(Reading time: 9 - 18 minutes)

'நிஜமாதான் அர்ச்சனா' என்றான் வசந்த். ரெண்டு நாள் முன்னாடி அவன் என் கிட்டே வந்து உன்னை பத்தி ஆஹா, ஓஹோன்னு பேசிட்டிருந்தான். எனக்கென்னமோ அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்னு தோணுது. பேசாம அவனை கல்யாணம் பண்ணிட்டு ஓடி போயிடு அர்ச்சனா. அவ்வளவுதான் எங்க எல்லாருக்கும் ஒரே நேரத்துலே ஆப்பு வெச்சிடலாம்.

தன்னை மறந்து சிரித்துவிட்டிருந்தாள் அர்ச்சனா.

'அப்படி நான் ஓடிப்போயிட்டா நீ என்ன பண்ணுவே?'

'என்ன பண்றது?. 'எங்கிருந்தாலும் வாழ்கன்னு' பாட வேண்டியது தான்.

'அய்யையோ. நீ பாடி யார் கேட்கறது? அழகாய் சிரித்தாள் அர்ச்சனா.

அவள் சிரிப்பில் இணைந்துக்கொண்டபடி மெல்ல சொன்னான் வசந்த் ' மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே அர்ச்சனா. நீ எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும்.

'தேங்க்ஸ் வசந்த்' என்றாள் அமைதியான குரலில். மனம் சற்று லேசானது போல் இருந்தது.

உனக்கு வலியெல்லாம் சரியாயிடுச்சா வசந்த்?

'வலியெல்லாம் எதுவுமே இல்லை. நான் நல்லா இருக்கேன். நீ நிம்மதியா தூங்கு அர்ச்சனா. எதை பத்தியும் யோசிக்காதே. '

'ம்' என்றாள் பெருமூச்சுடன்.

சரி. நான் போனை வெச்சிடவா? என்றான் வசந்த். அவளை சிரிக்க வைத்த திருப்தியில்.

அந்த நொடியில் மனதிற்குள் தோன்றிய ஏதோ ஒரு தவிப்புடன் சட்டென்று கேட்டாள் அர்ச்சனா 'ஒரு பத்து நிமிஷம் லயன்லே இருப்பியா வசந்த்?

எதுக்குடா?

'ப்ளீஸ் வசந்த் என்றாள் அர்ச்சனா 'ஏன்? எதுக்குனெல்லாம் கேட்காதே. ஒரு பத்து நிமிஷம் லயன்லே இரு. எதுவும் பேசவேண்டாம். அதுக்கப்புறம் நீயே கட் பண்ணிடு.'

சரி. ஓகே என்றான் வசந்த்.

குட் நைட் வசந்த் என்றவள் கைப்பேசியை தன் அருகில் வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

அவன் அவள் அருகிலேயே அமர்ந்திருப்பதை போல் தோன்றியது. அவன் விரல்கள் அவள் தலையை கோதி விடுவதை போல் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டாள் அர்ச்சனா. அவன் அருகாமையிலேயே இருப்பது போல் மனம் எங்கும் அமைதி பரவியது.

அடுத்த பத்து நிமிடங்கள் கழித்து அவன் அழைப்பை துண்டித்த போது அயர்ந்து உறங்கி விட்டிருந்தாள் அர்ச்சனா.

காலை வெயில் ஜன்னலின் வழியே  வந்து அவளை எழுப்பிய போது மணி எட்டை தாண்டி இருந்தது. ஸ்வேதா அருகில் இல்லை.

எப்படி இப்படி உறங்கிப்போனேன்? சட்டென படுக்கையிலிருந்து எழுந்தவளின் மனம் அப்பாவை நோக்கி சென்றது.

பல் தேய்த்து முகம் கழுவிக்கொண்டு வெளியில் வந்தபோது,கையில் பெட்டியுடன் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தார் அப்பா.

அங்கே சோபாவில் அமர்ந்திருந்தான் விவேக்.

எங்கேப்பா? ஊருக்கு கிளம்பறீங்களா? அவரை வியப்புடன் பார்த்தபடியே கேட்டாள் அர்ச்சனா.

பதில் சொல்லாமல் நகர்ந்தார் அப்பா.

அப்பா என்னாச்சுப்பா? என்றபடியே அவரை பின்தொடர்ந்து வந்தாள் அர்ச்சனா.

அங்கே அமர்ந்திருந்த விவேக்கை பார்த்து சொன்னார் அப்பா. 'நான் டெல்லி கிளம்பறேன். அங்கே ஐ ஐ டி லே பத்து நாள் confrence.

என்னப்பா திடீர்னு? என்றாள் அர்ச்சனா. அப்பா இப்படியெல்லாம் சென்றதே இல்லையே.. ஏன் என்னை விட்டு தூரத்தில் விலகி இருக்க வேண்டுமென்று செய்கிறாரா?

'அவ கிட்டே சொல்லிடுபா' என்றார் விவேக்கை பார்த்து. நான் அவ கிட்டே ஒரு வார்த்தை கூட பேச விரும்பலை. எனக்கு போன் பண்ண வேண்டாம்னு சொல்லிடு.

'அப்..பா. ப்ளீஸ்... பா'.

அவளை போய் சந்தோஷமா அந்த வசந்த் கூட குடும்பம் நடத்த சொல்லு. நான் எதுக்கும் குறுக்கே வரமாட்டேன்.

அப்பா நான் உங்க வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டேன் பா. அப்பா என்னை புரிஞ்சுக்கோங்க. அவள் குரல் தளர்ந்தது.

'ப்ளீஸ் அங்கிள்'. அவ உங்க பொண்ணு.  உங்க வார்த்தையை இனிமே மீற மாட்டா விடுங்க.'  என்றான் விவேக் அவரை சமாதான படுத்தும் விதமாய்.

அவன் குரலிலும், மனதிலும் நிஜமான அக்கறையே இருந்தது. ஆனால் அவன் ஏதோ நாடகம் ஆடுவதை போலே பற்றிக்கொண்டு வந்தது அர்ச்சனாவுக்கு.

'அப்பா' என்றபடியே கண்களில் நீர் அவர் கையை அர்ச்சனா பற்றிக்கொண்ட போது

சரேலென்று திரும்பினார் அப்பா. 'அவர் கண்களில் இருந்த கோபம் அர்ச்சனாவை அதிர்ச்சியில் உறைய செய்து விட்டிருந்தது.

'சும்மா வேஷம் போடாதே' என்றார் காரமான குரலில். இனிமே இந்த ஜென்மத்திலே உன் கூட பேச மாட்டேன்

'அப்பா. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்கப்பா' கெஞ்சிய அர்ச்சனாவின் குரலை கூட காதில் வாங்காமல், அர்ச்சனாவின் முகத்தை கூட பார்க்காமல் விறு விறுவென நடந்தார் அப்பா.

'சரி விடு அர்ச்சனா'. கொஞ்சம் கோபமா இருக்கார். அவரை சமாதான படுத்தி உன்கிட்டே கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு சரியா? கேட்டான் விவேக்.

எப்படியாவது அவள் புன்னகையை சம்பாதித்துவிட வேண்டும் என்பதே அவன் நோக்கமாயிருந்தது.

அவனை நிமிர்ந்து பார்க்க கூட விரும்பவில்லை அர்ச்சனா.

'அப்பா தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோங்கப்பா' அவள் மனம் திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தது.

ரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்தது. அப்பாவிடமிருந்து அழைப்பில்லை. அவள் அழைப்புகளுக்கும் பதிலில்லை. மனதால் சோர்ந்து போயிருந்தாள் அர்ச்சனா.

திங்கட்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்து விட்டிருந்தாள் அர்ச்சனா.

வசந்த் அன்று காலை விமானத்தில் டெல்லிக்கு கிளம்பி விட்டிருந்தான்.

மனோ வீட்டில் காலை உணவை தட்டில் போட்டு மனோவிடம் நீட்டினாள் ஸ்வேதா.

அதை சுவைத்தபடியே கேட்டான் மனோ ' ஆமாம் இப்போ கொஞ்ச நாளா இந்த டென்னிஸ்கெல்லாம் போறதில்லை போலிருக்கே நீ?'

'ஆமாம்' என்றாள் அவன் முகத்தை பார்த்தபடியே. இனிமே நீங்க போன்னு சொன்னாலும் ஒண்ணு ஒன்றரை வருஷத்துக்கு நான் போக மாட்டேன்.

'ஏன் அப்படி'? என்றான் மனோ அவள் வார்த்தைகளில் இருந்த அர்த்தம் புரியாமல்

'அதுவா ? அன்னைக்கு நீங்க என்னை விவாகரத்து பண்ணிடுவேன்னு சொன்னிங்களா, அதுதான் அப்படியே பயந்து போய் டென்னிஸ்சை விட்டுட்டேன்' என்றாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

வெரி குட். வெரி குட் அப்படியே மெயின்டேயின் பண்ணிக்கோ என்ற மனோ. வண்டியை கிளப்பிக்கொண்டு ஆபீஸுக்கு சென்று விட்டிருந்தான்'

அவன் வண்டி நகர்ந்தவுடன் சற்று சத்தமான குரலில் சொன்னாள் ஸ்வேதா 'போடா டியூப் லைட்'.

தொடரும்

Manathile oru paattu episode # 11

Manathile oru paattu episode # 13

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.