(Reading time: 33 - 66 minutes)

 

ண்டா மச்சான்… நம்ம அவ்னீஷ் எங்கடா ஆளையே காணோம்?...”

“இங்க தானடா இருந்தான்… நீ பார்க்கவில்லையா?...”

“இல்லையே மச்சான்… பய என் கண்ணில் சிக்கலையே இன்னைக்கு…”

“எப்போ மச்சான்… நீ சொல்லவே இல்லையே…”

“எதடா?...”

“அதான் மச்சான் வலை…”

“வலையா?...”

“ஆமாடா நீதான சொன்ன, கண்ணில் சிக்கலைன்னு… அதான் வலை எப்போ பிக்ஸ் பண்ணின, எனக்கு தெரியாமன்னு கேட்டேன்?...”

“டேய்… ஆதி…. நீ ஆதியாடா… இல்லடா… மச்சான்…”

“அப்போ நான் யாருடா மச்சான்?..”

“பாவிடா… பாவி…”

“அடப்பாவி…”

“அதே தான் மச்சான்… அதெப்படி சரியா சொல்லிட்ட உன்னை நீயே அடப்பாவின்னு…”

“டேய்… உன்னை…”

“வாடா வாடா தோழா… வந்து என்னை பிடி பார்க்கலாம்…” என்று முகிலன் ஓட…

“டேய்…. வாலில்லாத வானரமே… நில்லுடா… “ என்று ஆதர்ஷ் துரத்திக்கொண்டே சாப்பிடும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்…

“என்னடா ஆதி… நம்மள விட்டுட்டு, எங்கடா போனாங்க எல்லோரும்… இங்க தான, சாப்பிடுவாங்க…”

“ஆமாடா… நீ விடிஞ்ச பின்னாடி வந்தா, பின்னே யாருதான் வெயிட் பண்ணுவா?...”

“சரி விடுடா… மச்சான்… நமக்கு இப்போ சோறு தான் முக்கியம்… வாடா சாப்பிடலாம்…”

“ஹ்ம்ம்… நீ சொல்லுறதும் சரிதான்… பசிக்குது… வா…”

“ஆதி… இப்போ தாண்டா நீ என் மச்சான்…”

“டேய்… வாடா… எப்படி இருக்கே?...”

“நல்லா இருக்கேண்டா… ஆதர்ஷ்… நீ?...”

“எனக்கென்னடா இதோ என் மச்சான் எங்கூடயே இருக்கானேடா…. எனக்கென்ன குறை?...”

“எவன்டா அது…?... சாப்பிடுற நேரத்துல?... மனுஷன் பசி தெரியாம நலம் விசாரிக்கிறது அங்க?...”

“முகில், நம்ம ஹரீஷ் வந்திருக்காண்டா…”

“யாரு… நம்ம டாக்டர் தம்பியா?... வாங்க… தம்பி… இன்னைக்கு தான்… வழி தெரிஞ்சதா?...”

“ஹாஹாஹா…”

“ஆனா… ஊன்னா… இப்படி சிரிச்சே சமாளிச்சிடுடா…”

“ஹாஹாஹா…”

“பாருடா… மறுபடியுமா?...”

“விடுடா முகில், அவன் எப்பவுமே இப்படிதான், ரொம்ப நெருங்கினவங்க தவிர வேற யார்கிட்டயும் சரியா பேசமாட்டேனே… அது நமக்கு தெரியாதா என்ன?...”

“அது சரிதாண்டா மச்சான்… ஆனா… நாம தான் ரொம்ப நெருங்கினவங்க ஆச்சே… அப்படியிருந்தும் இவன் ஏண்டா, இப்படி சிரிச்சிட்டே இருக்கான்… வாயை திறந்து பேசினா முத்து எதும் உதிர்ந்திடுமா என்ன?...”

“இல்லைடா மச்சான்… நீ பேசுற அழகை ரசிக்கிறேண்டா…”

“யாரு நீ?... நான் பேசுற, அ…ழ…கை…?...”

“ஆமாடா முகில்…”

“டாக்டர் தம்பி… எங்களுக்கேவா பிட்?... டேய் நீ படிச்ச ஸ்கூலுக்கே நான் தான்டா ஒனர் என் ஹரீஷ் ராசா…”

“சரிடா மச்சான் விடு… அறியா பையன் தெரியாம ஏதோ பேசிட்டான்… மன்னிச்சு விடேண்டா.…”

“ஹ்ம்ம் உனக்காக தான் மச்சான் விடுறேன்… சொல்லிவைடா ஆதி அவங்கிட்ட…”

“சரிடா.. சரிடா… நீ கோவப்படாத… அப்பறம் சாப்பாடு சரியா சாப்பிட மாட்ட…”

“அடேய்… கிராதகா… உன் மேல கோவம்னா நான் ஏண்டா சாப்பிடாம இருக்கப்போறேன்… ஏண்டா என் சாப்பாடை அபேஸ் பண்ண திட்டம் போடுறீங்களா?...”

“ஹாஹாஹா… நான் சொல்லலை ஆதி… நம்ம முகில் புத்திசாலின்னு…”

“ஹாஹாஹா… ஆமாடா மச்சான்…. ஹரீஷ்…”

“சரிடா.. சிரிச்சது போதும்… இப்போ சாப்பிடுறீங்களா இல்ல நானே எல்லாத்தையும் காலி பண்ணிடவா?...”

“அய்யோ ஹரீஷ்… இவன் செஞ்சாலும் செய்வான்… வாடா நாம முந்திக்கலாம்…”

“சரிடா… வயிருக்கு தீனி போட்டாச்சு… நெக்ஸ்ட் பிளான் என்னவோ?...”

“அத இவன் தான் டா ஹரீஷ் சொல்லணும்…”

“….”

“டேய்… நாங்க இங்க உன்ன தான கேட்டுக்கிட்டிருக்கோம்… நீ என்னடா யோசிக்கிற… ஆதி.. இவனுக்கென்ன ஆச்சு?...”

“தெரியலையே ஹரீஷ்…”

“மனுஷனை நிம்மதியா யோசிக்க கூட விட மாட்டீங்களே… பொறாமை பிடிச்சவனுங்கடா நீங்க…”

“என்ன பொறாமை எங்களுக்கு…?”

“அதான, அப்படி கேளுடா, ஆதி…”

“கேட்குறேன் மச்சான்…. நீ கவலைப்படாதே…. முகிலா… சொல்லுடா என்ன பொறாமை?...”

“வேறென்ன, ஒரு அறிவாளி உருவாகிட கூடாதே உங்களுக்குப் பொறுக்காதே…”

“யாரு நீ… டேய்… என்ன கொலைகாரன் ஆக்கிடாதே…”

“விடுடா மச்சான்… இவனை கொன்னுட்டு நீ ஏண்டா ஜெயிலுக்குப் போகணும்….”

“பின்ன இவன என்னதான்டா பண்ணுறது?...”

“ஒரே ஒரு விஷ ஊசி போட்டுற வேண்டியதுதான்…. மேட்டர் ஃபினிஷ்… எப்படி மச்சான் என் ஐடியா?...”

“ஹரீஷ்…………. பின்னிட்டடா… பின்னிட்ட… டாக்டர் வேலையும் ஆச்சு, இவனை கொன்ன மாதிரியும் ஆச்சு… எப்போ மச்சான் அந்த நல்ல காரியத்தை செய்யப்போற?..”

“இவன் என்ன மேட்டர் யோசிக்கிறான்னு இன்னும் சொல்லாம விட்டான்னா, நாம செயலில் இறங்கிடலாம் ஆதி…”

“டீல் டா ஹரீஷ்…”

“போங்கடா நீங்களும் உன் பிளானும்…” என்று சிரித்தான் முகிலன்…

“சிரிக்காம விஷயத்துக்குவா டா லூசுப்பயலே…”

ஆதி சொன்னதிற்கு பதில் சொல்லாமல் கைபேசியை எடுத்தவன் எண்களை அழுத்தினான்…

“இவன் என்னடா செய்யறான்…”

“தெரியலைடா டாக்டர் நண்பா…”

“சொல்லித்தொலையேன்டா வாலில்லாத வானரமே..” என்று அவனை அடித்தான் ஹரீஷ்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.