(Reading time: 37 - 74 minutes)

 

டங்குகள் எல்லாம் நேரம் பார்த்து நடக்கவேண்டும் என்று சொல்லியிருந்ததால் மணமக்கள் தனி தனியாக இருந்தனர்.அன்று அலுப்பில் ஒன்றும் தெரியாததால் நவீன் தூங்கிபோனான். அடுத்த நாள் வாழு கூட்டங்கள் ஒன்று சேர்ந்துவிட, நேரம் இனிமையாக சென்றது, நவீனுக்கு திடிரென அர்ஜுன் திருவண்ணமலையில் கூறியது நியாபகம் வர, தூரமாக இருந்தவனிடம் சத்தமில்லாமல் கையசப்பில் “bachellor பார்ட்டி எப்போ” என்று வினவினான். அர்ஜுன் கொஞ்சம் விளையாடிபார்க்க நினைத்து, என்ன மச்சா கேக்குற? bachellor’s பார்ட்டியா?” என்று ஒன்றும் தெரியாதவன் போல் முகத்தை வைத்துக்கொண்டு அனைவரும் அமர்ந்திருக்கும் பொழுது வினவினான். அவன் இப்படி பட்டென கேட்பான் என்று தெரியாத நவீன் திருதிருவென முழிக்க, மொத்த குடும்பமும் அவனை பார்த்தது... “டேய் ஏன்டா? குடிக்க coke இருந்ததே எங்கனு கேட்டேன் அதை போய் இப்படி கேட்குற?” என்று பலவாரியாக சமாளித்து மறைமுரமாக முறைத்தான் நவீன்.

அனைவரும் விளையாட்டாக சிரித்து நக்கல் அடித்து பேச்சை திசைதிருப்பிவிட, நிம்மதி அடைந்த நவீன் இப்போது அர்ச்சனாவை பார்த்தான். “அவளோ வாங்க வாங்க உங்களை பார்த்துக்குறேன்” என்பது போல் முறைத்துக்கொண்டிருந்தாள். அவளை பார்த்து நான் ஒன்னும் செய்யலம்மா நிஜமா என்று கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தான் நவீன். இதை கண்ட வாழு கூட்டங்கள் மட்டும் கள்ள சிரிப்பை பகிர்ந்துக்கொண்டனர்.

பொறுமையாக இருந்து இருந்து அடுத்த நாள் வரவேற்பு விழா என்று வந்துவிட்டது. காலை விடியல் அன்றைய வேலைகளை பட்டியல் போட்டு பெற்றோர்கள் கண்முன் கொண்டுவந்தது. மாலை வரவேற்பு விழா, நவீனோடு வேலை செய்பவர்களும், அவனது தந்தையோடு வேலை செய்பவர்களும் வருவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்க, விழா கலைகட்டியது. விழா பொறுப்பினை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம் கொடுத்துவிட, அவ்வளவு சிரமம் தெரியவில்லை வெறும் மேர்பார்வைதான். அர்ஜுன் திருமணம் போல் தனி தனியாக ஜோடிகள் பிரிந்து போகாமல் சேர்ந்தே அமர்ந்துக்கொண்டனர். இப்போது தான் அனைவரின் விஷயமும் அனைவருக்கும் தெரிந்துவிட்டதே. நவீனின் பேச்சுத்திறமைக்கு நிறைய நண்பர்கள் இருக்க, ஒவ்வொருவரையும் நினைவு வைத்துக்கொள்வது சிரமமாகவே இருந்தது அர்ச்சனாவிற்கு.

என்னதான் வெளியே இருந்து பார்க்க, நவீன் அமைதியாக இருப்பது போல் தெரிந்தாலும் அடிக்கடி ஏதாவது பேசி அர்ச்சனாவை வெட்கப்பட செய்துக்கொண்டிருந்தான். அனைவரும் விழா முடிந்து ஓரிடத்தில் வந்தமர்ந்துவிட பேசி பேசி களைத்துபோனனர்.

நிரு வரியா கொஞ்சம் வெளிய நடந்திட்டு வரலாம்?” என்று அஸ்வத் வினவ, ஏதோ காரணமாக தான் அழைக்கிறான் என்று புரிந்தாலும் அவனுடன் சென்றான். இருவரும் ஓரிடத்தில் சென்று அமர்ந்துவிட, “ம்ம்ம்ம், இப்போ சொல்லு..” என்றான் அஸ்வத்.

“என்ன... என்ன சொல்லணும்?”

“நீ ஏன் தேஜுகிட்ட ஒழுங்கா பேச மாட்டிங்குரன்னு?”

“அப்படின்னு யார் சொன்னா? அனுவா? அப்படிலாம் எதுவும் இல்லைடா சும்மா சொல்லிருப்பாள்...”

“சோ என்ன தவிர உங்க மூணுபேருக்கு மட்டும் ஏதோ விஷயம் பகிர்ந்திக்க இருக்கு அப்பிடி தானே?”

“அது... அதெல்லாம் இல்லைடா”

“என்ன இல்லை... அவள் எதுவும் சொல்லலை எனக்கு கண்ணு இருக்கு கொஞ்சம் அறிவும் இருக்கு, நீ இப்பல்லாம் தேஜு பத்தி பேசிறதே இல்லை அதை நான் கவனிக்கலைன்னு நினைக்குரியா?” என்று மேலும் துருவி துருவி கேட்டான்.

அதன்பின் மறைக்க மனமின்றி “இல்லைடா என்னதான் ஒருத்தருக்கு ஒருத்தர் புடுச்சுருக்குனு இருந்தாலும், அவங்க அம்மா அப்பா ஒத்துக்கணும் இல்லையா அஸ்வத்.”

“அவங்க ஒத்துக்க மாட்டங்கன்னு எப்படி சொல்லுற?”

“statusனு ஒன்னு இருக்கேடா”

“அவங்க அப்படித்தான் நடத்துக்குராங்களா?”

“இல்லைதான் ஆனால் பொண்ணுன்னு வரும் போது மாறுவாங்க அஸ்வத்”

“போடா முட்டாள் அறிவிருக்கா உனக்கு? அவள் எந்த அளவுக்கு உன்னை லவ் பண்றான்னு உனக்கு தெரியாது? அவள் உன்னை எவ்வளவு நம்பி இருப்பாள்? இப்படி நீ யோசிக்குறதே தப்புடா.. நல்லா தானே இருந்த இப்போ என்ன ஆச்சு?” அவன் பேச பேச மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் நிரஞ்ஜன்.

“வாயை திறந்து பேசேன்டா...”

“எனக்கு சொல்றத்துக்கு எதுவும் இல்லைடா” தலையை குனிந்தவாறே கூறினான்.

“யாருடா உன்ன இப்படி மாத்தினது? எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு... இப்படியெல்லாம் நீயா யோசிக்க மாட்டியே”

“அதெல்லாம் இல்லைடா... சரிவிடு இப்போ எதுக்கு இந்த பேச்சு அப்பறம் பேசிக்கலாம்வா” என்று மழுப்பலாக பேசினான்.

“எனக்கு ஒரு முடிவு சொல்லுடா... அட்லீஸ்ட் கொஞ்சம் யோசிச்சு பாருடா..” என்று கொஞ்சம் கெஞ்சளாகவே வினவினான். சிறிது நேர அமைதிக்கு பிறகு நெடிய பெருமூச்செடுத்துவிட்டு “சரிடா யோசிச்சு பார்க்குறேன் இப்போ போகலாம்வா” என்று அழைத்து சென்றான்.

அஸ்வத்தும் அவனாக யோசிக்கட்டும் என்று சிறிது அவகாசம் கொடுத்தான். அவர்கள் இருவரும் வருவதை பார்த்துவிட்டு “எங்க போயிட்டிங்க ரெண்டு பேரும்? என்ன தம்மா?” என்று நக்கலடித்தான் நவீன்.

இருவரின் மனதும் கொஞ்சம் இலகுவாக “ஐயோ...சிவ சிவ நோ நோ” என்று நடித்து விளையாட்டு காட்டினான் அஸ்வத்.

ருவழியாக வாண்டுகளை எல்லாம் இம்முறை அர்ஜுன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு பெரியோர்கள் மட்டும் நவீன் அர்ச்சனாவிற்கு முதல் இரவிற்கு தயார் செய்தனர். “ச்சே எஸ்கேப் ஆகிட்டீங்க அக்கா” என்று சிறிது பொருமிவிட்டு சென்றாள் அனுவும் தேஜுவும். அஹல்யா வெகுநேரம் முழிக்க வேண்டாம் என்று அவளையும் அனுப்பிவைத்துவிட்டனர்.

செல்லும் முன்னர், “சரி அர்ச்சு சென்னைல தானே இருக்க போற, அடிக்கடி பார்த்துக்கலாம் அப்பறம் வந்து பார்க்குறேன்” என்று பொதுவாக விடைபெற்று சென்றுவிட்டாள் அஹல்யா.   

எப்போதும் போல் பல கனவுகளோடு அர்ச்சனாவை சீண்ட காத்திருந்தான் நவீன். தோழி இருந்தாலாவது கொஞ்சம் படபடப்பு தெரிந்திருக்காதோ என்று மனதில் தோன்ற, அதை மறைத்து இலகுவாகவே சென்றாள் அர்ச்சனா...

அர்ச்சனா உள்ளே வரவும், “வாங்க வாங்க வாங்க மேடம் என்ன இவ்வளவு அன்ன நடை போட்டு வரீங்க?” என்று கிண்டலை ஆரம்பித்தான். கொஞ்சம் படபடப்பு குறைய, “ம்ம்ம்ம் இங்க வந்து என்ன பண்ண போறோம்னுதான் அங்கேயே இருந்திட்டேன்.” அவள் கூறியதற்கு “அடிப்பாவி ஏற்கனவே ரொம்ப நல்ல மனசு பண்ணி அய்யர் 4 நாள் பிரிச்சுட்டாறு... இதுல நீ வேறயா?” என்று நொந்துக்கொண்டான்.

“ஆமா ஆமா எனக்கு கூட இந்த நாள் எப்படா வரும்னு இருந்திச்சு” என்று ஒரு மாதிரியான தோரணையாக கூறினாள்.

“வெரி குட் வெரி குட் இப்போதான் சனா wavelength சரியா வருது ஆனால் என்ன நீ சொல்லுற modulation தான் இடிக்குது...” என்று அவளை கொஞ்சம் சந்தேகமாக பார்த்தான்.

“ஓஹோ அதுவா” என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த மேஜை மீது பாலை வைத்துவிட்டு நவீனின் காதை பிடித்து திருகினாள். “பின்ன இருக்காதா? எப்போடா மாட்டுவீங்க அடிக்கலாம்னு காத்திருந்தேன். எப்புடி எப்புடி bachellor பார்ட்டி கேட்குதா? நீங்க bachellor பார்ட்டினாலே என்ன பண்ணுவீங்கன்னு தெரியாதா?”

“ஆஆஆ வலிக்குதுடி விடுடி...” என்று கொஞ்சம் கத்தவும்...

“ஷு ஷு... கத்தாதீங்க...” என்று காதில் இருந்து கையை எடுத்தாள்..

“பின்ன இப்படி கிள்ளினா எப்புடி இருக்கும்” என்று காதை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“போனா போகுதுன்னு இதோட விடுறேன் இல்லை அவ்வளவுதான்” என்று மீண்டும் மிரட்டினாள், அவள் பேசுவதையே அவன் அமைதியாக கவனிக்கவும் என்ன என்று புருவம் உயர்த்தினாள்.

“இல்லை ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி வந்திட்டு என்ன போடு போடுற அதான் அசந்து போயிட்டேன்..”

“ஆஹா ரொம்ப தான் அசந்து போயிட்டிங்க...” என்று கிண்டலாக கூறினாள்.

“ஆமா பின்ன இல்லையா உன் அழகுல அசந்து போன மாதிரிதான்..” என்று காதல் பார்வையோடு... சிறிது நேரம் அவன் கண்களில் இருந்த காதலை படித்தவள் வெட்கத்தோடு வேறுபுறம் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவனுக்கும் அவள் வெட்கப்பட்டு பார்ப்பது பிடித்துபோக அவள் முகத்தை தன் புறம் திருப்பினான் அவள் கண்களை இருக மூடிக்கொள்ள, லேசாக இதழோரம் துளிர்த்த முறுவலோடு நெற்றியோடு நெற்றி முட்டினான்.

என்னதான் காதல் இருப்பினும் நெஞ்சத்தில் இருந்த படபடப்பு குறையாமல் இருக்க, கண்கள் மூடியே இருந்தது. அந்த மூடி இருந்த கண்களும் சில்லிட்ட கைகளும் அவள் சுயநிலைக்கு வரவே இப்படியெல்லாம் நாடகம் நடத்தினாள் என்று புரியவைத்தது.

“சரி தூங்கலாமா?” என்று அவன் கனிந்த குரலிலேயே கூறினான். அவனது வாக்கியம் சிறிது ஆச்சர்யத்தை தர, உடனேயே தானாக முகத்தில் பெருமிதம் கலந்த புன்னகை ஒட்டிக்கொண்டது அவளுக்கு. மெதுவாக தலையை மட்டும் ஆட்டி அவன் அருகில் படுத்து நிம்மதியோடு உறங்கிபோனாள். இரவில் கண்விழித்து பார்த்தவன் தன் கை சிறைக்குள் அவள் இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்து மெதுவாய் நெற்றியில் இதழ்பதித்து தூங்கிப்போனான்.          

Go to Kadhal payanam # 16

Go to Kadhal payanam # 18

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.