(Reading time: 33 - 66 minutes)

 

ச்சான்… ஏண்டா, அவனை மிரட்டின?...”

“இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கே அது தெரியும் பாருடா ஆதி…”

“யாரடா சொல்லுற முகிலா?...”

“பொறுத்திருந்து தான் பாரேண்டா டாக்டர்…”

“ஹ்ம்ம்.. சரிடா…” என்றனர் ஆதியும் ஹரீஷும்…

“ஹ்ம்ம் சரின்னு இங்க நின்னுட்டே சொல்லிட்டே இருந்தா காரியமே கெட்டுடும்… வாங்கடா சீக்கிரம்…” என்று சொல்லியபடி ஒடினான் முகிலன்… அவனைத் தொடர்ந்து ஒடினர் இருவரும்…

“ஏண்டா ஆதி… இவன் தினம் காலையில் ஓட மாட்டானா?... இப்போ இந்த நைட் டைமில் ஏண்டா படுத்துறான்?...”

“ஓடு அப்போ தான்… உனக்கு இருக்குற கொஞ்சம் கொழுப்பும் குறையும்…”

“ஆமாண்டா… உன்னை விட கம்மிதான் எனக்கு…”

“எனக்கு சுத்தமாவே இல்லை மச்சான்… நீயே பாரேன்…”

“டேய்… ஓடி வர சொன்னா அங்க ஸ்லோ மோஷனில் என்னடா பண்ணுறீங்க?...”

“இதோ வந்துட்டோம்டா…” என்றபடி சொல்லிக்கொண்டே வந்த இருவரும் வீட்டினுள் நுழைய முற்படும்போது, முகிலன் யாரையோ எதிர்ப்பார்த்து நின்றிருந்தான்…

“அடேய்… வானரமே… ஓடி வர சொல்லிட்டு இங்க யாரடா தேடுற?...”

“உங்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கறவங்க எல்லாம் ரொம்ப பாவம் தாண்டா… பொறுமையே இல்லடா உனக்கு கொஞ்சம் கூட…”

“அடேய்… வேண்டாம்… என் பொறுமை இப்போ காத்துல பறக்க போகுது பாரு…” என்று அடிக்க ஹரீஷ் கையை ஓங்கும்போது,

“அங்கே பாருடா ஆதி…” என்று அவன் கை காட்டிய திசையில் அவ்னீஷ் ரிகாவுடன் வேகமாக வந்து கொண்டிருந்தான்…

“டேய்… இங்க வாங்கடா… அவங்களுக்கு தெரியாம இங்கே மறைஞ்சுக்கலாம்…” என்று அவர்கள் இருவரையும் இழுத்தான்…

“நல்ல வேளை… அண்ணா வருவதற்குள் நாம் வந்துவிட்டோம்… உள்ளே போகலாமா?..”

“உள்ளே நாங்களும் வரலாமா அவ்னீஷ்?...”

சத்தம் வந்த திசையைப் பார்த்தவன் தலையில் கைவைத்து கொண்டான்…

“ஏண்டா.. தலைவலியா… கவலைப் படாதே… கைவசம் டாக்டர் இருக்கார்…”

“தலை வலி எல்லாம் ஒன்னுமில்லை அண்ணா… தூசி இருந்துச்சு, தட்டி விட்டேன்…”

“தூசி… ஹ்ம்ம்… உன் தலையில… கேட்டியாடா ஆதி?...”

“கேட்டேண்டா மச்சான்…”

“அண்ணா… விடுங்க.. விடுங்க…”

“நான் எதையும் புடிச்சு வைக்கலையேடா.. நீ எத விட சொல்லுற?...”

ஹ்ம்ம்… இவர் விட்டா பேசிட்டே போவார், “அண்ணா, இவங்க ஷன்வி… ஷன்வி இவங்க ஆதர்ஷ் அண்ணா.. இவங்க முகிலன் அண்ணா…” என்று அறிமுகப் படுத்தி வைத்தான்…

“வணக்கம் ஷன்வி…” என்று இருவரும் ஒருசேர சொன்னார்கள்… அவளும் பதிலுக்கு வணக்கம் சொன்னாள்…

அப்போது அங்கே வந்த அனு, “வா ஷன்வி, ரொம்ப லேட் செய்துட்டேனா?...” என்று கேட்டபடி அவளை அழைத்துச் சென்றாள்…

ஷன்வி போவதையே ஒருவித ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவ்னீஷ்…

‘என்னடா… இவன்.. அந்த பெண் போவதையே பார்த்துட்டிருக்கான்..”

“வயசு செய்யும் கோளாறுடா ஆதி…”

“ஹ்ம்ம்…”

“என்ன முகில் அண்ணா உங்களுக்குள்ளே பேசிக்கிறீங்க?...”

“அந்த பொண்ணு ஸ்கூல் நடத்துறாங்கன்னு சொன்னியே…. அதான்…”

“ஹ்ம்ம் ஆமா அண்ணா, ஷன்வியும் அவங்க ஃப்ரெண்ட் ரிகாவும் சேர்ந்து நடத்துறாங்க…”

“ஓஹோ…”

“அண்ணா, எதோ டாக்டர் இருக்காருன்னு சொன்னீங்க… யாரும் இல்லை இங்க.. நம்மைத் தவிர…”

“இப்போ வருவாரு பாரு… ஆதி.. கூப்பிடுடா அவனை…”

“டாக்டர் வாங்க…”

அங்கே வந்தவனைக் கண்ட அவ்னீஷ் வேகமாய் அவன் அருகில் சென்று, “டாக்டர் நீங்க… இங்க எப்படி?... ரொம்ப நன்றி டாக்டர்… அன்னைக்கு நீங்க செஞ்ச உதவிக்கு…” என்று அவனின் கையை பிடித்துகொண்டான்…

‘இல்லங்க… நான் தான் நன்றி சொல்லணும்… என் வாழ்க்கையில் உங்களுக்கே தெரியாம நல்லது செய்திருக்கீங்க… ரொம்ப நன்றி சார்…”

“நான் நல்லது செய்தேனா?...”

“ஆமா… ஒரு உயிரை காப்பாற்ற வாய்ப்பு கொடுத்து எனக்கு புண்ணியம் கிடைக்க நல்லது செய்தீங்க இல்லையா… அத தான் சொன்னேன்…”

“ஹலோ… ஹலோ.. ஸ்டாப் ஸ்டாப்… என்னப்பா நடக்குது இங்க…”

“அதான… அப்படி கேளுடா முகிலா… நாம இவங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று பார்த்தால் இவர்கள் நமக்கே அறிமுகம் கொடுப்பாங்க போலயே…”

“ரொம்ப சரியா சொன்னடா ஆதி…”

“சரி அண்ணா நீங்களே அறிமுகம் செய்து வைங்க…”

“ஹ்ம்ம்… இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு… பெரியவங்க நாங்க எதுக்கு இங்க இருக்கோம்?...”

“பெரியவங்களா?... யாருடா?...”

“நாம தான் டா ஆதி…”

“இந்த வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம் மச்சான்… நீ மட்டும்னு சொல்லு… என்னையும் தேவை இல்லாம உள்ளே இழுக்காதே…”

“சரிடா சரிடா… சுட்டெரிச்சிடாத… இந்த இரவு நேரத்திலேயும்…”

“ஹரீஷ்… அவ்னீஷை உனக்கு முன்னாடியே தெரியுமாடா?...”

“தெரியும்டா… டூ டைம்ஸ் மீட் பண்ணியிருக்கேன்…”

“எப்படிடா… எங்கே?...”

“அண்ணா, அத நான் சொல்றேன்… நம்ம கிளையண்ட் ஒருத்தங்க அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருந்தாங்க… அவங்களை காப்பாற்றி கொடுத்தது இவர் தான் ஆதி அண்ணா…”

“அண்ணாவா?... அப்போ இவங்க?...” என்று ஹரீஷ் இழுக்க,

“அதே தான் டா நண்பா… இவன் தான் கடைக்குட்டி… அவ்னீஷ்…”

“ஓ… ஒவ்வொரு டைமும் நான் பார்க்காம மிஸ் பண்ணுவேனே… அது இவர்தானா?...”

“ஆமா ஹரீஷ்… அவனை வா போ- ன்னு சொல்லு… சின்னப்பையன் தாண்டா…”

“யாரு இவனா… சின்னப்பையன்?... இவன் இப்போ பெரிய வேலை எல்லாம் செய்யறாண்டா ஆதி…”

“அ…..அ….ண்….ணா… அம்மா… உங்களைக் காணோம்னு ரொம்ப நேரமா தேடினாங்க… நான் ஹரீஷ் அண்ணாவைப் பார்த்ததில் மறந்துட்டேன்… உங்களுக்குப் பிடிச்ச கேசரியோட அம்மா வெயிட்டிங்…”

“ஈஷ்… இத தாண்டா.. நீ முதலிலேயே சொல்லியிருக்கணும்… இருடா… உன்னை கேசரி சாப்பிட்டு வந்து அடிக்குறேன்… நல்ல வேளை… இப்பவே சொன்னியே… இந்த ஆதிக்கு கேசரி கிடைக்கிறதுக்கு முன்னாடி நான் போய் காலி பண்ணிடுறேன்…” என்று ஒடிவிட்டான் முகிலன்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.