(Reading time: 12 - 23 minutes)

'ரொம்ப தவிக்கிறார். கொஞ்சம் நிமிர்ந்துதான் பாருங்களேன்' காதுக்குள் கிசுகிசுத்தாள் ஸ்வேதா.

'ஹையோ...........சும்மா இரேன் கொஞ்ச நேரம்' தலை குனிந்து சிரித்துக்கொண்டாள் அர்ச்சனா.

'இப்போது சாப்பிட வந்திருக்கவே கூடாது.........'

ஏதோ பெயருக்கு கொறித்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓட எத்தனித்து, அந்த மரத்தின் பின்னால் சென்ற போது சட்டென மாட்டிக்கொண்டாள் அவனிடத்தில்.

'ப்ளீஸ்.......வழிவிடுங்களேன்......' கண்களை நிமிர்த்தவே இல்லை அவள்.

'ம்' விடறேன். விடறேன்' என்று அவன் அவளை ரசித்தப்படியே மெல்ல குனிந்து அவள் முகத்துக்கு மிக அருகில் வந்து அவள் கண்களுக்குள் பார்த்த  போது, பனிமழையில் மொத்தமாய் நனைந்தது போலே சிலிர்த்து,தவித்து.............அப்படியே நழுவி ஓட அவள் எத்தனித்த போது, சட்டென்று அவள் கையை பற்றினான்.

'ப்ளீஸ்.......வசந்த்.....எனக்கு.....'  வார்த்தைகள் தடுமாற , தவித்தாள் அர்ச்சனா

இரு, இரு ,ஒரு நிமிஷம்.....ஒண்ணும் பண்ணிட மாட்டேன் உன்னை.

அவன் தட்டில் இருந்த ஜாமூனை எடுத்து அவளிடம் நீட்டினான்.

மெல்ல கையை அவள் நீட்ட......

அதை அவள் கையில் தராமல், அழகான புன்னகையுடன் அவளுக்கு ஊட்டிவிட்டான்.

அவள் வெட்கத்தை இன்னும் கொஞ்சம் ரசிக்கும் சந்தர்ப்பத்தை அவனுக்கு தந்துவிடாமல், அவன் கண்களைகூட நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து ஓடிய நொடியில், சட்டென மனோவின் மீது மோதிக்கொண்டாள்.

தலைக்குனிந்து சிரித்தபடி நகர முயன்ற போது... 'ஹேய் இரு இரு உன்னை ஒரு  photo எடுத்துக்கறேன்' என்றான் மனோ

இப்ப வேண்டாம் மனோ.............ப்ளீஸ்.........................

என் தங்கச்சி இவ்வளோ வெக்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை. photo எடுத்தே ஆகணும்.

அங்கே வந்த வசந்தையும், அவளையும் அவள் முகத்தில் ஓடிய வெட்க ரேகைகளையும் சேர்த்து பதித்துக்கொண்டது அவனது கைப்பேசி.

ஓடியே விட்டிருந்தாள் அர்ச்சனா.

சரியாய் அந்த நேரத்தில் அங்கே வந்து நின்றான் விவேக்.

'ஐ ம் டாக்டர் விவேக். அர்ச்சனா என் அத்தை பொண்ணு'  வசந்தை பார்த்தபடி அழுத்தமாய் சொன்னான் விவேக்.

மனோவின்னுளே சுருக்கென்றது.

'நான் அர்ச்சனாவின் மாமா மகன் என்றோ, ஸ்வேதாவின் அண்ணன் என்றோ சொல்ல வேண்டும்.  என்னதாம் அது?  'அர்ச்சனா என் அத்தை பொண்ணு'

'கிளாட் டு மீட் யூ'  மிஸ்டர் வசந்த்' அவனை நோக்கி கை நீட்டினான் விவேக்

'ப்ளேஷர் இஸ் மைன் மிஸ்டர் விவேக். நைஸ் மீட்டிங் யூ' கைகுலுக்கினான் வசந்த்.

சில நிமிடங்கள் வசந்தோடு பேசிகொண்டிருந்தவனின் கண்களில் என்ன  இருந்தது? பார்த்துக்கொண்டே இருந்தான் மனோ.

கடைசியில் 'சீக்கிரமே சிந்திப்போம் மிஸ்டர் வசந்த்.  அர்ச்சனா கல்யாணத்துலே....' என்றபடி நகர்ந்தான் விவேக்..

வாசலில் ஒலித்த அழைப்பு மணி .வசந்தை நிகழ் காலத்துக்கு இழுத்து வந்தது.

லெட்டர் எழுதியாச்சா? என்றபடியே உள்ளே வந்தான் விவேக்.

அவள் கையில் இருந்த காகிதத்தை வாங்கிப்பார்த்தவனின் முகம் மெல்ல மாறியது.

அந்த காகிதத்தின் நடுவில் பெரிய எழுத்துக்களில் எழுதி இருந்தாள் 'அப்பா'

'வாட் டஸ் திஸ் மீன்'? என்றான் விவேக்.

என் மனசுல அப்பாவை தவிர வேறே எந்த எண்ணமும் இல்லைன்னு அர்த்தம்.

அப்படியா அதையும் பார்க்கலாம். உன் கிட்டேயிருந்து லவ் லெட்டர் வாங்காம, நான் விட மாட்டேன்.

எனக்கு அப்பாவை பார்க்கணும் எழுந்தாள்

'பார்க்கலாம்  ரெண்டு நிமிஷம் உட்காரு' என்றான்

உட்காரவில்லை அவள் .

'ஆமாம். வசந்த் எப்படி இருக்கார் ? என்றான்.

எ.....எந்த...வசந்த்?

ஆங்...? பெங்களூர்லே உங்க அண்ணன் வீட்டு பக்கத்து வீட்லே இருக்காரே அந்த வசந்த்' என்றான் நிதானமாய்.   

தொடரும்

Manathile oru paattu episode # 05

Manathile oru paattu episode # 07

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.