(Reading time: 21 - 42 minutes)

னியா மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் பாடி முடிக்கவும்  அவள் கண்களில் நீர் நிறைத்திருந்தது.

“இளா ரொம்ப சூப்பர். நல்லா பாடனீங்க. நீங்க இவ்வளவு சூப்பரா பாடுவீங்கன்னு எனக்கு தெரியாம போச்சி.”

“அதுவும் அந்த லைன்ஸ் எல்லாமே சூப்பர் இல்ல. அதுவும் அந்த லாஸ்ட் லைன் ரொம்ப சூப்பர். என்னவோ அனுபவிச்சி பாடின மாதிரி இருந்துச்சி. அதே மாதிரி நடந்துப்பீங்களா”

“அட என்னம்மா. ஏதோ பாட்டு கேட்டியேன்னு பாடினா அதே மாதிரி நடந்துக்க சொல்ற. சோ சாட்”

“சீ போங்க.”

“இனியா இனியா. கண்டிப்பா இதுக்கு மேலவும் நடந்துப்பேன்.”

“சரி சரி வாங்க. வீட்டுக்கு போகலாம். லேட் ஆச்சி.”

“இந்த லேட் ஆச்சின்ற வார்த்தையை தான் நீ என் கிட்ட அதிகம் சொல்லிருப்பன்னு நினைக்கறேன்”

“சரி வாங்க போகலாம்”

ருவரும் திரும்ப ஒன்றாக வீட்டிற்குள் நுழைவதை கண்ட ராஜலக்ஷ்மிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

காலையிலிருந்து ஏதேதோ எண்ணி குழம்பி கொண்டிருந்தவர் அவர்கள் காலையில் ஏதோ சும்மா ப்ரண்ட்லியாக கூட விளையாடி இருக்கலாம். தான் தான் ஏதோ தவறாக எண்ணி இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணி இருந்தார். திரும்பவும் இருவரும் ஒன்றாக வருவதும், அதே சீண்டல்கள் அவர்களிடம் இருப்பதை பார்த்து தான் காலையில் நினைத்தது தான் சரி என்ற முடிவுக்கே திரும்ப வந்தார்.

இந்த விஷயத்தை வளர விடாமல் சீக்கிரம் பேசி விட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் மனதில் ஆசை வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அதை எப்படி பேசுவது என்று தான் தெரியவில்லை.

இனியா இங்கிருக்கும் வரை அதை பேச வேண்டாம் என முடிவெடுத்தார். அவருக்கு ஏற்கனவே மகள் இல்லையே என்ற குறை இருந்தது. இப்போது இனியாவையும் ஜோதியையும் பார்த்து பழகி தான் அந்த குறையை தீர்த்துக் கொள்வதாக எண்ணினார். எனவே அவரால் இனியாவிடம் இதை பற்றி பேச இயலாது என்று தோன்றியது. எனவே தன் மகனிடம் தான் இதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணினார்.

வீட்டிற்குள் வந்த இருவரும் ராஜலக்ஷ்மி சிலை போல் அமர்ந்திருப்பதை கண்டனர்.

இனியா தான் அவரிடம் வந்து “அத்தை அத்தை” என்று அழைத்தாள்.

“ஹான் சொல்லும்மா”

“என்ன அத்தை. நாங்க வந்தது கூட தெரியாம ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க.”

“ம்ம்ம். ஏதோ யோசனை. இரு. நான் உங்க ரெண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வரேன்”

இரவு உணவின் போது சந்துரு இருவரையும் கிண்டல் செய்து கொண்டே இருக்க இனியா குனிந்த தலை நிமிராமல் உணவுண்டாள்.

நேற்று வரை இந்த கிண்டல் எல்லாம் புரியாமல் இருந்த ராஜலக்ஷ்மிக்கு இப்போது புரிந்தது.

அப்படியென்றால் சந்துருவிற்கும் இதை பற்றி தெரிந்திருக்கிறது. அவனும் என்னிடம் சொல்லவில்லை. இதில் ஏதும் தவறில்லை என்று எண்ணி இருப்பான். ஆனால் இதில் உள்ள பிரச்சனைகள் எனக்கல்லவா தெரிகின்றது.

டுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இனியாவிற்கு விடுமுறை. ஆனால் இளவரசனுக்கோ நேற்று முடிக்க வேண்டிய வேலைகளே நிறைய இருந்ததால் அவன் செல்ல வேண்டியதாயிற்று.

மதிய உணவுக்கும் இளவரசன் வரவில்லை. இனியாவோ அவன் எப்போது வருவான் என்று எண்ணி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க நான்கு மணி அளவில் ஜோதி தான் வந்தாள்.

“என்னக்கா இன்னைக்கு தானே மேரேஜ். நீ அதுக்குள்ளே எப்படி வந்த. அம்மாவும் அப்பாவும் வந்துட்டாங்களா, நாளைக்கு தானே வரேன்னு சொன்னாங்க”

“இல்லடி. மாமாக்கு ஏதோ அவசர வேலைன்னு நாங்க நேத்து ரிசப்ஷன் மட்டும் அட்டென்ட் பண்ணிட்டு நைட்டே கிளம்பிட்டோம். காலைலயே வந்துட்டோம். அம்மாவும் அப்பாவும் நாளைக்கு தான் வருவாங்க.”

“ஓ. அப்படியா. சரிக்கா. அபி குட்டி எங்க”

“என் நாத்தனார் பசங்க வந்தாங்க. அவங்க கூட வீட்டுக்கு போயிருக்கா”

சிறிது நேரம் கழித்து இளவரசனும் வந்து சேர்ந்தான்.

எல்லாரும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

ஜோதி கிளம்பும் நேரத்தில் அவள் அப்பாவிடம் இருந்து இனியாவிற்கு போன் வந்தது.

“ஹலோ சொல்லுங்கப்பா. எப்ப கிளம்பறீங்க”

“அதான் சொல்ல கூப்பிட்டேன். நாங்க இப்ப கிளம்பலை. உனக்கு ரெண்டு நாள் லீவ் கிடைக்குமான்னு பாரும்மா. இங்க நம்ம குல தெய்வத்துக்கு பூஜை போடறாங்கலாம். நம்ம பங்காளிங்க எல்லாரும் குடும்பத்தோட ஊருக்கு வந்திருக்காங்க. நாங்களும் இங்க வந்துட்டோம். நீயும் கிளம்பி வா.”

“என்னப்பா. இப்படி சொல்றீங்க. திடீர்ன்னு நான் எப்படி கிளம்பி வரர்து”

“இல்லம்மா. இது நம்ம குல தெய்வ பூஜை. பெருசா சாமியை மண்ணுல வடிச்சி பூஜையை நல்ல விமர்சையா செய்யறாங்க. எனக்கு இப்ப தான் தெரியும். எல்லாரும் கல்யாண வயசுல பொண்ணை வச்சிருக்கீங்க. அந்த புள்ளைய வர சொல்லுங்கன்னு சொல்றாங்க. அதான்”

“சரிப்பா. நான் லீவ் கேட்டு பார்க்கறேன்”

“இல்லடா. நீ கண்டிப்பா வர”

“ம்ம். சரிப்பா. அக்காவும் இங்க தான் இருக்காங்க”

“அப்படியா. ஜோதி கிட்ட குடு”

“ஹலோ சொல்லுங்கப்பா, என்ன விஷயம்”

அவர் ஜோதியிடமும் எல்லா விவரத்தையும் கூறினார்.

ஜோதி “அப்பா அத்தை இனியாவை பொண்ணு கேட்டாங்க. அதனால தான் அவளை அங்க கல்யாணத்துக்கே கூட்டிட்டு போகலை. இப்ப என்னப்பா இப்படி சொல்றீங்க”

“நானும் அதான் மா யோசிச்சேன். இது குல தெய்வம். நாம ஊர விட்டு போயிட்டோம். இருந்தாலும் இதுல எல்லாம் கலந்துக்கணும். அதுவும் ரொம்ப விமர்சையா செய்யறாங்க. எல்லாரும் குடும்பத்தோட வந்திருக்காங்க. நீயும் தங்கச்சி கூட கிளம்பி வர முடியுமான்னு பாரும்மா. இளவரசனை டிக்கெட் எல்லாம் பார்த்து செய்ய சொல்லு. நீ வரர்தை பத்தி மட்டும் கொஞ்சம் மாப்பிளை கிட்ட கேட்டு எனக்கு சொல்லிடும்மா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.