(Reading time: 51 - 101 minutes)

 

" வன் ஏன் என்னை பார்த்தா இப்படி மிரளுறான் ? " என்று தெரியாதது போல அர்ஜுன் கேட்டான்...

" ஓஹோ ஏன்னு உங்களுக்கு தெரியாதா ? ம்ம்ம் ம்ம்ம்...நான் நம்பிட்டேன் " என்று சிரித்தாள் சுபத்ரா.... அவளின் புன்னகையை உள்வாங்கியவன், அவர்கள்  கண்ணில் படாமல் தனது காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, " சரி டா அப்பறம் கூப்பிடுறேன் " என்று போனை வைத்து விட்டான் ...

அவனிடம் பொய் சொன்னது குற்ற உணர்வாக இருந்தாலும் கூட, தன்னை விட்டு தூரத்தில் இருப்பவனை இதையெல்லாம் சொல்லு வருத்துவானேன் ? என்று எண்ணினாள் சுபத்ரா ... அர்ஜுனனுக்குமே  அவள் மறைப்பது கோபத்தை தூண்டினாலும், அவளின்  புன்னகையில்  அது  ஒரு நொடியில் மறைந்தது ... கவசமாய் தான் இருக்க அவளுக்கெதுவும் ஆகாது என்று நம்பியபடி அவர்கள் செல்லும் பஸ்ஸை தொடர்ந்து வாகனத்தை செலுத்தினான்  ... தானும் பின்னால் வருவதை அறிந்தால் அவளின் முகபாவனை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தவன், தனக்குள்ளேயே புன்னகைத்துகொண்டான்... ஆனால்  அவனின் "குட்டிமா" வோ அவனின் கோபத்திற்கு ஆளாவபோவதை அறியாமல் தன் நண்பர்களுடன் முடிந்தவரை உற்சாகமாய் பேசிகொண்டிருந்தாள்... அப்படி என்னதான் பேசிக்கிறாங்க ... எல்லாம் காதல்தான் !!

" அப்படி இப்படின்னு நம்ம கீதாவும் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்துட்டாங்கப்பா.... கொடுத்து வெச்சவன் கார்த்திக் நீ " என்ற ஸ்ரீதரன் ஸ்வாதியை பார்த்து பெருமூச்சு விட்டான்...

" டேய் கம்மியா மூச்சு விடு டா... இஞ்சின் பத்திகிச்சு நு டிரைவர் அரண்டுற போறாரு " என்று பதில் கொடுத்த மோகன் ஸ்வாதிக்கு ஹை 5 கொடுக்க ஸ்ரீதரன் மோகனை முறைத்தான் ...

( கதை என்னன்னா ஸ்ரீதரன் ஒரு விளையாட்டு பிள்ளை .. பெயருக்கு ஏற்ற மாதிரி வசீகர தோற்றத்துடன் இருப்பதினால் அவரு காலேஜ்ல ஒரு தீராத விளையாட்டுபிள்ளை ... அவனை பார்த்த மாத்திரத்திலேயே அவன் பக்கம் ஈர்க்கபட்டாள் ஸ்வாதி...ஒரு நாள் ஏதோ ஒரு தைரியத்தில் அவள் காதலை சொல்ல, அவனோ தன்னை கேலி செய்யவே அப்படி சொல்கிறாள் என்று எண்ணி " கவுண்டர் கொடுக்கிறேன் பேர்வழி " என்று அவள் மனம் புண்பட பேசிவிட்டான் ... சில நாட்களிலேயே இருவருக்கும் உள்ள பனித்திரை விலகினாலும் அவன் மீது இருந்த காதலை முற்றிலுமாய் ஒதுக்கிட்டு படிப்பை கவனிக்க ஆரம்பித்தாள் ஸ்வாதி..அவளின் விலகலே அவன் மனதில் காதல் விதையை போட்டது .. அதை அறிந்த ஸ்வாதிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அன்று அவன் படுத்திய பாடுக்கு பழி வாங்குகிறேன் என்று தன் நண்பன் மோகனுடன் கூட்டணி சேர்ந்தாள்... யப்பா இதுதான் பிளாஷ் பேக் ... ஒரு கதையில எவ்ளோதான் பிளாஷ் பேக் சொல்றதோ... சரி சரி வாங்க )

" நான் மூச்சு விடுறது இருக்கட்டும் ... முதல்ல உனக்கு மூச்சு இருக்குமான்னு பாரு  " என்று காட்டமாக சொன்னான் ஸ்ரீ ...  ( மனதிற்குள்தான் )

" ஆமா நிவி நீ ஏன் யாரையும் லவ் பண்ணல? " என்று கார்த்திக் நிவிதாவை கேட்க

" அடபாவிங்களா  நீங்க எல்லாரும் லவ் பண்றிங்க அதுக்காக நானும் லவ் பண்ணனும்னு ரூல் இருக்கா ? நம்ம குரூப் ஒருத்தியையாவது  அரேன்ஜ் மேரேஜ் பண்ண விடுங்களேன்  " என்று கை கூப்பினாள்.

" அதுவும் சரிதான் ... உலகத்துல ஒருத்தவனாவது கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் நிம்மதியாக இருக்கட்டுமே " என்று கார்த்திக் நேரம் காலம் தெரியாமல் வார

" அப்படியா ..அப்போ நீயும் அதை அனுபவிச்சிகோ கார்த்திக் ..எனக்கொண்ணும் இல்ல ... " என்று பற்களை கடித்தாள் கீதா ...

" ஆஹா லவ் பிரட்ஸ் இப்போ என்கிரி பிரட்ஸ் ஆகா போகுது போல " என்று அனைவரும் கலவரமாக, அவர்களை அழைத்து வந்த லெக்சரர் ஒருவர், " எப்போ பார்த்தாலும் காதல் காதல் காதல் ... இந்த காலத்து புள்ளைங்களுக்கு  வேற பேச்சே இல்ல " என்று பேசிக்கொண்டே தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டார் ...

" சார் என்னம்மோ எங்க ஜெனரேஷன் ல தான் காதல் , டூயட் எல்லாம் கண்டுபுடிச்ச மாதிரி பேசுறிங்க ? எம் ஜி ஆர்  அய்யா காலத்துல இருந்தே எல்லாரும் மரத்தை சுத்தி டூயட் பாடிக்கிடுத்தான் இருக்காங்க " என்ற ஸ்ரீதர் ,

" அதென்ன பாட்டு மச்சான் " என்று யோசிப்பதை போல மோகனை பார்த்தான் ... மோகன் உடனே குரலை கொஞ்சம் மாற்றி

" தொட்டால் பூ மலரும் .. " என்று ஸ்ரீதரும் கை தட்டி அந்த பாடலை பாடினான் ... அதிகம் பேச முடியாத சுபத்ரா அவர்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்...

கொஞ்ச நேரம் முன்னாடி மோகனை பார்த்து ஸ்ரீ முறைத்தது என்ன ... ? இப்போது கொஞ்சுவது என்ன? இதுதான் காலேஜ் வாழ்கை ... இங்க சண்டை இருக்கும் ஆனா த்ரோகம் இருக்காது... எதையும் மன்னிக்கவும் மறக்கவும் அப்பப்போ செல்லமாய் பழிவாங்கவும் கல்லூரி வாழ்க்கை தான் கற்றுக்கொடுத்தது.. அவள் பக்கம் திரும்பிய கீதா

" என்னடீ ? ரொம்ப முடிலையா ? கொஞ்ச நேரம் படுத்துக்கோ" எனவும் " சரி" என தலை அசைத்து லேசாய் கண்களை மூடி அர்ஜுனன் தந்த தலையணையை கட்டிகொண்டாள்.

(இப்போ  இந்த சீனை இங்கயே கட் பண்ணிட்டு எல்லாரும் சென்னையில் இருக்குற, அந்த அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு உங்கள் கற்பனை எனும் கேமராவை கொண்டு வாங்க பார்ப்போம் ... குட் குட் அப்படித்தானே... )

கு- ஜானகி

" இப்படி உட்காரு ஜானகி ... "

"... "

" என்ன மேடம் ... ஒரு கண்ணுல சோகம் ஒரு கண்ணுல சந்தோஷம்னு இருக்கீங்க ? என்ன விஷயம் ... "

" அது "

" சும்மா சொல்லு ஜானு "

" இந்த கோவில் எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில் ரகு ... அப்பா இருக்கும்போது அடிக்கடி இங்க வருவேன் ...  அவர் இறந்த பிறகு இங்கு வர்றதே இல்ல .. அதான் அப்பா ஞாபகம் வந்துடுச்சு "

" ஐ எம் சாரி டா ..  "

" ஐயோ நீங்க கேட்டிங்களேன்னு தான் சொன்னேன் ரகு.. மத்தப்படி ஐ எம் ஓகே .. " என்று மெலிதாய் புன்னகைத்தாள்....

" ஜானகி உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்" என்றவனின் குரலில் திடீரென தீவிரம் தெரிய, சட்டென அவளின் உள்ளங்கை சில்லென்றானது.... என்ன இது ? எதுக்கு இப்படி ஆகுறோம் .. ரகு இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே என்று தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாலும் அவளின் இதயம் லேசாய்  படபடக்க் விரல்களை ஆராய்ந்த படியே " ம்ம் " என்றாள்.

" நீ அடுத்து என்ன பண்ண போற ? "

" அஆங் ????"

" இப்போ வேலைக்கு போறியே ஜானகி .. நெக்ஸ்ட் என்ன ??? "

" அது ........" அவள் விழிப்பதை ரசித்தவன்...

" ஹா ஹ நான் சொல்லவா ? " என்று அவள் கண்களுக்குள் உற்று நோக்கினான் ... பேசா வார்த்தைகள் இன்றி சுவாசமே ன்னின்று விட்டது போல் இருக்க அவன் அதை சொன்னான்... ( வைட் வைட் வைட் .. உடனே காதலை வேகமாக சொன்னா அது நம்ம ரகுவின் ஸ்டைல் இல்லையே .,.. அப்பறம் ரகுவின் உருவத்துல அர்ஜுனன் பேசுற மாதிரி இருக்குமே... சோ நம்ம ரகு முதலில் என்ன சொன்னாருன்னு பார்ப்போம் வாங்க "

"சொல்லு நான் சொல்லவா ? "

"ம்ம்ம் "

" உனக்கு பெயிண்டிங் பண்றதுன்னா பிடிக்கும் தானே "

" ஆமா ரகு " என்றவள் இப்பொது இயல்பாய் சிரிக்க,

" ம்ம்ம்  அதுக்குத்தான்.... இனி வாரவாரம் சனிக்கிழமை உனக்கு பெயிண்டிங் சொல்லி கொடுக்க ஒருத்தரை ஏற்பாடு பண்ணி இருக்கேன் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.