் அந்த பாட்டி அங்கிருந்து நகர்ந்தார்.

இளவரசன் எழுந்து மணி பார்த்தான். மணி நாலரைக்கு மேல் ஆகி இருந்தது. ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே என்று நினைத்துக் கொண்டே கீழிறங்கி வந்தான்.

அவன் கீழிறங்கி வந்த போது இனியா ஹாலில் அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட இளவரசனோ அவளிடம் சென்று “இனியா என்னடா ஆச்சு. ஏன்டா அழற. யார் என்ன சொன்னா. சொல்லு. சொல்லு” என்று அவள் தோலை தொட்டு கேட்டான்.

இனியாவிற்கோ ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்.

இளவரசன் விடாமல் இதையே கேட்டுக் கொண்டிருந்தான்.

இனியாவின் பார்வை இளவரசனையும் தாண்டி பின்னால் சென்றது.

இளவரசன் எதையும் கவனிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு தருணத்தில் இதை உணர்ந்து அவன் சுற்றி பார்க்க அங்கு இனியாவின் தாய், தந்தை, ஜோதி, ஒரு பாட்டி, முக்கியமாக இனியாவின் அத்தை நின்றுக் கொண்டிருந்தனர்.

இளவரசன் இனியாவை விட்டு விட்டு அதிர்ந்து எழுந்தான்.   

தொடரும்

En Iniyavale - 16

En Iniyavale - 18

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.