(Reading time: 37 - 74 minutes)

 

மாப்பிள்ளை பற்றி சொல்லவா வேண்டும் அனைவருக்கும் முன் எழுந்தாயிற்று, அன்று திருமணம் என்ற உற்சாகம் மனம் முழுவதும் சுகமாக இருக்க, கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து நம்பமுடியாமல் சிரித்துக்கொண்டான். மனதிற்கு பிடித்த பெண்ணை கட்டிக்கொள்ள போகும் தருணம் மனதிற்கு கசக்குமா என்ன? மணமகன் தோழர்களை தொல்லை செய்யாமல் அமைதியாக இருந்தான். நவீன் பேசாமல் இருந்தால் தானே வித்தியாசம், மூவரும் சேர்ந்து ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். “இப்போ இருந்தே பேசாம இருக்க பலகிக்குரியா மச்சா? ஆசைப்பட்டதை பேசிக்கோடா” என்று நக்கல் செய்தான் அர்ஜுன்.

“இப்போ என்ன சொல்ல வர அர்ஜுன், அஹல்யா உன்னை பேசவே விட மாட்டிங்குறாள்னா???” என்று கண்ணடித்து கிண்டல் செய்தான் நவீன்.

“ஐயோ ஏன்டா இல்லாததை பொல்லாததை சொல்லுற??” என்று அஸ்வத்தை பார்த்து இல்லை என்பது போல் தலையாட்டினான் அர்ஜுன்.

அவனது செய்கை சிரிப்புவர “நீங்க ஏன் மாமா பயப்புடுரிங்க அதுதான் உண்மைன்னு எனக்கே தெரியுமே..” என்று அர்ஜுனுக்கு பரிந்து பேசினான் அன்பு மச்சான்.

இப்படியெல்லாம் கிண்டல் செய்வதுதான் நிரஞ்ஜனுக்கு வராதே.. எனவே அமைதியாக பார்த்துக்கொண்டும் அவ்வப்போது நவீனுக்கு பரிந்து பேசிக்கொண்டும் இருந்தான். நம்ம குரூப்ல அமைதியின் சிகரம்டா இவன் என்று கிண்டல் செய்தான் நவீன்.

ணப்பெண்ணை புகைப்படம் எடுத்துவிட்டு மாப்பிள்ளையை புகைப்படம் எடுக்க வந்துவிட்டார், புகைப்படக்காரர். எல்லா புகைப்படங்களும் முடிந்ததும். வருசையாக காரில் ஏறினர் அனைவரும். திருமணத்திற்காக வந்திருந்த சில உறவினர்கள் எல்லாம் ஏற்பாடு செய்திருந்த van யில் முன்னே சென்று தேவையானவற்றை செய்துகொடுக்க, மணமக்களின் பெற்றோரும் முன்னரே சென்றுவிட்டனர். மிச்சம் இருந்தது இந்த வாழு கூட்டங்களை சமாளிக்க, லதாவும், ரவியும், வெங்கட் மற்றும் ஹேமா மட்டுமே. இரு கார்கள் காத்திருக்க, மணப்பெண்ணும் தோழிகளும், லதா மற்றும் ரவி அனைவரும் ஒரு காரிலும், மணமகனும் அவன் தோழர்களும் வெங்கட் மற்றும் ஹேமா ஒரு காரிலும் கிளம்ப ஆயத்தமானனர்.

எப்போதும் மாறாத வண்ண வண்ண புடவைகள் தான், எத்தனை முறை வர்ணித்தாலும் தெவிட்டாத அழகுதான் பெண்கள் சேலை கட்டினால். பசுமையாய் செழித்து இருக்கும் மரத்தின் இலைகள் போல் கரும் பச்சையில் பட்டணிந்து அர்ச்சனா வர, அந்த மரத்தில் காய்க்கும் கனிகள் போல் அடர்சிவப்பில் பட்டணிந்து தேஜு இடதுபுறமும், அதே மரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை போல் மஞ்சள் நிற பட்டணிந்து அனு வலதுபுறமும், அந்த மரத்தையே தாங்கும் விழுதாய் அஹல்யா ப்ரௌன் நிற பட்டணிந்து படிகளில் இறங்கி வந்தனர்.

மணப்பெண் ஒரு அழகென்றால், தன் வயிற்றில் 5 மாத கருவை சுமக்கும் அஹல்யாவும் ஒரு அழகோடு மிளிர்ந்தாள். அவர்கள் நுழைவாயிலுக்கு வரவும், அழகாய் பட்டு வேஷ்டி அணிந்து அவரவர் ஜோடிகளுக்காக காத்திருந்த காளையர்கள் கூட அழகாக இருந்தனர். எப்போதும் ஜீன்ஸ், pant அணிவதையே பார்த்துவிட்டு திடிரென வேஷ்டியில் பார்க்கும் பொழுது பெண்களும் கொஞ்சம் மயங்கித்தான் போனனர். மணமகன் யாரென்று குழம்பும் அளவிற்கு அனைவரும் அவரவர் ஜோடிகளை சைட் அடிக்க, முதலில் சுதாரித்த அர்ஜுன் தான், “ஹே மாப்பிள்ளை அவன்தான் நம்ம அவனை இப்படி லேசுல பொண்ண பார்க்கவிடலமா? போதும் போதும் வாப்பா எல்லாம் தாலி கட்டினதுக்கு அப்பறம் பார்த்துக்கிட்டே இரு” என்று அவன் கண்களை மூடி மூவரும் அழைத்து சென்றனர். நவீனுக்கு மாப்பிள்ளை கலை வந்துவிட, கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது, மெல்லிய சிரிப்போடு நடந்து சென்றுவிட்டான்.

அவன் கண்கள் தன்னை வருட நெஞ்சம் படபடக்க, முகத்தில் வெட்கம் பூசி வந்த அர்ச்சனாவிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.. ஏதோ ஒரு படபடத்த உணர்வு. அவர்களின் செயலில் கொஞ்சம் இடைவெளி கிடைக்க மூச்சுவிட்டுக்கொண்டாள், பெண்கள் அனைவரும் சேர்ந்து சிரித்துக்கொண்டே கிளம்பிவிட்டனர்.  

திருவண்ணாமலை சிவன் கோவில்... மனம் முழுதும் பக்தியில் நிறைந்தது. காதல் கொஞ்சம், திருமணத்தின் வெட்கம் கொஞ்சம், மகிழ்ச்சி கொஞ்சம், பக்தி கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக மனம் முழுவதும் நிறைந்தது. கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற அதே இனிய வார்த்தைகளோடு, இசைவாத்தியத்தின் வாழ்த்துக்களோடு, சுற்றி இருந்தோரின் வாழ்த்துக்களும் சேர்ந்து கொள்ள, இறைவனின் ஆசிர்வாதம் முழுதும் பெற்று, திருமாங்கல்யத்தை நெஞ்சம் நிறைய அர்ச்சனாவின் கழுத்தில் கட்டினான் நவீன். மனம் நிறைந்துவிட, அப்படியே சுவாமி தரிசனத்தையும் முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டனர் அனைவரும்.

வரும் பொழுது பெரிய யுநோவா காரில் இளைஞர் கூட்டமெல்லாம் ஏறியது, முன்னே அர்ஜுன் கார் ஓட்ட, அருகில், வயிற்றில் தன் குழந்தையோடு அஹல்யா அமர்ந்து இருந்தாள், நடுவே இருந்த சீட்டில் புதுமண தம்பதிகளும், நிரஞ்ஜனும் அமர்ந்திருந்தான், பின்னே இருந்த இருக்கைகளில் அஸ்வத் தேஜு அனு மூவரும் அமர்ந்து இருந்தனர். அர்ஜுனுக்கு கோவிலில் இருந்தே மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. திருமணம் முடிந்ததும், புகைப்படம் எடுக்க அழைக்கவும் வருசையாக அனைவரும் நின்றனர். பெற்றோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்தபின்பு, ஏதேதோ சாக்கு சொல்லி இவர்கள் செட் மட்டும் தனியாக புகைப்படம் எடுக்க முயற்சி செய்தான் நவீன். அவர்கள் வேறுபுறம் செல்லும் வரை பெண்கள் எல்லாம் மணமகளின் பக்கமும், ஆண்கள் எல்லாம் மணமகன் பக்கமும் நின்று எடுப்பது போல் காட்டிக்கொண்டு, அவர்கள் நகர்ந்ததும் எட்டி பார்த்துவிட்டு, ஹே போதும் போதும் அவங்க அவங்க செட்டோட நில்லுங்கப்பா என்று நவீன் கூறவும் அனைவரும் ஒரு கள்ள சிரிப்போடு செட்டு சேர்ந்தனர். அர்ஜுன் மனைவிக்கு சிரமம் கொடுக்காமல் அவள் அருகே வந்துவிட, அடுத்து அஸ்வத் அவசரமாக வந்து அனுவின் அருகில் நின்றுக்கொண்டான். அவனை ஆச்சர்யமாக ஒரு பார்வை பார்த்தாள் அனு. அவளை பருகும்படி ஒரு நொடி பார்த்துவிட்டு கண்ணடித்து திரும்பிக்கொண்டான். அவனது செய்கையில் சட்டென அவளது கன்னங்கள் சிவந்துவிட, அதை மறைக்க வேறுபுறம் தலையை திருப்பிகொண்டாள் அனு. ஆனால் நிரஞ்ஜன் மட்டும் போகலாமா வேண்டாமா என்பது போல் இடத்தைவிட்டு நகராமல் நின்றான். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் “ஹே போதும்டா நல்லவன் போல் நடிக்காத, வெட்கப்படாம போ போய் நில்லுடா” என்று அவனை கிண்டல் செய்தனர். அனைவரும் அவ்வாறு நினைத்தாலும் அஸ்வத் மட்டும் அவனை அளவெடுத்துக்கொண்டே இருந்தான்.

ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது நிரஞ்ஜனின் முகத்தில், தேஜுகூட வெட்கம் தான் படுகிறான் என்று நினைத்தாள். ஆனால் முன்பிருந்தே அவனிடம் இருந்த ஒதுக்கம் அஸ்வத் கண்களில் நன்றாகப்பட்டது. நிரஞ்ஜன் தேஜுவை பற்றி பேசியே பல மாதங்கள் ஆயிற்று, அவளது பேச்சை எடுத்தாலே எதாவது பேசி திசைதிருப்பிவிடுகிறான் என்பதை இப்போது தான் உணரத்தான் அஸ்வத். முன்பெல்லாம் எப்போதும் அவள் புராணம் தான் அதிகமாக இருக்கும், ஆனால் இப்போதெல்லாம் அது குறைந்துவிட்டது. காரில் ஏறும் பொழுதுகூட, “நீ அனு பக்கத்துல ஒக்காந்துக்க மச்சான் நான் முன்னாடி ஒக்காந்துக்குறேன் பின்னாடி இடம் பத்தாது” என்று சமாளித்துவிட்டான். இதெல்லாம் தேஜுவிற்கு உறுத்தவே இல்லை, அவன் பல நாட்கள் கழித்து நன்றாக பேசுவதே போதுமானதாக இருந்தது. அவள் மகிழ்ச்சியாக இருந்ததே அனுவிற்கு நிம்மதியாக இருந்தது. அனைத்தையும் பார்த்த அஸ்வத் மட்டும் பிறகு தனியாக கேட்டுகொள்ளலாம் என்று குறித்துக்கொண்டான்.

போகும் வழியெல்லாம் ஒரே குறும்பு பேச்சும் அரட்டையும் தான். “மாப்பள இப்போ சந்தோஷமா? நினைச்ச மாதிரி அர்ச்சனாவையே கல்யாணம் பண்ணிகிட்ட...” என்று ஆரம்பித்தான் அர்ஜுன்.

“பின்ன இருக்காதா மச்சா, உங்க ஹாப்பி எங்க ஹாப்பி இல்ல, நவீன் ஹாப்பி” என்று தோரணையாக சொல்லிக்கொண்டான். முன்பே அவன் பேச்சு சுவாரசியத்தில் சுற்றி இருப்போர் வயிறுகுலுங்க சிரிப்பர், இப்போது தனக்கு இருந்த மகிழ்ச்சியில் வாய் மூடாமல் பேசிக்கொண்டே வர, அனைவருக்கும் சிரித்துக்கொண்டே வந்தனர். அர்ச்சனா நடுநடுவே பேசிக்கொண்டே நவீனை ரசித்துக்கொண்டு வந்தாள். கார் சுவாரசியமான பேச்சுக்களோடு சென்னையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. திருமணம் முடிந்து மதியம் கிளம்ப, இரவு நேரம் சரியாக உறங்குவதற்கு சென்றடைந்தனர்.களைப்பில் காரில் வரும் போதே அனைவரும் தூண்டிக்கொண்டே வந்தனர். அர்ஜுன் உறங்காமல் இருக்க, அஹல்யா சிறிது நேரம் பெசுகொடுத்துக்கொண்டு வந்தாலும் உடல் அலுப்பால் உறங்கிபோனாள். அவளை கொஞ்சம் சாய்வாக அமர்ந்து பின் சீட்டில் உறங்க சொல்லிவிட்டு நிரஞ்ஜன் முன்னே அமர்ந்துக்கொண்டான்.  இரவே சென்னை வீட்டிற்கு சென்றுவிட, நவீன், அர்ச்சனா, இருவரது பெற்றோர் எல்லாம் நவீன் வீட்டிற்கு சென்றுவிட, மற்றவர்கள் எல்லாம் காலையில் வருவதாக சொல்லிவிட்டு அர்ஜுன் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அனைவரும் வந்து உறங்குவதற்கு தான் நேரம் சரியாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.