(Reading time: 51 - 101 minutes)

 

" ஹேய் வாலு... வாசல்ல அர்ஜுனை நிக்க வெச்சுட்டு இங்க என்ன பண்ணுற ? அவன் உன்னைத்தான் வந்ததுமே தேடினான் .. சீக்கிரம் வா மா .. இல்லனா உன் ஆளுகிட்ட இருந்து என்னாலே ஓட்டம் பிடிக்க முடியாது பா "

"...."

"  ஹே சுபா அழுதியா என்னாச்சுடா ? " என்று சிவாஜி கணேசன் சார் ஸ்டைல்ல நம்ம ரகு பேசி என்ன பயன் ? அர்ஜுன் வந்தாச்சுனு சொன்னதுமே நம்ம சுபத்ரா சிட்டாக பறந்து போய்ட்டாளே ...அவளுக்கு ஈடுகொடுத்து ரகுவும் ஹாலுக்கு ஓடி வர, அங்கு அவர்கள் கண்ட காட்சியில் அதிசயித்து போயினர் இருவரும்.

" என்ன மாப்பிளை இதுக்கு போயி ? "

" அதுனால என்ன மாமா ...எனக்கு சுபி வாய்ஸ் கேட்டதுமே மனசு கேட்கல ...அதான் ...."

" நல்ல புள்ள போங்க ... ரொம்ப சந்தோசம் மாப்பிளை ... எங்க பொண்ணு கொடுத்து வெச்சவ ....  அபி மாப்பிளைக்கு காபி கொண்டு வாம்மா" என்றார் சூர்ய பிரகாஷ் .

" இருக்கட்டும் அத்தை......மகாவுக்கு வேணும்னா கொடுங்க  ...மாமா ...நான் ஒன்னு கேட்கவா ? "

" சொல்லுங்க மாப்பிளை என் பெண்ணையே தர போறோம் வேறென்ன வேணும் ? " இந்த கடைசி வாக்கியத்தை கேட்டு  இன்ப அதிர்ச்சியில் நின்றனர் ரகுவும் சுபாவும் ....

( இது எப்போடா நடந்துச்சு ? அப்படின்னு கண்ணை உருட்டிகிட்டு பார்ககாதிங்க.... எப்படியும் நம்ம  சுபாவும் இதே கேள்வியை அர்ஜுன் கிட்ட  கேட்கும்போது நான் ஒரு பிளாஷ் பேக் சீன் சொல்றேன் )

இப்படியாய் நம்ம அர்ஜுனும் சூர்யா சாரும் பலே பாண்டியா  ஸ்டைல்ல ' மாமா மாப்பிளை 'நு கொஞ்சிகொண்டிருக்கும்போதே  அவர்கள் பக்கம் ஓடி வந்தாள் சுபத்ரா ... விழிகள்  விரிய தன பெரியப்பாவை பார்த்தவள்,

" பெரியப்பா ... நீங்க அர்ஜுனை ....மாப்பிளை ...........அவரு மாமா நு ... உங்களை " என்று மகிழ்ச்சியில் வார்த்தைகளை தேடி தேடி பேசினாள்....

" ரிலாக்ஸ் சுபி " என்று அர்ஜுன் அவளை பார்த்து கண்ணடிக்க " ஹப்பாடா அர்ஜுனுக்கு கோபமில்லை " என்று பெருமூச்சுவிட்டு தன் பெரியப்பாவின் புறம் திரும்பினாள் சுபத்ரா ....

" சொல்லுங்க பெரியப்பா "

" ஹா ஹா என்னடாம்மா ? "

" அர்ஜுன் .........."

" சுபா, உங்க காதல் விஷயம் எங்களுக்கு எப்பவோ தெரியும் .. மாப்பிள்ளையும் என்கிட்ட நேரடியா வந்து பேசிட்டார் ... நம்ம வீட்டுல எல்லாருக்கும் மனபூர்வமான சம்மதம் ... மிச்சத்தை நீ உன் அர்ஜுன் கிட்டயே கேட்டுக்கோ "

" உன் அர்ஜுன் " அந்த வார்த்தைக்கும்தான் எத்தனை ஷக்தி ...

" என் அர்ஜுன் .. என் அர்ஜுன் ... " இவ்வளவு இனிமையான வார்த்தையா இது ? என்றபடி மனதிற்குள் சொல்லி கொண்டாள் சுபத்ரா .... அர்ஜுன் சுபத்ரா மீது வைத்திருக்கும் காதல் நாம் அனைவரும் அறிந்ததே ... அதேபோல் சுபத்ராவும் அல்லவா அவன் மீது காதலுடன் இருக்கிறாள்.

அவனை பார்த்த முதல் தினத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு அவனுடன்  பழகிய இத்தனை நாட்களில் அணு அணுவாய் வளர்ந்துகொண்டே அல்லவா இருக்கிறது ..எத்தனை நாட்கள் அவனின் நினைவுகளில் பகல் கனவு கண்டிருப்பாள், எத்தனை நாட்கள் அவனின் அருகாமைக்கு ஏங்கி இருப்பாள், எத்தனை நாட்கள் அவன் கரம் பற்ற தன் பெற்றோரின் சம்மதம் அவசியமே என்று மருகியிருப்பாள்...

அதீத மகிழ்ச்சியில்  இருக்கும் பலருக்கு , அடுத்த நொடியில் அம்மகிழ்ச்சி  பறிபோய் விடுமோ என்ற பயம் இருக்கும்.. சுபத்ராவும் அப்படித்தான் .. அர்ஜுனனை கண்டவுடனே அவன்பால் ஈர்க்கப்பட்டாள், இரண்டாம் சந்திப்பிலேயே காதல் கொண்டாள், மூன்றாம் சந்திப்பிலேயே இருவரும் இறைவனை சாட்சியாய் வைத்து தங்கள் இதயத்தை இடம்பெயர்த்தனர் ... என்று தனது இதயத்தை அவனிடம் தந்துவிட்டு அவனின் இதயத்தை தன்னுடன் வைத்துகொண்டாளோ அன்றே அவள் அந்த சிறையில் பாதம் பதித்தாள்..........

ஆம் , அது சிறைதான்...அவளுக்காக மட்டும் அவன் அன்பெனும் சுவரால் எழுப்பிய அழகிய சிறை ... அவளே விடுபட நினைத்தாலும் இம்மியளவும் நகரமுடியாத சிறை .. செல்லும் திசை எங்கும் அர்ஜுனன் மட்டுமே வியாபித்திருக்கும் சிறை ... அப்படி பட்ட வசந்தகால வாழ்வில் வாழ்ந்தாலும் மனமானது அவ்வப்போது எதிர்காலத்தை எண்ணி வருந்தும்..

எந்த தடையும் இன்றி அவன் கரங்களால் மாங்கல்யம் பெற்றுவிடு மாட்டோமோ என்று கெஞ்சும் அவள் மனம் .... சுப்ரியாவிற்கு கிடைக்காத அந்த வரம், சுபத்ராவிற்கு கிடைத்தது... ஆம் , அன்று அவள் அந்த மாயக்கண்ணனிடம் மன்றாடியது கிட்டியது .. அவன் எண்ணியது போலவே அவளின் பெற்றோர் சம்மதம் கிட்டியது ... இதோ , இதோ அவளில் மார்பிலும் தோளிலும் தாங்கி வளர்த்த அவளின் பெரியப்பாவே சொல்லிவிடாரே " உன் அர்ஜுன் " என்று ... ! இதை தாண்டி என்ன வேண்டும் அவளுக்கு ?

காதல் மனமோ நிம்மதியில் விம்மியது ... " வேறென்ன வேணும் நீ போதுமே " என்று தன் அர்ஜுனனை பார்த்து விம்மியது ... கண்களை நீர்கொர்க்க, ஆனந்தத்தில் நடப்பது எதையுமே உணராமல் இருந்தவளை, அர்ஜுனன் தொட்டு உலுக்கினான் .

" சுபி என்னடா ஆச்சு ? "

அப்போதும் அமைதியாக  இருந்தவளிடம் அர்ஜுனன் காதோடு கிசுகிசுத்தான் ...

" கண்மணி, எல்லாரும் பார்க்குறாங்க .. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப் "

" அட என்  தங்கச்சி சுபாவா இப்படி வாய் பேசாம நிற்குறது ? " என்று வாரினான் ரகுராம்... அவன் புறம் திரும்பியவள்,

" பின்ன, உனக்கு தங்கச்சியா இருந்தா உன்னை மாதிரி அடங்காதவனா இருக்கனுமா ? நான் சமத்து பொண்ணு ..போடா " என்ற சுபத்ரா இயல்பு நிலைக்கு மாறி இருந்தாள்....

" ஆமா அர்ஜுன், சார் யாருன்னு சொல்லவே இல்லையே ? " என்று புதியவனை பார்த்து ரகுராம் கேட்க, அர்ஜுன் சொல்வதற்கு முன்பே சிநேகமான புன்னகையுடன் பேச ஆரம்பித்தான் அப்புதியவன்.

" ஐ எம் மகரந்தன்... அர்ஜுனுடைய ப்ரண்ட்...  பக்கத்துல நிர்மலா ஹாஸ்பிடல்ல டாக்டரா இருக்கேன் ... டியூட்டி கு கிளம்பிட்டு இருந்த என்னை கடத்திட்டு வந்துட்டான் என் ஆருயிர் நண்பன்.... " என்று  எரிச்சலும்  பெருமையுமாய் அர்ஜுனை பார்த்து சொன்னான் அவன் ....

ஒரு அசட்டு சிரிப்பு சிரித்த அர்ஜுன், அனைவருக்குமே விளக்கம் அளிக்கும் விதமாய் " அது வந்து, சுபி கிட்ட பேசும்போதுதான் அவளுக்கு  3 நாளாக இருமல்னு சொன்னா...ஏற்கனவே ஊட்டிக்கு போறாளே சோ அதுக்கு முன்னாடி டாக்டர் பார்த்து மருந்து எடுத்துகிட்ட நல்லதுன்னு நெனச்சேன் ... ஹாஸ்பிடலுக்கு சுபி கூட்டிடு போய்டு வர லேட் ஆகிடும் .. சரி நமக்கு ஹாஸ்பிடல் ஆ வேணும் ? டாக்டர் தானே வேணும்? அதான் இவனை கடத்திட்டு வந்துட்டேன் " என்றபடி அவனது தோளில் கை போட்டான்.

அர்ஜுனனின் அன்பை மனதிற்குள் மெச்சினர் பெரியோர்கள் அனைவரும் ...எல்லா பெற்றோரின் ஆசையுமே தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு துணையை தேடி தந்து நல்வாழ்வு அமைத்து வைப்பதல்லவா? ஆகா இப்படி ஒரு மாப்பிளை கிடைத்ததில் அவர்களுக்கு அளவு கடந்த நிம்மதி...  ரகுராமும் மனதிற்குள் தன் தங்கைக்கு அமைந்த நல்வாழ்கையை எண்ணி மகிழ்ந்தான் ...

சுபத்ரா மட்டும் வார்த்தைகள் இல்லா மௌனத்தில் ஆழ்ந்தாள்...அதனால்தான் சற்று முன்பு அவன் போனை எடுக்க வில்லையா ? எப்படி ஒருவனால் இப்படி அனைத்தையுமே பார்த்து பார்த்து செய்ய முடியும் .? அப்படி என்ன அர்ஜுன் செய்து விட்டேன் நான் ? பார்வையால் அவனை வினவினாள் ... அர்ஜுனோ ' உனக்காக நான், உன்னோடு நான் ' என்று பார்வையாலே பதிலளித்தான் ... அந்த சூழ்நிலைக்கு தோதாக தொலைகாட்சியில் அந்த பாடல் வரிகள் ஒலித்தன ...

" மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்

வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வியர்வை வரும்

உடல்கள்தான் ரெண்டு

உணர்வுகள் ஒன்று

ரோஜா ரோஜா ரோஜா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.