(Reading time: 37 - 74 minutes)

 

ப்போதும் போல் நினைத்த நேரத்தை விட வெகு நேரம் கழித்தே அவர்கள் திருவண்ணாமலை அடைந்தனர். கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு சென்னையில் reception வைத்துகொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். எனவே வெகு சிலபேர் மட்டும் திருமணத்திற்கு வந்திருக்க, அவர்களுக்கு மட்டும் ஹோட்டலில் அரை எடுத்துத்தந்தனர். “ஹே தேஜு நீ என்ன முன்னாடியே வந்திட்டியா?” என்று ஹோட்டல் நுழைவாயிலேயே கண்டுவிட்டு விசாரித்தாள் அஹல்யா.

“ஆமாம் அண்ணி போர் அடுச்சுது அதான்..”

“நிரு கூட முந்தாநேத்தே வந்திட்டதால சொன்னான்..” என்று சிறிது யோசிப்பது போல் காட்டிக்கொண்டு “அட அதனாலதான் உனக்கு போர் அடுச்சுருக்கு...” என்று ஒரு இழுவையுடன் கூறினான் அஸ்வத்.

அவனை பார்த்து வெட்க முறுவலோடு ஒரு முறைப்புவிடுத்து, அவனுக்கு ஒரு அடியும் தந்தாள். அனைவரும் பேசிக்கொண்டே போக, அவரவர் அறையை காட்டினாள் தேஜு. நிரு,அஸ்வத், அர்ஜுன் மணமகன் அறையிலும், தேஜு, அனு, அஹல்யா மணமகள் அறையிலும் தங்கிக்கொண்டனர். அம்மாக்கள் அனைவரும் ஒரு அறையிலும், அப்பாக்கள் எல்லாம் ஒரு அறையிலும் தங்கினர். முன்னே சென்று கொண்டிருந்த தேஜுவின் கையை பிடித்து நிறுத்தி “என்ன மேடம் செம ஹாப்பி போல, என்ன நிரஞ்ஜன் ஒழுங்கா பேசிட்டானா?” என்று கண்ணடித்து கேட்டாள் அனு. அவள் கூறியது உண்மைதான் என்பதுபோல் ஒரு புன்னகை தந்து, “ம்ம்ம்ம்... சாரி சொன்னான் இனிமே இப்படி பண்ணமாட்டேன்னு சொன்னான்” என்று தேஜு கூறவும் அனுவிற்கு நிம்மதியாக இருந்தது. தான் பேசியதால் மனம் மாறி நிரஞ்ஜன் பேசுகிறான் என்று அவள் நினைத்துக்கொண்டாள். ஏதோ பிரச்சனை தீர்ந்தால் சரி என்றிருந்தது அவளுக்கு. 

ஒவ்வருத்தர் மனதிலும் ஒவ்வொன்று ஓடிக்கொண்டிருந்தாலும் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். தோழிகள் எல்லாம் ஒன்று சேர, அர்ச்சனாதான் பழையபடி சிரமபட்டாள்...

“அர்ச்சு உன் மாமா என்ன சொன்னாரு?”

“கல்யாண பரிசா என்ன குடுப்பாரு?” என்றெல்லாம் கிண்டல் செய்ய துவங்கினர்...

“அச்சோ அண்ணி அதெல்லாம் நம்மகிட்ட எப்படி சொல்லுவாங்க” என்று பரிந்து பேசுவது போல் கிண்டல் செய்தாள் தேஜு.

“ஹே சும்மா இருங்கடி” என்று எப்படி எப்படியோ கெஞ்சி பார்த்துவிட்டாள் அர்ச்சனா, ஆனால் விடுவதாக இல்லை மூவரும்.

“அண்ணி அக்கா முகத்தில ஒரு தேஜஸ் தெரியுதுல?” என்றாள் அனு.

“இல்லாமலா அனு, அவங்க மாமாவையே நினைச்சு நினைச்சு உருகுறால அதான்” என்று தொடர்ந்துக்கொண்டே போனது.

“அர்ச்சனா அண்ணி உங்களுக்காக ஒரு பாட்டு dedicate பண்ணவா?” என்று மர்ம சிரிப்போடு கேட்டாள் தேஜு. என்ன என்பது போல் அர்ச்சனா பார்க்க,

“அத்தான் வருவாஹா ஒரு முத்தம் குடுப்பாஹா

என் அக்கம் வெட்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாஹா...“ என்று பாடலை தன் கைபேசியில் ஒலிக்கவிட்டாள் தேஜு. சரியாக அந்த நேரம் பார்த்து துளசி வந்துவிட, ஹே போதும்டி தூங்குங்க எவ்வளவு நேரம் தான் கதை அடிப்பீங்க? என்று பரிந்து பேசவும் “ஹப்பாடா” என்றிருந்தது அர்ச்சனாவுக்கு.

பின்னால் இருந்து வந்த லதா தான் மற்றவர்களுக்கு சப்போர்ட் செய்தார். “விடு துளசி இப்பதான் கிண்டல் செய்ய முடியும், ஒரு 6 மாசம் ஓடினா யாரு ஒட்டுவா? சந்தோஷமா என்ஜாய் பண்ணட்டும்” என்று பரிந்துரைத்தார். “அது சரி இவங்க கதை அடுச்சிகிட்டே இருந்தால் எப்படி எழுந்திரிப்பாங்க? படுங்க படுங்க நாளைக்கு பேசிக்கலாம்” என்று உறங்க வைத்தார்.

வீனின் நிலைமையோ பரிதாபத்திற்கு உரியது. நவீனும் இருந்த இடத்தில் இருந்து மூவரையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தான். ஆனால் அவர்களோ அக்கடா என்று மெத்தையில் படுத்து நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர் (உறங்குவது போல் நடித்தனர்)...

“ஹே போதும் எழுந்திரிங்கடா... எவனாவது மாப்பிள்ளை தோழனா ஒழுங்கா நடந்துக்குரிங்களா?”

“ஏன்டா என்ன பண்ணனும்?” ஒன்னும் தெரியாதவன் போல் வினவினான் அர்ஜுன்.

“கிண்டல் பண்ணனும்டா என்னை கிண்டல் பண்ணனும்... நானும் வந்ததில இருந்து பார்க்குறேன் வந்தீங்க, என்னடா கல்யாணத்துக்கு ரெடியான்னு கேட்டிங்க, சரி ஆரம்பிப்பீங்கனு பார்த்தால் நீங்க பாட்டுக்கு படுத்துட்டீங்க?!?!” என்று ஆதங்கப்பட்டான் நவீன்.

“கிண்டல் பண்றதுலாம் பழைய ஸ்டைல் அண்ணா” என்று இலகுவாக கூறினான் அஸ்வத்.

“அட பாவிங்களா இது எப்போ இருந்து?”

“இப்போ இருந்து தான்” என்று கூறி அஸ்வத்தும் நிரஞ்ஜனும் கையடித்துக்கொண்டனர்.

“நடத்துங்கடா நடத்துங்க” என்று பொருமினான்.

“நீ ஏன்டா இப்படி பொலம்புற? உனக்கு என்ன தான் பிரச்சனை?”

“ஹப்பாடா நீயாவது கேட்டியே மாப்ள... நாளைக்கு கல்யாணம்...”

“ரொம்ப அறிய கண்டுபிடிப்பு மச்சா...”

“டேய் என்ன சொல்லவிடுடா...”

“சரி சொல்லு...”

“நாளைக்கு நைட் கிளம்பி அடுத்த நாள் சென்னை போறோம்... “

“சரி....அதுக்கென்ன?”

“அதுகென்னவா???? சென்னை போய் ரெண்டு நாளைக்கு விரதம்டா reception முடிஞ்சு அன்னைக்கு நைட் தான் எல்லாமே...” என்று சோகமாக முடித்தான் நவீன்... அவன் முடிப்பதற்கும் மூவரும் சிரிப்பதற்கும் சரியாக இருந்தது.. “பாவம் மச்சா நீ... சரி விடுடா உனக்கு கல்யாணம் முடிஞ்சு 3 நாளைக்கு நம்ம bachelors பார்ட்டி கொண்டாடலாம்...” என்று அவனை சமாதானம் செய்தான்.

“எல்லாம் என் நேரம்டா கல்யாணம் முடிஞ்சு bachelors பார்ட்டி, அதுவும் உங்க கூட” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

“ஏன்டா?!”

“என்ன ஏன்? நீங்களாம் ஸ்மெல்லுக்கே மயங்குரவனுங்கலாச்சே அதான்” என்று தன் நிலைமை நினைத்து தானே சிரித்துக்கொண்டான் நவீன்.

பொழுதுகள் விடிவதென்னவோ ஒரேபோன்றுதான் ஆனால் மனதில் இருக்கும் மகிழ்ச்சியே விடியலை புதிதாகவும் இனிமையாகவும் காட்டும். அதுபோல தான் அன்று அர்ஜுன் அஹல்யா உணர்ந்த அதே உணர்வை நவீனும் அர்ச்சனாவும் இன்று உணர்ந்தனர்.  

விடியற் காலை எழுப்பி beauty parlour ஆட்கள் வருவதற்கு முன்பே புடவையெல்லாம் கட்டி தயாராக இருக்கும்படி அரக்கபறக்க ஓடிக்கொண்டே கூறினர் பெரியோர். தோழிகள் எல்லாம் பார்த்து பார்த்து அனைத்தையும் எடுத்து வைத்து உதவிக்கொண்டிருந்தனர். நகைகளையெல்லாம் பொறுப்பாக தேஜு பார்த்துக்கொள்ள, அஹல்யா அர்ச்சனாவிற்கு புடவை கட்டிவிட்டாள், அனு இடையில் பசி எடுக்காமல் இருக்க, கடையில் வாங்கிய இட்லியை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள். மாறி மாறி அனைவரும் பார்த்து பார்த்து செய்ய, யாரை பார்ப்பதென்ற தெரியவில்லை அர்ச்சனாவிற்கு. அவர்கள் தயாராக இருக்கவும், parlour பெண்கள் வரவும் சரியாக இருந்தது. அவர்களின் ஒப்பனை எல்லாம் முடிந்ததும், புகைப்படம் எடுக்க ஆள் வந்துவிட்டனர். தூக்கமே இல்லாமல் கண்கள் சொருகினாலும், படங்கள் அனைத்தும் பிற்காலத்தில் பார்த்து ரசிக்க கூடியதாயிற்றே எப்போதும் போல் அழகாக சிரித்து கொஞ்சம் கண் திருஷ்டி வாங்கிக்கொண்டாள் மணப்பெண். மாநிறத்திற்கு எடுப்பாக கரும்பச்சை சேலை அணிந்து, முகம் முழுதும் வெட்க சிரிப்பு ஒட்டிக்கொள்ள, மிதமான ஒப்பனையில் அழகியாய் உலா வந்தாள் அர்ச்சனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.