(Reading time: 10 - 20 minutes)

சென்னையில் மனம் முழுவதும் குழப்பத்துடனே அமர்ந்திருந்த அப்பாவின் கைப்பேசி ஒலித்தது.

சிங்கப்பூரிலிருந்து வந்தது அந்த அழைப்பு. பேசப்பேச அவர் மனம் லேசாகி விட்டதுப்போலே தோன்றியது.

பேசி முடித்துவிட்டு சில நிமிடங்கள் யோசித்தப்படியே அமர்ந்திருந்தார். இது சரியாக நடந்து விடுமா?  நடந்து விட வேண்டுமென்றே தோன்றியது.

அப்படியானால் அர்ச்சனா சிங்கப்பூர் போக வேண்டுமே? ஒப்புக்கொள்வாளா?

"அவளிடம் இப்போது எதுவும் சொல்லவேண்டாம் . நேரம் வரும் போது சொல்லிக்கொள்ளலாம்." முடிவுடன் எழுந்தார் அப்பா.

மாலை அர்ச்சனாவும் ,வசந்தும் வீட்டிற்கு வந்தபோது மனோ வந்திருக்கவில்லை.காலையில் கிளம்பும் போது சாவி வாங்கிக்கொள்ள மறந்து விட்டிருந்தாள் அர்ச்சனா

"மனோ வரலைப்போலிருக்கே" என்றான் வசந்த். "சரி. உள்ளே வா அர்ச்சனா"

"இல்லை வேண்டாம்."

"சரி வேண்டாம். அப்ப சும்மா  அப்படியே ஒரு வாக் போலாமா?" சாதரணமாய் தான் கேட்டான் வசந்த்.

"சும்மா அப்படியே ஒரு வாக் போலாமா" அந்த வார்த்தைகள்  அவளுக்குள்ளே பல அதிர்வலைகளை செலுத்த சரேலென நிமிர்ந்தாள்.

அப்போதுதான் அவனுக்கும் சட்டென உரைத்தது. அவள் எண்ண ஓட்டங்கள் எங்கே சென்று நின்றிருக்கும் என்று புரிந்தது.

அவன் ஏதோ சொல்ல துவங்குவதற்குள் 'நான் வரேன் வசந்த்'  நகர்ந்துவிட்டிருந்தாள் அர்ச்சனா.

னோவின் வீட்டிற்குள் சென்று மாடிப்படியில் அமர்ந்தாள் அர்ச்சனா.

தன் வீட்டினுள் சென்று ஸோபாவில் படுத்துவிட்டிருந்தான் வசந்த்.

எத்தனை தவிர்த்து பார்த்தும் இருவரது மனமும் அந்த ஒரு புள்ளிக்குதான் திரும்ப, திரும்ப சென்றது.

"ஒரு வாக் போலாமா.........." அன்று கூட இப்படிதான் கேட்டான் வசந்த்.

ர்ச்சனாவுக்கு அவள் அப்பா மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்த நேரமது. மனோவின் அப்பா மூலமாகத்தான் வசந்தின் ஜாதகம் வந்திருந்தது. ஜாதகம் நன்றாகவே பொருந்தியிருந்தது.பெண் பார்க்கும் பேச்சு துவங்கியது.

மனோ இருந்தது பெங்களூரில். அர்ச்சனா சென்னையில். வசந்தோ டெல்லியில்.

மனோ, வசந்திடம் பெண் பார்ப்பதைப்பற்றி கேட்ட போது சொன்னான் வசந்த்

" எது? ஒரு எக்ஸிபிஷன் அரேன்ஜ் பண்ணி, ஒரு பெண்ணை நடுவுல நிக்க வெச்சு, ஏதாவது வித்தை காட்ட சொல்லி, எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்களே? அதுவா? அந்த ஆட்டத்துக்கு நான் வரலே.  பாவம் டா அந்த பொண்ணு. வேற ஏதாவது புதுசா யோசி"

இதை அப்படியே அவள் அப்பாவிடம் சொன்னான் மனோ. அதை கேட்டுகொண்டே இருந்தாள் அர்ச்சனா.

'போடா டேய்' என்றார் அவர்.' பொண்ணு பார்க்குறது வீட்டிலே தான் நடக்கணும். உன் friendக்கு இஷ்டம் இல்லைனா வேற மாப்பிள்ளை பார்ப்போம்.'

மௌனமாய் அமர்ந்திருந்த அர்ச்சனாவின் மனதில், வசந்தின் வார்த்தைகள் ,அவன் மீது சின்னதான ஒரு அபிமானத்தை விதைக்கத்தான் செய்தன.

யோசித்துக்கொண்டே இருந்தான் மனோ. ஏதாவது செய்ய வேண்டும். அது ஏனோ அர்ச்சனாவை வசந்துக்கு கொடுப்பதில் அத்தனை சந்தோஷம் மனோவிற்கு.

அந்த நாள் வந்தது. அது ஒரு அழகான நாளாய் இருந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு வேலைக்காக சென்னை வந்திருந்தான் வசந்த். அதே நேரத்தில் சென்னையில் இருந்தான் மனோ.

மாலை ஐந்து மணி. வெயில் சற்று தணிந்து மேகங்கள் சூழ துவங்கியிருந்தன.

அர்ச்சனாவை வீட்டுக்கு அழைத்துச்செல்ல அவள் அலுவலக வாசலில் காத்திருந்த மனோவின் மனதில் ஒரு மின்னல். வசந்தை அழைத்தான்

'நீ சென்னைலதானே இருக்கே?' என்றான் மனோ

'ஆமாம். ஐ ஐ டில'

'அங்கேயே இரு. இன்னும் கொஞ்ச நேரத்துலே அங்கே இருப்பேன்'

அடுத்த பன்னிரெண்டாவது நிமிடத்தில் ஐஐடி வாசலில் காத்திருந்தவனின் அருகில் சென்று காரை நிறுத்தினான் மனோ.

காரிலிருந்து இறங்கிய அர்ச்சனாவின் தோளை அணைத்தப்படி கேட்டான் மனோ

'எப்படிடா என் தங்கச்சி?'

சில நிமிடங்கள் எதுவுமே புரியவில்லை அர்ச்சனவுக்கும், வசந்துக்கும்'

'அர்ச்சனா, சார் தான் வசந்த். இவனை மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான் சீக்கிரம் ஓகே சொல்லிடு'

சின்னதான வியப்புடன் மெல்ல நிமிர்ந்து அவனைப்பார்த்தாள் அர்ச்சனா.

அப்போதுதான் புரிந்துக்கொண்டவனாய் கேட்டான் வசந்த் 'டேய் பொண்ணு பார்க்கிற மேட்டரா? இப்படியாடா நடு ரோட்டுல வெச்சு?

'நீதானே பா புதுசா யோசிக்க சொன்னே யோசிச்சுட்டோமில்ல '

'படுபாவி அதுக்காக இப்படியாடா? காலைலேருந்து வெயில சுத்தியிருக்கேன். ஒரு ஹின்டாவது கொடுத்திருந்தேன்னா, ஒரு perfumaaவது வாங்கி போட்டுட்டு வந்திருப்பேனேடா.'

தன்னை மறந்து மலர்ந்து சிரித்தவளின் முகத்தை சின்னதான புன்னகையுடன் ஆராய்ந்த படியே சொன்னான் வசந்த்

'இரு மகனே உனக்கும் காலம் வரும் உன்னை கைலி, பனியனோட பொண்ணு பார்க்க வைக்கிறேனா இல்லையா பாரு'

அழகாய் சிரித்தவளை பார்த்துக்கேட்டான் ' என்ன அர்ச்சனா, உங்க அண்ணனை கைலி பனியனோட நிக்க வெச்சுடுவோமா?

'கண்டிப்பா' சிரித்தாள் அர்ச்சனா.

எப்படியோ,எந்த நொடியிலோ  அவள் மனதுக்குள் நுழைந்துவிட்டிருந்தான் வசந்த்.

அவள் சிரிப்பில் இணைந்தபடியே சொன்னான் மனோ 'ரெண்டு பேரும் சும்மா அப்படியே போய் பேசிட்டு வாங்கடா'

'என்ன பேசணும்" என்றாள் அர்ச்சனா

'ஒண்ணுமே பேசவேண்டாம் . சும்மா அப்படியே ஒரு வாக் போலாமா?' என்றான் வசந்த்.

ஐ ஐ டி யின் உள்ளே நடந்தார்கள். இருபுறமும் மரங்கள். மரங்களிடையே நடந்தார்கள். எதுவுமே பேசிக்கொள்ளாமல் மௌனமாய் நடந்தார்கள். அப்போதுதான் கவனித்தான் வசந்த்.

ஒவ்வொரு அடியிலும் அவன் தாளத்திலேயே நடந்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. அவன் வலது காலை வைக்கும் போது அவளும் வலது காலை வைத்தாள். அவன் வேகம் கூட்டினால் அவளும் வேகம் கூட்டினாள். இருவரும் ஒரே தாளத்தில் நடக்க வேண்டுமென்று விரும்பியே செய்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

திருமண வாழ்க்கைக்கு இதைவிட வேறென்ன அடிப்படை வேண்டும்?  அவன் மனதை மொத்தமாய் பறித்து விட்டிருந்தாள் அர்ச்சனா

மழை தூற துவங்கியது. அவன் முகத்தை பார்த்து சொன்னாள் 'மழை வருதே'

'ம்' என்றான் ஒரே ஓட்டமா காருக்கு ஓடிடுவோமா? என் கையை பிடிச்சுக்கோ அர்ச்சனா அப்படியே ஓடிடலாம்.

மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை ஆராய்ந்தாள்

'என் கையை பிடிச்சுக்கோ அர்ச்சனா. இந்த ஜென்மத்துலே உன் கையை விடமாட்டேன்' என்றான் வசந்த்'

'கார் கிளம்பும் போது மனோவிடம் சொன்னான் வசந்த்,

'உங்க சித்தப்பாவை சீக்கிரம் நல்ல நாள் பார்க்க சொல்லுடா"

ழைய நினைவுகளிலிருந்து விடுபடவே விரும்பாதவனாய், இரவு முழுவதும் அதையே யோசித்துக்கொண்டிருந்தான் வசந்த். அதிலிருந்து விடுபட்டுவிடவே முயன்றுக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

இரவு மனோ வீட்டு மாடியில், படுக்கையில்,  புரண்டு புரண்டு படுத்தாள் அர்ச்சனா. ரொம்பவே முயற்சி செய்து உறக்கத்தை வரவழைத்துகொண்டாள்.

உறங்கியிருக்கவே மாட்டாள்.. அப்படி ஒரு கனவு வரும் என தெரிந்திருந்தால் உறங்கியிருக்கவே மாட்டாள். அதிகாலையில் வந்தது அந்தக்கனவு.

விக்கித்துபோய் எழுந்தாள் அர்ச்சனா   "அப்பா..........................!"

கனவா அது? பலித்து விடுமா அது? அது பலித்து விட்டால் என் சுவாசம் நீடிக்குமா?   

தொடரும்

Manathile oru paattu episode # 03

Manathile oru paattu episode # 05

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.