(Reading time: 37 - 74 minutes)

 

வன் சொல்லிய செய்தி அவளுக்கு பெரிய அதிர்ச்சிதான் ஆனால் அவன் பழையபடி அவளிடம் பேசுவான் என்றால் எவ்வளவு தூரம் இருந்தாலும் காத்திருக்க தனக்கு பிரச்சனை இல்லை என்று எண்ணிக்கொண்டாள் தேஜு.

“என்ன தேஜு எதுவுமே பேசமாட்டிங்குற?”

“நீ சீக்கரம் போறது எனக்கு வருத்தமா தான் இருக்கு ஆனால் நீ பழையபடி பேசினாலே போதும் நிரு எனக்கு இந்த தூரம்லா பெருசு இல்லை” என்று தன் மனதில் பட்டதை கூறினாள் தேஜு.

“பேசாம எப்படி இருப்பேன் தேஜு, கண்டிப்பா பேசுவோம். இத்தனை நாள் உன்கிட்ட ஒழுங்கா  பேசாம இருந்ததுக்கு சாரி தேஜு. இனிமே அந்த மாதிரி நடக்காது சரியா?? ப்ரிண்ட்ஸ்????” என்று கை நீட்டினான் நிரு.

இந்த வார்த்தைகளுக்காக தானே காத்திருந்தாள் “போடா ஒரு சாரி சொன்னாள் சரியாகிடுமா???” என்று அவன் கையை தட்டிவிட்டு தன்னையும் மீறி வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள் தேஜு.

“ஐயோ தேஜு அழாத என்னை எல்லாரும் தப்பா நினைப்பாங்க... 1000 தடவை சாரி அழுகாத...” என்று அவன் கெஞ்சவும் கண்களை துடைத்துக்கொண்டு எப்போதும் போல் ஒரு புன்முறுவல் தந்தாள் அவள்.

“ஹப்பாடா... ப்ரிண்ட்ஸ்????” என்று அவன் மீண்டும் கை நீட்ட.... எப்போது சண்டை போட்டாலும் இப்படி கை குடுத்து சேர்வது பழக்கமாக போக, கைகுலுக்கி சிரித்தாள்... அவள் சிரிப்பை காணுகையில் நிருவின் உள்ளம் வலித்தது. இப்போதே சொல்லி பிரிந்தாள் எங்கே ஒழுங்காக படிக்காமல் தேர்வை கோட்டை விட்டுவிடுவாள் என்று மும்பை சென்றதும் தனது முடிவை சொல்லிகொள்ளலாம் என்று எண்ணியே இப்போது பேச துவங்கி உள்ளான்.

“சரி இன்னும் 2 வாரத்துல அர்ச்சனா அக்கா marriage செம ஸ்பீடா நாள் போயிடுச்சுல... கல்யாணத்துக்கு முன்னாடியே போயிடனும்... நான் வேற மச்சான் முறை” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

“அது சரி ஆனால் கரெக்டா எக்ஸாம் வர timela வச்சிருக்காங்க” என்று நொந்துக்கொண்டாள் தேஜு.

“ஏன் எக்ஸாம், கல்யாணம் முடிஞ்சு 3 வாரம் கழிச்சு தானே அதுக்குள்ள என்ன ஆக போகுது?”

“உன்கிட்ட போய் சொன்னேனே, நீ உன் அக்காவை விட்டுகுடுத்துட்டாளும்...” என்று பொய்யாக அலுத்துக்கொண்டாள். அவள் இப்படி பேசி சிரித்து பொய்யாக கோவப்படும் போதெல்லாம் நிருவிற்கு தான் வேதனையாக இருந்தது... இவளை பிரிந்து எப்படி இருக்க போகிறோம். இந்த முடிவு இவளை எந்த அளவிற்கு பாதிக்க போகிறதோ என்று.... என்னெனவோ யோசித்தவன் பாவம் இந்த பிரிவே வேண்டாம் என்ற கோணத்தில் மட்டும் யோசிக்காமல் போனான்.

வ்வப்போது தேர்வுக்கு படித்து நல்ல பிள்ளைகள் போல் கொஞ்சம் கொஞ்சமாக படித்து வைத்தனர் நம் ஹீரோ ஹீரோயின்கள்... (அப்போதானே கல்யாணத்தில நிம்மதியா கதையடிக்க முடியும் அதுனால தான்...) அனுவும் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.. தேர்வு முடிந்து விடுப்பு வந்ததும்... ரேடியோ ஸ்டேஷன் எல்லாத்திலும் முயற்சி செய்து பார்ப்பதென முடிவெடுத்திருந்தாள். அவள் வீட்டில் சொல்லியவுடன் எப்போதும் போல் அவள் அன்னை எதிர்ப்பு காட்ட, வெங்கட் தான் முன்னின்று அவளுக்கு ஒப்புதலை வாங்கித்தந்தார்.

நடுவில் ஒருமுறை வீட்டிற்கு சென்றபோது வெங்கட் பேசியது நினைவிற்கு வந்தது.

“இந்த துறையில தான் சேரணும்னு ஏன் அனு உனக்கு தோனுச்சு?”

“தெரியலைப்பா, ஒரு உள்ளுணர்வு மாதிரிதான் இது எனக்கு நல்லா வருதுன்னு நினைக்குறேன், நம்புறேன், என் ப்ரிண்ட்ஸ் உம் அதுதான் சொல்லுறாங்க... ஏப்பா கேக்குறிங்க?”

“ஒன்னுமில்லைடா நீ தெளிவாதான் முடிவெடுத்திருக்கியானு தெரிஞ்சிக்க தான்.”

“அம்மா வேண்டாம்னு சொன்னப்ப நீங்க மட்டும் எப்படிப்பா ஒத்துக்கிட்டிங்க?”

“எப்பவும் நமக்கு பிடிச்ச வேலையை செய்தாதான் நம்ம உயர முடியும், நம்மளை பிடுச்ச வேலையை கண்டா நம்ம ஓடத்தான் செய்வோம் அனு” என்று கூறி மெல்லியதாக சிரித்தார்... “எல்லாராலையும் எல்லா வேலையும் செய்ய முடியும் அனு, ஆனால் அந்த வேலையை பிடுச்சு செய்யிறது எல்லாராலையும் முடியாது. உனக்கு அந்த வேலை செய்யும் போது மனசு நிம்மதியா சந்தோஷமா இருக்கனும்... அதுதான் உனக்குன்னு இருக்க துறை, திறமை... அப்படி தன் திறமையை கண்டுபிடிக்குறது ரொம்ப எளிது இல்லை.. சில பேரு தன் வாழ்க்கை முழுதும் கண்டுபிடிக்காமலே போயிடுவாங்க... அந்த விஷயத்துல என் பொண்ணு இப்பவே தெரிஞ்சிகிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீ வாய் ஓயாமல் பேசும் போது எனக்கு கூட தோணும் இந்த பொண்ணு நல்லா anchor பண்ணுறாளேன்னு, நினைச்சது சரியா போச்சு... உனக்கு பிடிச்சதை பண்ணு ஆனால் பத்திரமா இருந்துக்கோடா... என் பொண்ணு நல்ல முடிவு தான் எடுப்பாள்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு...” என்று வெகுநேரம் தன் தந்தை அறிவுரை கூறியது மனதில் ஓட அமைதியாக அமர்ந்திருந்தாள் அனு.      

“என்ன அனு இப்போவெல்லாம் அடிக்கடி கனவுலகத்திலேயே இருக்கியாம் உங்க அண்ணி சொல்லுறாள்?”

“நானா? இல்லையே அண்ணா..” என்று கூறியவாறு அவள் அண்ணியை பொய்யாக முறைத்தாள். அதற்கு சிறுபிள்ளைபோல் வாய்சுளித்து விளையாட்டு காட்ட, கடவுளே ஒரு குழந்தைக்கே தாய் ஆக போகும் அண்ணி இன்னும் சிறுபிள்ளை போல் நடந்துகொள்வதை கண்டு சிரித்தாள். என்னதான் அண்ணி, நாத்தனார் முறையாக இருந்தாலும் இருவரும் தோழிகள் போலவே பழகிவந்தனர்.

“இப்போ கூட கனவுல தான் இருந்தாள் பார்த்திங்கல்லை” என்று இன்னும் ஏற்றிவிட்டாள் அஹல்யா.

“சரி சரி அண்ணி விடுங்க ஏதோ தெரியாம யோசிச்சிட்டேன். ஒரு விஞ்ஞானி உருவாக விடமாட்டிங்களே...”

“ஸப்பாஆஆஆ முடியலை” என்று இருவரும் மாற்றி மாற்றி போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். இப்படியே சில மணிநேரம் பேசிக்கொண்டிருந்திவிட்டு அர்ஜுனை பார்த்த இருவரும் முறைத்தனர். அர்ஜுன் இவர்கள் பேச்சு இப்போதைக்கு முடியாது என்று உணர்ந்து செய்தித்தாளை படிக்க துவங்கிவிட்டான். இருவரும் சேர்ந்து ஒரு மொத்து போட, “ஐயோ ஏன்டி ரெண்டு பேரும் இப்படி மொக்கை போட்டா எப்படி கவனிக்குறது காதுல ரெத்தம் தான் வருது...” என்று அடி வாங்கின வழியில் கத்தினான்.

“சரி சரி விஷயத்துக்கு வருவோம்... நாளைக்கு கிளம்புறதுக்கு எல்லாம் எடுத்து வச்சாச்சு. அத்தைக்கும் அம்மாக்கும் போன் பண்ணி சொல்லிட்டேன். காலைல 5 மணிக்கு ட்ரைன் சீக்கரம் தூங்கினதான் நீங்க ரெண்டு பேரும் எழுந்திரிப்பீங்க... வாங்க வாங்க...”  

“ஹ்ம்ம்... சீக்கரம் எழுந்திரிக்கனுமா... வேண்டினதும் வேண்டுனாங்க கொஞ்சம் பக்கத்துலேயே வேண்டிருக்கலாமே அண்ணி.. கல்யாணம் பண்ணினா திருவண்ணாமலை கோவில்ல தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரு வேண்டுதலா????” என்று தூக்கம் கெடும் வெறுப்பில் புலம்பினாள் அனு.

“என்ன பண்றது... அவளுக்கு சிவன்னா ரொம்ப புடிக்கும், அதுனால அப்படி வேண்டிக்கிட்டாள்.. அப்பவே சொல்லுவா எனக்கு கல்யாணம் நடந்தால் சிவன் கோவில்ல தான் நடக்கும்னு... அதே மாதிரி அம்மையார் நல்லா வேண்டிக்கிட்டு திருவண்ணாமலை கோவில்ல கல்யாணம் பிக்ஸ் பண்ணியாச்சு. சரி விடு அவள் புண்ணியத்துல நமக்கும் அவரோட தரிசனம் கிடைக்கும்ல.”

“அது சரிதான் அண்ணி.. ஆனால் எத்தனை பேரு சிரமம் பார்க்காம கல்யாணத்துக்காக திருவண்ணாமலை வருவாங்க சொல்லுங்க?! கல்யாணம்னா திருவிழா மாதிரி சிறப்பா நடக்க வேண்டாமா?”

“நெருக்கமா இருக்கவங்க எங்க கல்யாணம் வச்சாலும் வருவாங்க அனு. கூட்டம் சேக்குறதா பெருசு?! வரவங்க 10 பேருனாலும் அவங்க உண்மையா ஆசிர்வாதம் பண்ணினாலே 1000 பேர் வந்ததுக்கு சமம்தான்டா...”

“ம்ம்ம்ம்... கரெக்ட் தான் அண்ணி..” என்று அவளது கூற்றை ஒத்துக்கொண்டாள் இளையவள். இவர்கள் பேசிக்கொண்டிருக்க, இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் அர்ஜுன்.

“என்னங்க ஆச்சு ஏன் மாறி மாறி பார்க்குறிங்க?” என்று புரியாமல் கேட்டாள் அஹல்யா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.