(Reading time: 51 - 101 minutes)

 

குராமின் கார் ....

வழக்கம்போல காரை லாவகமாக  செலுத்தி கொண்டிருந்த ரகுராமின் சிந்தனையில் காலையில் மது பாடிய பாடல் வரிகளே ஓடிக்கொண்டு இருந்தது ..

அந்த பரபரப்பான அலுவலகத்தில் சில ஜீவன்கள் மட்டும்தான் ஜீவனோடு வேலை செய்யும் .. அதாவது சிலர் மட்டும்தான் வேலையை " ஐயோ அம்மா " என்று கடனுக்கே செய்யாமல் புன்னகையுடன் கொடுத்த பணியை ஏற்று செய்வார்கள் .. வேலைப்பளு அதிகம் என்பதால் எப்போதுமே சீரியாசாக  இருக்கும்  மற்றவர்களை எந்த விதத்திலும் ரகுராமல் குறை சொல்ல முடியவில்லை .. இப்படி இருக்க, நம்ம மது மட்டும் இடியே விழுந்தாலும் கவிதை, பாடல் சிரிப்பு புன்னகை என்று ஜீவனோடு பணிபுரிவாள்..அவளுக்கே தெரியாமல் அவளின் பாடலை ரசித்து கேட்பவர்களும் ஆபீசில் உண்டு .. அதில் ரகுராமும் ஒருவன் ... எப்போதும் போல அன்றும் பாட்டு பாடி கொண்டிருந்தாள்  மது ...

" சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்தத்திற்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சுவர்க்கத்தில் சேராது "

ஏனோ அவ்வழியாக நடந்த ரகுராமின் செவியில் " சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது " என்ற பாடல் வரி மட்டும் அழுத்தமாய் கேட்டதுபோல உணர்வு ...

உண்மைதான் ... என்னதான் அவன் அவள் மீது கடலளவு அன்பு வைத்திருந்தாலும் .. அதை வார்த்தையால் சொல்லாமல், அவள் புரிந்துகொள்வாள்  என்று எதிர்பார்ப்பது தவறல்லவா ? ஜானகியிடம் மாற்றங்களை அவன் உணர்ந்தான் தான் ... பல முறை அவனும் தன் காதல் பார்வையை வீசினான் தான் .. எனினும் வார்த்தைகளால் அவன் தன்  காதலை சொல்லாமல் இருப்பது சரியென்று ஆகிவிடுமா ? இப்படி சிந்தனையில் இருக்கும்போதுதான் அர்ஜுன், சுபா, மீரா, கிருஷ்ணா நால்வரும் ஊட்டிக்கு போகும் விஷயத்தை அவன் அறிந்துகொண்டான் .. தனிமையில் இருக்கும்போது இதை பற்றி சிந்திப்பதற்கு ஜானகிக்கும் இது நல்ல வாய்ப்பு என்று அவன் கருதினான் .. அவளின் முடிவு எதுவாகினும் அது  யாரையும் சார்ந்திருக்காமல் இயல்பாய்  இருக்கவேண்டுமென விழைந்தான் ரகுராம் .. எனவே ஜானகியிடம் காதல் சொல்ல இதுவே தகுந்த நேரம் என்று முடிவெடுத்தான் ...

" என்ன யோசனை ரகு ? "

" ஹ்ம்ம் ஒன்னுல ... ஜானு நான் ஒன்னு கேட்கவா ? "

" ரெண்டு கூட கேளுங்க ரகு ! "

" வரவர உனக்கு வாய் ஜாஸ்த்தி ஆச்சு ஜானு  "

" பூவுடன் சேர்ந்த நாரும் மணக்குது ரகு "

" அம்மா தாயே நான் கேட்க வந்ததை மறக்க வெச்சுடுவே போல "

" ஹா ஹா சரிதான் கேளுங்க "

" உனக்கு கோபம் வந்தா நீ என்ன பண்ணுவே ? "

" என்ன திடீர்னு ? "

" சும்மா ஜெனரல் நொலெட்ஜ்  நு வெச்சுக்கோயேன் "

" ஹ்ம்ம்ம்ம்ம் " என்று நெற்றி பொட்டில்  ஆள்காட்டி விரலால் தட்டி சிந்தித்தவளை கேலியாய்

" பார்த்துடா மூளை வெளிய சிதறிட போகுது " என்றான்

" வெவ்வெவ்வெவ்வெவ்வெ .............. கொஞ்சம் கோபம் வந்தா யாரு மேல கோபமா அவங்க கிட்ட எதுவும் பேசாமல் அமைதியா இருப்பேன் "

" சரி ரொம்ப கோபம்னா ? "

" ரொம்ப கோபம்னா ........ சொன்னா  சிரிக்க கூடாது  "

" சிரிக்க கூடாதா... ஹா ஹா சரி .. சிரிக்கல சொல்லு "

" ரொம்ப கோபம் வந்தா நான் அழுதுடுவேன் "

" என்னது ? "

" ஆமா ரகு, கோபத்துல வார்த்தையை கொட்டிட்டா அதை அள்ளிட முடியாது .. அண்ட் எனக்கு முன்னலாம் கோபம் வந்தா என்ன பேசுறேன்னு எனக்கே  தெரியாமலே பொரிஞ்சு தள்ளிடுவேன் ... ஒரு கட்டத்துக்கு மேல அது தப்புன்னு புரிஞ்சது .. அதுக்கு அப்பறம் கோபம் வந்தா அமைதியா இருந்துடுவேன் .. சில நேரம் அதுவே இன்னும் டென்ஷன் தர்ற அழுதுடுவேன் ரகு "

" ஹா ஹா ஹா "

" ப்ச்ச்ச் சிரிக்கதிங்கனனு சொன்னேனே ரகு "

" சரி மேடம் கூல் டவுன் .. சரி நாளைக்கு காலையில் என்ன பிளான் ? "

" மீட்டிங் எதுவும் இல்லையே ... சோ ஆபீஸ் லதான் வேலை பாஸ் ... "

" சரி அப்போ நாளைக்கு காலையில் கோவிலுக்கு போகலாம் .. "

" என்ன திடீர்னு ரகு ? "

" நாளைக்கு சொல்லுறேன் ஜானகி "

இப்படியாய் ரகு தன்  காதலை வெளிபடுத்த தயாராகிவிட, அன்றைய இரவு அவனுக்கும் தூங்கா இரவுதான் .. ( ஆனால் இந்த தூங்கா இரவு நாடகம் இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என்பதை அவனுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.... ஏன் ??? ஏன்னா நான் ரகுகிட்ட சொல்லலியே......சரி சரி அப்படிலாம் முறைக்க கூடாது ..வாங்க நாமளும்  தூங்கி எந்திரிச்சு மறுநாளுக்கு செல்வோம்  )

றுநாள்,

" வேணாம் சுபா... உனக்கு பிவரா இருக்கு .... நீ ஒன்னும் வர வேண்டாம் " என்று கவலையுடன் சொன்னாள் நிவிதா ...

" ப்ச்ச்ச் அதுக்காக இப்படியே படுத்திருக்க முடியுமா நிவி ? எனக்கு போர் அடிக்கும்"

" அப்போ நாங்களும் உன்னோடவே இருக்கோம் டீ " - ஸ்வாதி...

" அதெல்லாம் முடியாது நான் வந்தே தீருவேன் "

" சொன்னா கேளுடி .. உன் ஆளுக்கு தெரிஞ்ச நாங்க காலி " இப்படி சொன்னது வேற யாரு நம்ம கீதா தான் ..

" அச்சோ கீத்ஸ் , உன்னையும் கார்த்திக்கையும் காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு சரியா ? "

இப்படியாய் தோழிகள் அனைவரையும் சமாளித்த சுபத்ராவிற்கு அர்ஜுனனை சமாளிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை ....

போனில்,

" சுபி என்ன பண்ணுற ? " என்று கேட்ட அர்ஜுனன் தோழிகளில் கைகளை  திடமாய் பிடித்துகொண்டு  நடந்தவளை பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ... அவன் நினைத்தால் இப்பொழுதே அவளை நிறுத்தி இருக்கலாம்.. எனினும் தற்பொழுது அதற்கு அவசியமில்லை என்று பொறுமை காத்தான் ....

" எல்லாரும் சுத்தி பார்க்க கெளம்பிட்டோம்  அர்ஜுன் "

" ஏன் உன் வாய்ஸ் சரி இல்ல? "

அவன் தன்னை கண்டுகொண்டதை உணர்ந்தவளுக்கு அந்த காய்ச்சலிலும் புன்னகைதான் வந்தது .... அதே குறும்புடன்

" ஹெலோ இளவரசரே என்னம்மோ பக்கத்துல இருந்து பார்க்குற மாதிரி பேசுறிங்க ? நான் நல்லாத்தான் இருக்கேன் " என்று சிரமபட்டு சகஜமாய் பேசினாள்.

" சரி கார்த்திக்கிட்ட போனை கொடு "

" அச்சோ வேணாம் அர்ஜுன் ..இப்போதான் கீதா சொன்னான் அவன் நேத்து எல்லாம் பயத்துல தூங்கவே இல்லையாம் "

" அதெல்லாம் சும்மா சொல்லி இருப்பான் "

" நீங்க வேற அர்ஜுன் .. அவன் தூங்காம இருந்ததும் இல்லாம பேஸ் புக் ல செட் பண்றேன்னு அவளையும் தூங்க விடல "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.