(Reading time: 33 - 66 minutes)

 

வா அவ்னீஷ்… ஏன் முகிலன் ஹ்ம்ம் சொல்லகூடாதா என்ன?...”

“அதெல்லாம் இல்லை ஹரீஷ் அண்ணா… வழக்கமாக வாய் ஓயாது பேசிக் கொண்டிருப்பவர் இன்று ஹ்ம்ம் சொல்லுகிறாரே என்று தான்…”

“ஹாஹாஹா… சரி சரி… பத்திரமாக விட்டுவிட்டு வந்தாயா?...” என்றான் முகிலன்

“ஆமா அண்ணா…”

“சரி அவ்னீஷ்.. தூங்கலாம்…” என்றான் ஹரீஷ்…

அனைவரும் படுத்துவிட்டனர்…

ஷன்வியும் அவ்னீஷும் அன்றைய நாளில் தங்களின் காதல் பிறந்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர்… ஆனால் ஷன்விக்கு ஹரீஷின் “என் ரிகா” என்ற வார்த்தையில் சற்று குழப்பம்… அவர் இங்கே பல முறை வந்திருந்த போதும், இப்படி நடந்ததில்லையே… இன்று மட்டும் என்ன?... புதிதாய்… அவர்களுக்குள் என்ன?... என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்…

முகிலனுக்கோ பெரும் யோசனை… அம்மா நினைத்துக்கொண்டிருப்பது நடக்குமா?... என்ற வினாவோடு அவன் மனம் தவித்தது…

ஹரீஷிற்கோ இன்று தான் தன்னிடம் ரிகா சிரித்து பேசியிருக்கிறாள், மனம் விட்டு தன்னிடம் எப்போது பேசினாலும், இன்று போல் அவளிடம் மாற்றம் இல்லையே… இன்று மட்டும் ஏன்?... அவள் வாழ்வின் சிக்கலின் நூல் முனை கிடைக்காதா எனக்கு விரைவில்… என்று கடவுளை வேண்டிக்கொண்டான்…

“என் வாழ்வில் இன்று சந்தோஷம் கொண்டேன்… ஏனென்று எனக்கு தெரியவில்லை..

ஸ்ரீராம்… காப்பாற்று….” என்று ரிகா, தனது டைரியை எடுத்து எழுதினாள்…

அனைவரும் உறங்கிவிட, இரு மனம் மட்டும் உறங்காமல் இருந்தது…

இரவும் அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தது… இவர்கள் அனைவரின் எண்ணங்களுக்கு விடிவும், வழியும் கிடைக்குமா என்ற ஆவலுடன்…

நாமும் காத்திருப்போம்… காதல் நதியின் அடுத்த வார பயணத்தை நோக்கி….

இந்த வார பதிப்பில், சில கருத்துக்கள் சொல்லிருக்கிறேன்… அது தவறாகவோ, யார் மனதையும் நோக செய்வதாகவோ இருந்திருந்தால் மன்னித்து விடுங்கள்… இந்த வாரம் உங்களின் சில வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்… ஓரளவு…

மீண்டும் காதல் நதியில் சந்திப்போம்…

தொடரும்

Go to episode # 03

Go to episode # 05

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.