(Reading time: 33 - 66 minutes)

 

மா… அங்கிள்… ஹரீஷ்… இப்போ தான் வந்தான்… நீங்க ஏன் வரலை?...”

“….”

“ஓ சரி அங்கிள்… ஹரீஷும் ஹாஸ்பிட்டல் அது இதுன்னு பிஸியா இருப்பான் எப்பவும்… இன்னைக்கு தான வந்திருக்கான்… கொஞ்ச நாள் இங்கே தங்கியிருக்கட்டும்…”

“……………”

“கண்டிப்பா அவங்கூட நானும் அடுத்த வாரம் மும்பைக்கு வருவேன் அங்கிள்…” என்றபடி ஹரீஷின் அப்பாவிடம் பேசிக்கொண்டே மேலே அவன் அறைக்கு சென்று கொண்டிருந்தான் ஆதர்ஷ்…

முகிலன் சென்ற பிறகு ஆதர்ஷிற்கு போன் வந்தது… அதை பார்த்தவன், “அங்கிள் தாண்டா… பேசுறியா…” என்று ஹரீஷிடம் கேட்டான்…

“இல்லைடா… அவர்தான் உங்கிட்ட பேசணும் என்றார்.. நீ பேசு… நான் அவ்னீஷிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்…” என்றான்….

“சரிடா… நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருங்க… நான் வந்துடுறேன்…” என்றபடி நண்பனின் தந்தையிடம் பேசியவன் கைபேசியை வைக்கவும், அங்கே அபி வரவும் சரியாக இருந்தது…

“ஹாய் குட்டிமா… என்ன இன்னும் தூங்கலையா?...”

“உனக்கு குட்நைட் சொல்லாம நான் என்னைக்கு தூங்கியிருக்கேன்…”

“ஹாஹாஹா… ஆமாமில்லை…”

“சிரிக்காத… ஏன் நீ சாப்பிட வரலை?...”

“என் ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டிருந்தேண்டா…”

“எவ்வளவு நேரம் வெயிட் பண்ணினேன்னு தெரியுமா?...”

“சாரிடா மா…”

“…..”

“குட்டிமா… கோபமா டா?...”

“நாளைக்கு உன்னை நான் வெளியே கூட்டிட்டு போகணும்னு நினைச்சேண்டா… அந்த ஃப்ரெண்ட் நாளைக்கு மீட் பண்ணலாம்னு சொன்னாண்டா… நான் அதான் அவங்கிட்ட சொல்லிட்டிருந்தேண்டா… நாளைக்கு முடியாது… இன்னொரு நாள் மீட் பண்ணிக்கலாம் என்று…”

“நாளைக்கு வெளியே போறோமா?...”

“ஆமாடா…”

“ஹை… ஜாலி… ஜாலி…”

“ஆமாடா… ஜாலிதான்…”

“அவ்வளவு தானா?... வேற கிஃப்ட், சர்ப்ரைஸ் எல்லாம் கிடையாதா எனக்கு?...”

“... ஹ்ம்ம்… கண்ணை மூடு வரேன்…”

“சரிடா குட்டிமா…” என்று கண்களை மூடினான் ஆதர்ஷ்…

வழக்கமாக அவன் இவ்வாறு கேட்கும்போது ஏதோ ஒன்று அவனுக்குப் பரிசாக கொடுப்பாள் அபி, முத்தம், அணைப்பு, சாக்லேட், பொம்மை, பூக்கள் என்று அவளுக்கு அன்றைக்கு மிக பிடித்த ஒன்றை பரிசாக கொடுப்பாள் அபி… அதை இன்றளவும் பத்திரமாக வைத்திருக்கிறான் ஆதர்ஷ்…

எப்பொழுதும் அவன் அவள் உயரத்திற்கு முழங்காலிட்டு அமர்ந்திருப்பான்... அவள் அவன் கையில் அன்றைய பரிசை கொடுப்பாள்... இல்லையேல் அவனின் முன்னே தரையில் வைத்து விட்டு அவனின் பின்னே மறைந்து கொள்வாள்... அதுபோல் இன்று எதை கொடுப்பாள் என்று யோசித்தவனின் கையைப் பிடித்தாள் அபி... அவனுக்குப் புரிந்து போயிற்று... இந்த முறை பரிசு தரையிலும் இல்லை, கையிலும் இல்லை.. ஏனெனில் அவள் அவன் பின்னே ஒளிந்து கொள்ளவில்லையே... சரி தன் முன் தானே நின்றிருப்பாள்... அவளையே நேராக பார்ப்போம் என்றெண்ணியவனின் காதில்...

“சர்ப்ரைஸ்…” என்று உரக்க சொன்னாள்…

“கண்ணைத் திறக்கலாம் இப்போ…” என்று சொன்னது தான் தாமதம் என்பது போல் இமைகளைத் திறந்தவனின் விழிகள் ஒரு நிமிடம் எங்கேயும் அசையவில்லை… நிலைகுத்தி நின்றது எதிரே தெரிந்த கருவிழியில்…

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்உயிரைத் திருப்பி தந்துவிடு…”

விழிகளுக்கு பேசும் சக்தியும் உண்டோ… அழகாக உயிர் கொடுத்தது அங்கிருந்த நான்கு விழிகள் அந்நேரம் சுந்தரம் அவரது அறையில் ஒலிக்க விட்ட பாடலுக்கு…

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

அவளது விழியின் ஓரம் ஒரு துளி நீர் எட்டிப்பார்த்தது…

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

அவனின் விழிகள் அவளிடத்தில் உரிமை கொண்டாடியது…

எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்…”

அவள் விழிகள் அவளது அன்றாட நிலையை உறைத்தது… உயிர் தினமும் கொதிக்கும் அவல நிலையை அப்பட்டமாக ஏனோ அவனது விழிகளுக்கு தெரிவித்தது அவளையும் அறியாமல்…

பார்வையை அகற்ற முடியாமல் தவித்தது அந்த நான்கு கண்களும்…

“மிஸ் எங்கூட வாங்க, நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்… பட் கண்ணை மூடிட்டு தான் வரணும், நான் திறக்க சொல்லும்போது தான் திறக்கணும்.. ஓகே?...”

“சரிம்மா… பாட்டி வந்தா தேடுவார்களே?...”

“மாமாக்கு கேசரி குடுக்க போயிருக்காங்க… வர கொஞ்சம் லேட் ஆகும்.. நாம அதுக்குள்ளே வந்துடலாம்… வாங்க…” என்று அழைத்து வந்தாள் அபி ரிகாவை…

ந்த இடத்தில், அவர்கள் இப்படி சிலையாக ஒருவரை ஒருவர் விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் அவர்களை அறியாமல்… அபி தான் அந்த மௌனத்தை கலைத்தாள்…

“தர்ஷ்… தர்ஷ்…” என்று அவள் அவனைப் பிடித்து உலுக்க, சட்டென சுயநினைவுக்கு வந்தவன் வேகமாய் எழுந்தான்…

தனது ஜோடி விழிகள் பிரிந்த வருத்தத்தில், ஈர விழிகளைக் கொண்ட ரிகாவின் உடல் தானாக எழுந்தது…

“இவங்க தான் என் மிஸ் ரிகா… மிஸ்… இவங்க தான் என் மாமா ஆதர்ஷ்…”

“வணக்கங்க…” என்றாள், அவனும் பதிலுக்கு “வணக்கம்…” சொன்னான்…

“ரொம்ப நன்றி… என் குட்டிமாவை இத்தனை நாட்கள் தனியாக விடாமல் அவளுக்கு நல்ல தோழியாக இருந்து பார்த்துகொண்டதற்கு…”

அவனின் குட்டிமா என்ற அழைப்பு அவளுக்குள் எதுவோ செய்தது… “கு…ட்…டிம்….மா… யா…ரு?...”

“இவ தான் என் குட்டிமா….” என்று அந்த வார்த்தையில் மீண்டும் ஓர்முறை அழுத்தம் கொடுத்து சொன்னான்…

“ஆமா… ரிகா… இவ தான் அவன் குட்டிமா…” என்று சொல்லியபடி அங்கே அனுவும், கோதையும் வந்தனர்… அவர்களைத் தொடர்ந்து அவ்னீஷும் ஹரீஷும் வந்தனர்…

“ரிகா நீ எங்கே இங்கே?...”

“ஹரீஷ்… நீங்க… எப்படி இங்கே?...”

“ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க… வாட் அ ப்ளசென்ட் சர்ப்ரைஸ்… நீங்க எங்க இங்கே?..” என்று  

ரிகா, ஹரீஷ், ஷன்வி என்று மூவரும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொண்டிருக்க, அவ்னீஷ், அனு, ஆதர்ஷ் மற்றும் கோதையும் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டனர்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.