(Reading time: 37 - 74 minutes)

 

வேறெதுக்கு எனக்கு தூக்கம் வருது நீங்க உங்க மாநாட்டை முடிப்பிங்களா இல்லையானு தான்...” அவன் பரிதாபமாக கூற, இருவருக்கும் சிரிப்பாக இருந்தது. ஒருவழியாக எழுந்து உறங்க சென்றனர் மூவரும். ஏதோ நியாபகம் வந்தவனாய் “ஹே அஸ்வத் எப்படி ஸ்டேஷன் வருவானாம்?” என்று பொறுப்பாக வினவினான் அர்ஜுன். அதற்கு அஹல்யா பதில் தர வாய்திறக்க, மெத்தையை சுத்தம் செய்துக்கொண்டிருந்த அனு இலகுவாக, “காலேஜ் பக்கத்தில  தானே அண்ணா ஸ்டேஷன் இருக்கு,நேரா அங்க வந்துடுறதாக சொன்னான் அண்ணா..” என்று பதில் தந்து தன் வேலையில் குறியாக இருந்தாள்.

இவள் பதில் தர, இருவரும் ரகசியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், இருவரிடமும் இருந்து பதில் வராமல் போக, திரும்பி பார்த்தாள், அஹல்யா கிண்டலாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது பார்வை புரிந்துப் போக, “இல்லை அண்ணி உங்களை காலைல எழுப்பிவிட சொல்லி என்கிட்ட சொல்லிருந்தான் அதுனால தெரியும்..” என்று மழுப்பலாக பதில் தந்தாள் அனு...

அதற்கும் சளைக்காமல் “என்னை எழுப்பிவிட சொன்னானா இல்லை உன்னை எழுப்பிவிட சொன்னானா?” என்று கண்ணடித்து கிண்டல் செய்தாள் அவள் அண்ணி... லேசாக வெட்கம் வர அதை மறைக்க, “அச்சோ அண்ணி நீங்க இன்னும் பால் குடிக்கலையே நான் போய் எடுத்திட்டு வரேன்” என்று ஓடிசென்றுவிட்டாள் அனு. அவள் சென்றதும் இருவரும் சிரித்துகொள்ள, அர்ஜுனை பார்த்து அஹல்யா கேட்டாள், “கொஞ்சமாவது பொறுப்பான அண்ணனை போல் கண்டிக்குரிங்களா நீங்க, ஒரே காலேஜ்ல வேற இருக்காங்க” என்று வேண்டும் என்றே வம்புக்கு இழுத்தாள் அஹல்யா. அவளை நேராக பார்த்த அர்ஜுன் “என் மச்சானப் பத்தி எனக்கு தெரியும் லியா அவனை மாதிரி தேடினாலும் கிடைக்காது. எல்லாம் நல்லபடியாதான் நடக்குது நீ முதல மாத்திரையை போடு” என்று எப்போதும் போல் அமைதியாக மாறாத முறுவலோடு கூறினான். அவன் கூறிய வார்த்தைகள் எல்லாம் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது அஹல்யாவிற்கு... தன் தங்கைகாக பரிந்து பேசுவான் என்று எதிர்பார்த்தாள் ஆனால் அவனோ அஸ்வத்தை பெருமையாக கூறி மனதை குளிர செய்துவிட்டான். இதை அனைத்தையும் அறைக்கு வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த அனுவிற்கு வானிற்கும் பூமிக்கும் குதிக்காத குறைதான். எல்லா ஆட்டத்தையும் வெளியே போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல் அமைதியாக அறைக்குள் வந்து பால்தந்துவிட்டு உறங்கிவிட்டாள் அனு.

“.... வண்டி எண் 583952 திருவண்ணாமலை போகும் ரயில் இன்னும் 5 நிமிடத்தில் platform நம்பர் 3 இருந்து புறப்பட இருக்கிறது...” என்று அறிவிப்பு வந்தது. அறிவிப்பை கேட்டதும் அஹல்யாவிற்கு இன்னும் ரயில் நிலையத்திற்கு வராத தன் தம்பியை நினைத்து கோவமாக வந்தது. அடுத்து அடுத்து கைபேசிக்கு அழைத்தும் அவன் எடுக்காமல் இருக்க, அஹல்யாவிற்கு எருச்சளாக இருந்தது. அவள் முகம் போகும் போக்கைவைத்தே அர்ஜுன் அவள் நிலையை புரிந்து கொள்ள, அவள் தோள் அனைத்து, “தேவையில்லாம டென்ஷன் ஆகாத லியா, அஸ்வத் இப்போ வந்திடுவான். நான் இப்பதான் பேசினேன். பக்கத்தில வந்திட்டதாக சொன்னான்.” அவன் கூறியதை கேட்டதும் மேலும் கோவம் வந்தது அவளுக்கு, “அது என்ன நான் பண்ணால் மட்டும் எடுக்க மாட்டிங்குறான் நீங்க பண்ண உடனே எடுத்திடுறான்.”

“ஆமாம் நீ சும்மாவே திட்டுவ, இப்போ இன்னும் நிறைய திட்டுவன்னு உன் காலை அட்டென்ட் பண்ணலை” அவன் கூறியது நிஜம் தான் என்பதால் எதுவும் பேசாமல் வாய் மூடிக்கொண்டாள். அப்போது தான் அனு அங்கில்லாததை உணர்ந்து தேடினாள். அதேநேரம் தன் கைபேசிசை பார்த்து ஏதோ முனுமுனுத்துக்கொண்டே வந்தாள் அனு. அவளது நிலை அஹல்யாவிற்கு புரிந்து போக எதுவும் தெரியாதவள் போல் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அண்ணி”

“....”

“அண்ணி....”

“ம்ம்ம்ம் என்ன அனு?”

“அஸ்வத் உங்கள்ட்ட பேசினானா? எங்க இருக்கானாம்? ட்ரைன் கிளம்பபோகுது” என்று வருத்ததுடனே கூறினாள். அஹல்யாவிற்கு தான் அனுவை சீண்டுவது மிகவும் பிடித்தம் ஆயிற்றே. “தெரியலையே அனு, அவன் வந்தா வரான் இல்லாட்டி தனியா பஸ்ல வரட்டும் விடு” என்று கண்டுகொள்ளாதது போல் முகத்தை திருப்பிக்கொண்டாள். அனுவிற்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாக எதிர்புறம் இருந்த ஜன்னல் அருகில் அமர்ந்துக்கொண்டாள். சங்கும் ஊதி மெதுவாக ரயில் கிளம்பவும் ஆரம்பித்துவிட்டது. அனு வைத்தகண்ணை எடுக்காமல் அஸ்வத் வருகிறானா என்றே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஹல்யா என்னதான் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் வெளியே எட்டி பார்த்துக்கொண்டேதான் இருந்தாள். அனுவையும் அஹல்யாவையும் மாறி மாறி பார்த்தவன். “ஹே அவள் தான் பார்க்குறாள அப்பறம் என்ன!? நீ உன் புருஷனை கொஞ்சம் கவனிடி” என்று அவளது டென்ஷன் ஏறாமல் பார்த்துக்கொண்டான். என்னதான் அந்த நேரத்திற்கு அது தேவையில்லாத பேச்சாக இருந்தாலும் லியாவின் மனம் இளகியது ஒரு புன்முறுவலுடன்.

அஸ்வத் பின்னால் ஒரு பையை மாட்டிக்கொண்டு ரயிலை நோக்கி ஓடிவர, அவன் ஓட்டத்திற்கு ஏத்தாற்போல் சிகை அழகாக ஆடியது, ஒருகையால் அதை பின்னால் நகுத்தியவாறே வருபவனை கண்ணிமைக்காமல் பார்த்தவளின் முகம் முதலில் மலர்ந்தாலும் உடனேயே கண்டுகொள்ளாதது போல் மாறியது. அவள் ஜன்னல் புறம் இருந்து முகத்தை திருப்பிகொண்டதுமே மற்ற இருவருக்கும் புரிந்து போனது அஸ்வத் வந்துவிட்டான் என்று. ரயில் பெரிதாக ஒன்றும் சென்றுவிடவில்லை என்றாலும் கொஞ்சம் பந்தா காட்டிக்கொள்ளவே மூச்சுவாங்கியது போல் வந்து நின்றான் அவன். அவனை இயல்பாக பார்த்த இருவரும், “டேய் ஓவரா சீன் போடாத ரயில் இப்பதான் நகுருது...” என்று கிண்டல் செய்தாள் அஹல்யா.

அவன் அடடே உஷாரா இருக்காங்களே என்று நினைத்துக்கொண்டு அசடுவழிய, அஹல்யாவே தொடர்ந்தாள், “கடைசி நேரம் வரைக்கும் ஏன் தூங்கனும்? இப்படி ஏன் ஓடிவரனும்? மனசுல பெரிய ஹீரோனு நினைப்பு...” என்று தொடர்ந்து கிண்டல் செய்தாள்.

“பின்ன இல்லையா??? ஹீரோயின் வேற உள்ள இருந்து என்ன எட்டி பார்க்கும் போது எப்படி மெதுவா நடந்து வரது?” என்று லேசாக கண்கள் அனுவை வருடி வந்தது. அஹல்யாவின் கண்களும் அப்போது அனுவைதான் தழுவி வந்தது. அவன் உள்ளே நுழைந்ததில் இருந்து புத்தகம் படிப்பது போல் கையில் இருக்கும் புத்தகம் பார்த்தவளின் இதழ்கள் ஒரு நொடி முறுவலை தழுவி சென்றது அந்த வாக்கியத்தில்... இருப்பினும் தன் நடிப்பை தொடர்ந்தாள் அனு.

அதை கண்டவுடன், “ச்சே ச்சே நீ நினைக்குற மாதிரிலாம் இல்லக்கா, பக்கத்து compartmentல ஒரு சூப்பர் figure வெளில எட்டி என்ன பாத்துட்டே நின்னுச்சா அதான் கொஞ்சம் சீன் போட்டேன். ச்சே என்ன பொண்ணுக்கா அவ, அவ்வளவு அழகா இருந்தாள்” என்று அனுவை ஓரகண்ணால் பார்த்தவாறே கூறினான் அஸ்வத். இவனது சைகையை புரிந்து கொண்ட அஹல்யாவும் “அப்படியாடா அவ்வளவு அழகா” என்று வேண்டும் என்று வம்பிழுத்தாள். என்னதான் இதெல்லாம் வெறுப்பேற்றும் விதம் என்று மூளை கூறினாலும் மனம் கேட்குமா என்ன? இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த அனுவிற்கு எருச்சளாக இருந்தது. புத்தகத்தை மேலே தூக்கி முகத்தை மறைத்துக்கொண்டு மீண்டும் படிப்பது போல் காட்டிக்கொண்டாள். அதை பார்த்த இருவருக்குமே சிரிப்பாக இருந்தது. மீண்டும அவளை சீண்ட நினைத்து அவள் அருகில் அமர்ந்தவன்.

“ஹே அனு... என்ன புக் படிக்குற?”

“ஏன் பார்த்தா தெரியலையா?”

“தெரியுது.... ஆனா என்ன கதைன்னு தெரியாதே அதான் கேட்டேன். என்ன கதை அனு?” என்று ஒன்றும் நடவாதது போல் இலகுவாக பேசினான். அனுவிற்கு கோவம் குறையாமல் போக, “எனக்கு தூக்கம் வருது” என்று கூறி புத்தகத்தை அவன் அருகிலேயே வைத்துவிட்டு மேல் பெர்த்தில் ஏறி படுத்துக்கொண்டாள்.4 பேர் வசதியாக வருவதற்காக sleeping பெர்த் புக் செய்திருந்தான் அர்ஜுன். அவள் செய்வதை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. விடியற்காலை எழுந்ததின் தாக்கமாக கண்கள் சொருக, அர்ஜுன், அஹல்யா, அனு மூவரும் உறங்கி போனனர். வெகுநேரம் புரண்டு படுத்தவன், என்னதான் பண்ணுகிறாள் என்று பார்க்கவே எழுந்து பார்த்தான். அனு மறுபுறம் திரும்பி படுத்திருக்க, திரும்பி மற்றவரை பார்த்துவிட்டு மெதுவாக கையில் கூசிவிட்டான் அஸ்வத். தூக்கம் இடைப்பட அவன் எதிர்பார்த்தது போல அவன் புறம் திரும்பிப்படுத்தாள் அனு. ஆனால் அவன் எதிர்பார்க்காததும் நடந்தது. அவள் சிறுபிள்ளை போல் விரல் சுப்பிக்கொண்டு படுத்திருந்தாள் அதை பார்த்தவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. சத்தம் போட்டால் எழுந்து விடுவாள் என்று மெதுவாக தன் கைபேசி எடுத்து அழகாக குழந்தை போல் உறங்கும் அவளை தன் இதயத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டது போல் தன் கைபேசியிலும் எடுத்துக்கொண்டான். பத்திரமாக எடுத்துக்கொண்டவன், அவள் முகத்தில் இருக்கும் மாறாத கோவமும், காற்றில் முகத்தில் விழுந்த முடியும், விரல் சுப்பும் அப்பாவித்தனமும் ஒரு குழந்தையை கண்டால் கொஞ்ச தோன்றுவது போல் மனதில் அவளையும் கொஞ்ச ஆவல் எழுந்தது. மனதை பெரிதும் அமைதிபடுத்திக்கொண்டு அவள் முடியை மட்டும் விலக்கிவிட்டான். அப்போது தான் கண்டான் அவள் கண்களில் இருந்து வடிந்த கண்ணீரின் கோட்டினை, கண்டவன் கொஞ்சம் அதிர்ந்து போக, தான் சீண்டியதால் தான் அழுதிருக்கிறாள் என்று உரைத்தது. தன்னை ஒரு பேச்சிற்காக கூட வேறு ஒரு பெண்ணோடு சேர்த்து யோசிக்க முடியாமல் அழுதிருக்கிறாள் என்று தோன்ற ஒருவித இதமான உணர்வே மனதில் பரவியது. தானாக புன்முறுவல் பூக்க, அவளை மனதில் செல்லமாக கொஞ்சி காற்றில் தன் முத்தத்தை அவளுக்கு அனுப்பினான். சரியான தூதுவன் போல் காற்றோடு கலந்த முத்தம் அவளது நெற்றியில் பதித்து கடமையை சரியாக செய்தது.     

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.