(Reading time: 33 - 66 minutes)

 

னு ஷன்வி-ரிகாவை அழைத்த விவரத்தைக் கூற, ஷன்வி, ஹரீஷ் தங்களுக்கு தெரிந்தவர் என்ற விவரத்தைக் கூறினாள்…

“நேற்று போனில் பேசும்போது ஏன் சொல்லவில்லை… இங்கே போகிறாயென…” என்று சிறு கோபத்துடன் ஹரீஷ் ரிகாவிடம் கேட்டான்…

“இல்லை… இன்னைக்கு மதியம் தான் தெரியும்…”

“ஓ!!... சரிடா… சொல்லியிருந்தால், சேர்ந்தே வந்திருக்கலாமே… அதான் கேட்டேண்டா…” 

“ஹையோ டாக்டர், அவள் உங்களிடம் சொல்ல தான் நினைத்தாள்.. நான் தான் வந்து சொல்லிக்கலாமென்று சொல்லி அவளை இழுத்து வந்தேன்…” என்றாள் ஷன்வி…

“ஆமா… ஹரீஷ்… கோபப்படாதீங்க… ப்ளீஸ்…”

“ஹே லூசு… உன்மேல் எனக்கு கோபமே வராதுடா… வந்தாலும் உடனே போயிடும்டா…”

“ஹ்ம்ம்… சரிங்க…”

“நல்லா சிரிச்சிட்டே தான் சொல்லேண்டா…”

“ஹ்ம்ம்… போதுமா?...”

“போதாது தான்… பட், இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் ரிகா ஹ்ம்ம்.. ரிகா…” என்று சொல்லி சிரித்தான் ஹரீஷ்…

“பரவாயில்லையே… ரிகா அபி, அப்பறம் உங்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் சிரிச்சு பேசுறா… ஹ்ம்ம் எங்ககிட்ட மட்டும் தான் மௌனம் போல… ஹ்ம்ம்…” என்று அலுத்துக் கொண்டாள் அனு…

“அக்கா… என் ரிகா என்னிடம் சிரித்து பேசாமல் வேறு யாரிடம் சிரித்து பேசுவாளாம்?...” என்று மகிழ்வுடன் கூறினான்…

“அப்போ நீ சொன்னா ரிகா கேட்பாள் அப்படிதானே?...”

“கண்டிப்பாக…” என்று பதில் சொன்னது அவன் இல்லை ரிகா…

“ஏய்… வாலு… அக்கா… என்னிடம் தானே கேட்டாங்க… நீ ஏன் பதில் சொன்ன?.. அவசரக்குடுக்கை…” என்று அவளது தலையில் செல்லமாக குட்டினான்…

அதை இருஜோடி கண்கள் வியப்பாக பார்த்தது…

“எக்ஸ்க்யூஸ்மீ…” என்று தனக்கு வந்த போனை எடுத்து பேசிக்கொண்டே போய்விட்டான் ஆதர்ஷ்…

சிறிது நேர பொதுவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரிகாவும் ஷன்வியும் கிளம்புகிறோம் என சொன்ன போது, கோதை, “நேரமாச்சேம்மா… எப்படி தனியா போவீங்க?...” என்று ஒரு தாயாய் தவித்தார்…

“காரில் தான்மா வந்தோம்… சீக்கிரம் போயிடுவோம்…” என்று ரிகா கூறினாள்…

“ஆமா அம்மா… நாங்க பத்திரமா வீட்டிற்கு போயிடுவோம்….” என்று ஷன்வியும் கூறினாள்…

யார் என்ன சொன்னபோதும் அந்த தாயின் மனது சமாதானமடைய மறுத்தது… ஆதர்ஷை அழைத்து விட்டுவர சொல்லலாமா என்று யோசிக்கும்போதே, “நான் அவர்களை விட்டுவிட்டு வருகிறேன்… சந்தோஷமா அம்மா… இப்போ?...” என்று அவ்னீஷ் கேட்டான்…

“ரொம்ப சந்தோஷம் டா ஈஷ்…” என்று அனு சொன்னாள்…

“சும்மா இருடி… எப்ப பாரு அவனை எதாவது சொல்வதே உனக்கு வழக்கமாப் போச்சு…” என்று குற்றம் சாட்டினார் கோதை…

“சரிம்மா… கிளம்புறோம்…” என்றாள் ரிகா…

“போயிட்டு வாங்கம்மா ரெண்டுபேரும்… அவ்னீஷ்… நீயும் சீக்கிரம் வந்துடுப்பா…” என்றார் கோதை…

“இந்நேரத்தில் அவ்னீஷ் எங்கம்மா காரில் போறான்?...”

“வா முகிலா… கேசரி நல்லா இருந்துச்சா?... அவ்னீஷ்… ஷன்வி-ரிகாவை விட போயிருக்கான்ப்பா…”

சரிதான்… சும்மாவே அவன் ஆடிட்டிருக்கான்… நீங்க இப்படி கோடு போட்டு கொடுத்தா அவன் ரோடு போடாம விடவா செய்வான்… என்று நினைத்தவன், “நீங்க பண்ணின கேசரி என்னைக்கும்மா நல்லா இல்லாம இருந்திருக்கு…” என்று தாயைக் கட்டிக் கொண்டான்…

“டேய்… டேய்… போதும்டா… அன்னை ஓர் ஆலயம்ன்னு பாட்டு பாடாம, போய் படுத்து தூங்கு…” என்று அனு கூறினாள்…

“அக்கா… மாமா… உன்னை வர சொன்னாரு… நான் மறந்திட்டேன்… பார்த்தியா… இப்போ போ… சீக்கிரம்..”

“அடப்பாவி… இத அப்பவே சொல்லுறதுக்கு என்னடா… வானரமே…”

“அதான் இப்ப சொல்லிட்டேன்ல… கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்…”

“போடா… லூசு…”

“நீ போ… பெரிய லூசு…”

“அடடா… இன்னும் சின்னப் பிள்ளைங்க மாதிரி சண்டைப் போட்டுகிட்டு… கடவுளே… அனு.. நீ போ… முகிலா… நீ ஆதர்ஷ் கூட போய் படுத்து தூங்கு… ஹரீஷையும் கூட்டிட்டு போ…” என்றார் கோதை…

“ஹரீஷ்… நீ இங்கே எப்படியும் கொஞ்ச நாள் தங்கணும்… நாம எல்லோரும் இன்னைக்கு இந்த ரூமில் தான் தூங்க போறோம்…”

“யாரெல்லாம் டா?...”

“நீ, நான், ஆதர்ஷ், அவ்னீஷ்…”

“ஓ… சரிடா…”

“ஆதர்ஷ்… எங்கடா?...”

“போன் வந்துச்சுன்னு பேச போனவன் இன்னும் வரலையா?...”

“ஓ… சரிடா… நான் தேடி கூட்டிட்டு வரேன்… நீ இரு…”

“சரிடா…”

ஆதர்ஷைத் தேடி அலைந்தவன், அவன் தனியே வெளியே யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்…

“இன்னுமாடா பேசுற?...”

“சரி… செல்வம்… நான் சொன்னதெல்லாம்… செய்திடுங்க…” என்றபடி போனை ஆஃப் செய்தான்…

“ஆஃபீஸ் விஷயமா பேசிட்டிருந்தேண்டா…”

“எதும் பிரச்சினையாடா?...”

“ஆஃபீஸில் எனக்கென்னடா பிரச்சினை வரப் போகுது?...”

“அதான… வந்தாலும் நீ தான் தனியாவே சமாளிச்சிடுவியே…”

“ஹாஹாஹா… துணைக்கு நீ இருக்கியே… பின்னே என்னடா…”

“சரிதான்… எப்படி இப்போ அவ்னீஷ் துணையா போயிருக்கானே… அப்படியா?..”

“என்னடா சொல்லுற?...”

அவ்னீஷ் ஷன்வி-ரிகாவை விட்டுவர போன தகவலைத் தெரிவித்தவன், லேசான வருத்தம் காட்டினான்…

“அதுல உனக்கு வருத்தம் என்னடா?”

“அந்த ரிகாவை பார்க்கவே இல்லையே… சே… அதான்…”

“டேய்… என் தங்கைக்கு இப்பவே சொல்லுறேண்டா…”

“மச்சான்… நான் பொதுவா தான் சொன்னேன்… நீ ஏண்டா கோபப்படுற?... சரி… நீ ரிகாவிற்கு தேங்க்ஸ் சொல்லிட்டியா?”

“ஹ்ம்ம்… சொன்னேன்…”

“சரிடா வா உள்ளே போகலாம்…”

“ஹ்ம்ம்… வாடா…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.