(Reading time: 14 - 27 minutes)

டுத்த சில நிமிடங்களில் அவள் வெளியே வர, வாசலில் பைக்குடன் காத்திருந்தான் வசந்த்.

எங்கே போறோம் வசந்த்? எல்லாரும் தேட போறாங்க.

ஷ்! என்றான் வசந்த் பேசாம வண்டியிலே ஏறு.

வண்டியில் ஏறி அமர்ந்தாள் அர்ச்சனா.

ம். இதுக்கு பேசாம நீ தனியா வேற வண்டியிலே வரலாம். ஒரு கிலோமீட்டர் தள்ளி உட்காருரா பார்.  இதுக்கெல்லாமாடி கிளாஸ் எடுக்க முடியும்?

சின்ன சிரிப்புடன் சற்று நெருங்கி அமர்ந்தாள் அர்ச்சனா.

சரேலென்று அவன் வண்டியை கிளப்பிய வேகத்தில் அவள் கைகள் அவன் தோள்களை தன்னால் பற்றிக்கொண்டன. வாகனங்களே இல்லாத டில்லியின் சாலையில் முழுவேகத்தில் வண்டியை செலுத்தினான் வசந்த்.

'பயம்....மா இருக்கு வசந்த். கொஞ்......சம் மெ....துவா போ.... ' அவள் உதடுகள்  உச்சரித்தாலும் அந்த பயணத்தை ரசிக்கவே செய்தாள் அர்ச்சனா.

இதயம் படபடத்தாலும் காற்றில் அப்படியே பறந்து போவதைப்போல், சுழலும் பூமியுடன் சேர்ந்து சுழல்வதைப்போல் ஓர் உணர்வு. இப்படி ஒரு பயணத்தை அர்ச்சனா அனுபவித்ததில்லை அர்ச்சனா.

சில நிமிட பயணத்திற்கு பிறகு வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தினான் வசந்த்.

வண்டியை விட்டு இறங்கியவள் அவள் அருகில் நின்றவனின் கண்களை இமைக்காமல் பார்த்தாள்.

எதுக்கு இங்கே வந்திருக்கோம்?

என் பொண்டாட்டி நாளைக்கு ஊருக்கு போயிடும். அதுக்குள்ளே சின்னதா  ஒரு ரொமான்ஸ் பண்ணலாமேன்னுதான்.

பைக்கின் மீது சாய்ந்து நின்ற படியே கேட்டாள் 'நடு ரோட்டிலேயா..?

உன்னை முதன் முதல்லே பார்த்ததே நடு ரோட்லே தானே. அப்புறம்  நடு ரோட்லே வெச்சு சின்னதா ஒரு ரொமான்ஸ் பண்ணா என்ன? பைக்கின் மீது இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு அவளை நெருங்கி நின்றான் வசந்த்.

எனக்கு பயம்மா இருக்கு வசந்த்.

எதுக்கு பயம்?

திடீர்னு போலீஸ் யாராவது வந்தாங்கன்னா நல்லா இருக்காது வசந்த்.

மலர்ந்து சிரித்தான் வசந்த். 'அப்போ போலீஸ் வரலேனா ரொமான்ஸ் ஒகே யா'

அவன் கண்களுக்கு மிக அருகில் அழகாய் வெட்கி சிரித்தவளின் முகத்தை இமைக்காமல் ரசித்தவன், அவள் நெற்றி மீது  படர்ந்திருந்த முடிகளை மெல்ல காற்றை ஊதி கலைத்தான்.

மயிலிறகால் வருடவதைப்போன்றதொரு உணர்வில் கண்களை மெல்ல மூடிக்கொண்டாள் அர்ச்சனா.

சில நொடிகள் அப்படியே நின்றவள் மெல்ல கண் திறந்தாள்.

புன்னகையுடன் அவளையே பார்த்தபடி நின்றிருந்தவனை ஏறிட்டாள்.

என்ன வசந்த்?

ம்? என்றவன் அவள் முகத்தை கண்களால் வருடியபடியே சொன்னான் வேண்டாம்டா. முதல்லே உன் கழுத்திலே தாலி ஏறட்டும். அதுக்கப்புறம் எல்லாம். இத்தனை நாள் பொறுத்துட்டோம். இன்னும் ஒரு மாசம் தானே. என்ன ஒகேயா?

சற்று வியந்து தான் போனாள் அர்ச்சனா.

அவளது அந்த நிமிடத்து உணர்வுகளை அந்த டைரியின் கடைசிப்பக்கம் அப்படியே சொல்லிக்கொண்டிருக்கிறது

'உன் கழுத்திலே தாலி ஏறட்டும் அதுக்கப்புறம் எல்லாம்' அவன் சொன்ன நிமிடம் அவனை அப்படியே என்னோடு சேர்த்தணைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது எனக்கு.

மனம் முழுவதும் அன்பும், கண்கள் முழுக்க நேசமும், பார்வையிலே கூட தவறு செய்து விடாத கண்ணியமுமாய் இப்படி ஒரு நேசம் எப்படி சாத்தியாமாகிறது வசந்துக்கு?

இதற்காகவே அவனுடன் வாழ வேண்டும். அவன் அன்பை திகட்ட திகட்ட அனுபவிக்க வேண்டும்.

வண்டியில் திரும்பிக்கொண்டிருந்த போது என்ன தோன்றியதோ அவனை தன்னோடு இறுக்கிக்கொண்டவள் அவன் முதுகில் முகம் புதைத்து தேம்ப துவங்கினாள்.

சற்று திகைத்து போனவனாய் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் வசந்த்.

ஹேய் என்னாச்சுடா?

'உன்னை விட்டு என்னாலே ஊருக்கு போக முடியாது. நான் இங்கேயே இருந்திடறேன் வசந்த் ப்ளீஸ்.' தேம்பினாள் அர்ச்சனா.

சரி இருந்திடு அவ்வளவுதானே. அதுக்கு ஏன்டா அழறே.

'எங்கப்பா அங்கே தனியா இருப்பாரே. அவர் பாவம்' கண்களில் கண்ணீர் வழிந்தது.

'அய்யய்ய. எல் கே ஜி பாப்பா மாதிரி அழுவுது பார் இது. ஷேம் ஷேம் பப்பி ஷேம்.'  சிரித்தான் வசந்த்.

சும்மா இரு வசந்த். நிஜமாவே ரொம்ப அழுகை வருது தேம்பினாள் அர்ச்சனா

ஹேய் என்னடா நீ.  உன்னை உங்கப்பா என் கையிலே பிடிச்சு குடுக்க வேண்டாமா?  அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு அர்ச்சனா. என்றான் வசந்த். '

அது மட்டுமில்லை. நீ சொன்ன மாதிரி உங்கப்பா ரொம்ப பாவம். அவருக்கும் உன்னை விட்டா யாரும் கிடையாது. அவர்கிட்டே பேசு அர்ச்சனா.. வேலையை விட்டு இங்கேயே வந்திட சொல்லு சரியா?.

மெல்ல தலையசைத்தவளின் கண்ணீரை துடைத்து சொன்னான் 'அதுக்கு மேலே உனக்கு என்னை பார்க்கணும்னா 'வசந்த்ன்னு' சத்தமா கூப்பிடு போதும், உடனே ஓடி வந்து உன்னை அப்படியே தூக்கிட்டு வந்திடறேன் சரியா?' என்றபடி சிரித்தவனின் சிரிப்பில் இணைந்துக்கொண்டபடியே கண்ணீரை துடைத்துக்கொண்டாள் அர்ச்சனா.

அந்த டைரி வரிகளும், பழைய நினைவுகளும் தந்த தாக்கத்திலிருந்து வெளி வர முடியாமல், மனதை திசை திருப்ப செய்த எந்த முயற்சியும் பயனளிக்காமல் தவித்துக்கொண்டிருந்தான் வசந்த்.

இத்தனை நாட்கள் கழித்து அவளை நேருக்கு நேராய் பார்த்த போது கூட மனம் இத்தனை அலைபாய வில்லை என்றே தோன்றியது. இந்த இரண்டு நாட்களாய் அவள் நினைவுகள் ஏன் என்னை இவ்வளவு அலைகழிக்கின்றன?

தன்னை மறந்து வாய் விட்டு சொன்னான் வசந்த். 'வந்திடு அர்ச்சனா. என்கிட்டே வந்திடு. நான் உன்னை கண்ணுக்குள்ளே வெச்சு பார்த்துக்கறேன்'

அந்த நிமிடத்தில் சரியாய் அந்த நிமிடத்தில் ஒலித்தது அவன் கைப்பேசி.

சாந்தினி அழைத்த நிமிடத்திலிருந்து முயன்றுக்கொண்டிருந்த அர்ச்சனாவுக்கு அப்போது தான் இணைப்பு கிடைத்தது.

'அர்ச்சனா' என்று ஒளிர்ந்தது திரை.

அந்த நொடியில் அவள் அழைப்பை எதிர்பார்க்காதவனாய் சற்று திகைத்து வியந்து போனான் வசந்த்.

தொடரும்

Manathile oru paattu episode # 15

Manathile oru paattu episode # 17

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.