(Reading time: 51 - 101 minutes)

 

" ண்மணி, நான் உன் கிட்ட ஏற்கனவே சொன்னேன் ... நம்ம காதலை விட உன் படிப்பு நமக்கு இப்போ ரொம்ப முக்கியம் .. அதுனாலத்தான் ஒரு எல்லை கொடு போட்டு இவ்வளவு நாள் இருந்தோம் "

" ம்ம்ம்ம் "

" ஆனா என்னையும் மீறி ஒரு நாள் நான் என் எல்லையை தாண்டினேன் .. எப்போன்னு ஞாபகம் இருக்கா ? "

" நீங்க அன்னைக்கு தோட்டத்துல...கெட்ட கனவு வந்திச்சுன்னு சொன்னிங்களே ...."

" ஹ்ம்ம் அன்னைக்கு என்னையும் மீறி உன்னுடன் நான் காட்டிய நெருக்கம், உன்னை பிரிஞ்சிடுவோம்னு பயத்துல மட்டுமில்ல ... இனி நீ எனக்குதான் என்ற நிம்மதியிலும்தான் "

" அர்ஜுன் ... அப்படின்னா அன்னைக்கே நீங்க அப்பா கிட்ட பேசுனிங்களா ? " புன்னகையுடன் விழி அகல கேட்டவளின் மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டியவன்,

" ம்ம்ம் ஆமா செல்லம்  .. மாமா கிட்ட பேசி அவரின் சம்மதம் வாங்கி ... இனி நீ என் மனைவிதான் என்பதற்கு எல்லாருடைய சம்மதம் வாங்கி அதன் பிறகு தான் உன்னை நான் நெருங்கினேன்  " என்றான்.

" ஆனா அஜ்ஜு .. நீங்க ஏன் அப்போவே அதை சொல்லல? அப்பா கூட  என் கிட்ட வித்தியாசமா நடந்துக்கலையே "

" என் மக்கு இளவரசியே ... நீ எனக்கு மட்டுமா இளவரசி ? உன் வீட்டுக்கே நீதான் இளவரசி ... உன் அப்பாவுக்கு உன் மேல எவ்வளவு  அன்புன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா டா ? "

" உண்மைதான்  அஜ்ஜு ...அப்பாவும் சரி பெரியப்பாவும் சரி என்னை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பாங்க ... கிருஷ்ணா அண்ணாவும் அப்பா மாதிரிதான் .. ரகு கூட என்கிட்ட ரொம்ப சண்டை போட்டாலும் என்மேல அவ்வளோ அன்பு அவனுக்கு "

" ஹ்ம்ம் ஆமாடா ... உன்மேல யாருக்குத்தான் பாசம் வராது? நம்ம ஜானகியையே போன் ல பேசியே மயக்கியவ தானே நீ ....”

" சரி சரி ... டைம் வேற ஆச்சு .. ரொம்ப வர்ணிக்காமல் டக்குனு ஒரு பிளாஷ் பேக் கு கூட்டிட்டு போங்க பார்ப்போம்"

( அவங்க கூட சேர்ந்து நாமும் பிளாஷ் பேக்கை கேட்ப்போம் ...அதுக்கு முன்னாடி எல்லாரும் ஒரு தடவை மேல பாருங்க ..... ஓகே ஓகே சூப்பர் ... இதோ அந்த பிளாஷ் பேக் )

" டடே அர்ஜுன் நீ எங்கப்பா இங்க ? "

" நான் ரெகுலரா இங்க  ப்லட் டொனேட் பண்ண வருவேன் அங்கிள்  ..... நீங்க இங்க  ? "

" இந்த ஹாஸ்பிடல் டாக்டர் சிவராம் என்னுடைய நண்பன் ... அவனை பார்க்க வந்தேன் " என்றார் சந்திரப்ரகாஷ்.

" வீட்டுல யாருக்கும் உடம்பு சரி இல்லையா ? " என்று கேட்டவனை பார்த்து புன்னகைத்தவர்,

" அப்படிலாம் இல்லப்பா ... சும்மா பார்த்து பேசத்தான் வந்தோம் ... அண்ணாவும் உள்ளதான்  இருக்கார் ... ஆமா நீ சாப்டியா ? "

" இனிமேதான் அங்கிள் ... "

அதற்குள் அங்கே வந்தார் சூர்ய பிரகாஷ்...

" ஹாய் யாங் மேன் " என்று விரிந்த புன்னகையுடன் அவனை அழைத்தவர் அவன் தோளில் கை போட்டு சிரித்தார் ...

" நானா அங்கிள் யாங் ? நீங்க ரெண்டு பேரும்தான் சூப்பர் ஹீரோ மாதிரி இன்னும் அக்டிவ் ஆ இருக்கீங்க "

" ஹ்ம்ம் உனக்கு தெரியுது..எங்க வைப் கு தெரியலையே ... நானும் ஒரு யாங் கேர்ள் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்க்குறேன் ... உங்க அத்தை விட்டாதானே" என்று கண்ணடித்து சிரித்தார் சூர்யா ..

" அதுகென்ன  அங்கிள்? நானே நாளைக்கு அத்தைகிட்ட இதை பத்தி பேசுறேன் "

" அய்யயோ கூதூகலமா  இருக்குற குடும்பத்துல  கும்மி அடிக்காதே அர்ஜுன் ..நான் சும்மாதான் சொன்னேன் ... ஆமா அதென்ன அபிராமியை அத்தைன்னு உரிமையா கூப்பிடுற, என்னை மட்டும் அங்கிள் நு சொல்ற ? "

" அதுவந்து, அத்தை என்கிட்ட அத்தைன்னு கூப்பிட்டுனு பெர்மிஷன் தந்தாங்க பட் நீங்க  மாமான்னு கூப்பிடு அர்ஜுனனு சொல்லலியே ..... "

" சொல்லிட்டா போச்சு " என்று மூத்தவர் சிரிக்கவும் , இளையவருக்கு அர்ஜுனனிடம் சுபத்ராவை பற்றி பேச வேண்டும் என்று தோன்றியது ... இருந்தும் தமையனிடம் அனுமதி பெற வேண்டுமே என்று  நினைத்தவர், இருவருக்குமே பொதுவாக ,

" எங்களை விடு பா ... நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற ? " என்றார் சந்துரு ...

அப்போது இருந்த மனநிலையில் சட்டென அர்ஜுன்

" ஜானகிக்கு நல்ல வழி அமைக்கணும் மாமா... நம்ம சுபத்ராவின் படிப்பும்  முடியணுமே " என்று இயல்பாய் சொன்னான் ...  சொல்லி பிறகுதான் தான் சொன்னதை உணர்ந்து அவர்களின் முகத்தை  கூர்ந்து நோக்கினான் .. இருவருமே கண்களில் ஒரு மின்னலுடன் அவர்களை பார்த்தார்களே தவிர கோபமாய் பார்ப்பதாய் அவனுக்கு தோன்றவில்லை ... அதே தைரியத்தில்,

" மாமா உங்க ரெண்டுபேருக்கும் ஏதும் அவசர வேலை இல்லன்னா ஒரு அரைமணி நேரம் ஸ்பென்ட் பண்ண முடியுமா ? " என்று கேட்டான். பெரியவர்கள் இருவரும் சம்மதிக்க, அவர்களை அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றான் அர்ஜுனன்.

" சொல்லு அர்ஜுன் ... என்ன விஷயம் ? "  என்று கேட்ட சூர்யா ஓரளவிற்கு அவன் எதை பேசுவான் என்பதை அறிந்து வைத்திருந்தார் ... ஆனால் அதை அவன் பேசும்விதத்தை அறியாதவர், அவன் பேச பேச மனதிற்குள் அர்ஜுனனை மெச்சினார் ... அவரே அப்படின்னா நம்ம சந்துரு சாரை சொல்லவா வேணும் ? ( பின்ன நம்ம அர்ஜுன் என்ன சும்மாவா ? அவரை பார்த்து  மயங்கலனாலும் கூட அவர் பேச்சில் மயங்காதவர் இருக்க முடியுமா என்ன ? ஓகே ஓகே ஐஸ் வெச்சது போதுமே .. வாங்க அர்ஜுன் என்ன பேசறார் கேட்போம் )

"  மாமா நான் சுபத்ராவை மனதார விரும்புறேன்.. அவளுக்கு நல்ல வாழ்க்கை துணையா இருக்கணும்னு  ஆசை படுறேன்.. அவளை திருமணம் பண்ணிக்க உங்க சம்மதம் வேணும் "

கொஞ்சமும் அலங்கார வார்த்தைகள் இல்லாமல், தயக்கம் இல்லாமல் நிமிர்வுடன் அவன் தனது எண்ணத்தை சொன்னதில் இருவருக்குமே ஆச்சர்யம்தான்.... ரெண்டு பேருமே என்ன சொல்றதுன்னு தெரியாமல் பார்க்க, அர்ஜுன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

" எந்த ஒரு உறவையும் பொய் சொல்லி ஆரம்பிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்லை மாமா... இந்த விஷயத்துலயும் அப்படிதான் .. எங்க குடும்பம் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் ... என் அப்பா விட்டுடு போன பிசினஸை தான் டெவலப் பண்ணிட்டு இருக்கேன் ..... ஜானகி பத்தியும் நான் உங்க கிட்ட பேசணும் ...பட் அதுக்கு முன்னாடி எனக்கு சுபத்ராவை எப்படி  தெரியும்னு உங்க கிட்ட சொல்லணும் "

" ...."

" அம்மாவும் சிவகாமி அத்தையும் ப்ரண்ட்ஸ் நு தெரியறதுக்கு முன்னாடியே நானும் சுபியும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சிருக்கோம் " என்றவன் அவர்களின் முதலாம் சந்திப்பில் இருந்து அவர்களின் காதலும், சுபத்ராவின் படிப்பிற்காக கொடுக்கும் முக்கியத்துவத்தையும் தெளிவாய் சொன்னான்...

" இதல்லாம் முன்னாடியே சொல்ல கூடாதுன்னு  எதுவுமில்ல மாமா ... சுபத்ரா படிப்பு  முடியத்தான் வைட் பண்ணேன் ... எந்த வகையிலும் இந்த விஷயம் அவளின் கவனத்தை சிதற வைக்க கூடாது .. பட் இன்னைக்கு என்னையும் மீறி உங்க கிட்டே சொன்னதுனாலத்தான் ஒரேடியா எல்லா உண்மையையும் சொல்லிட்டேன் .. சுபத்ராவும் உங்ககிட்டே  எதுவும் மறைக்க நினைக்கல ... அதுனாலத்தான் கிருஷ்ணா கிட்டயாவது  சொல்லனும்னு உண்மையை சொல்லிட்டோம் ... நான் எதையும் நியாயபடுத்த இதை சொல்லல மாமா "

"...."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.