(Reading time: 51 - 101 minutes)

 

" னியாவா இருக்கே ? ஸ்வாதி, கீதா எல்லாரும் எங்க ? "

" இங்கதான் இருக்காங்க அர்ஜுன் .. நாந்தான் உங்க கிட்ட பேசணும்னு பால்கனி பக்கம் வந்தேன் ... " அவள் பேசிகொண்டிருக்கும்போதே கீதா துள்ளலுடன் சுபத்ரா பக்கம் வந்தாள்... அர்ஜுனன் லைனில் இருப்பது தெரியாமல்

" ஹேய்  இந்த கார்த்திக்கை பாருடி .. மெச்செஜ் மேல மெசேஜ் அனுப்புறான் ... உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா ? அப்படின்னு அனுப்பிருக்கான் " என்று போனை காட்டினாள்..அதை கேட்ட அர்ஜுன் துரிதமாய்  இன்னொரு போனை எடுத்து  கார்த்திக்கு மெசேஜ் அனுப்பினான் ..

" ம்ம்ம்ம் வெடிகுண்டு "

" வூ இஸ் திஸ் ? "

"A -  R-  J-  U-  N-  A-  N  "

" பாஸ் ? "

" என்னடா பாஸ் ? நைட் டைம் நீயும் தூங்காம கீதாவையும்  தூங்க விடாம பண்ணுறியா ? போய் படுடா "

" எஸ் பாஸ் " என்று மெசேஜ் அனுப்பியவன்

உடனே கீதாவிற்கு கால் பண்ணான்... இவை அனைத்தையும் அர்ஜுன் சுபியிடம் பேசிக்கொண்டே செய்த லீலைகள்தான் .... தன்னுருகில் தோழி தொலைபேசியை பார்த்தே நின்று கொண்டிருப்பதை பார்த்து சிரித்து  கொண்டே அர்ஜுனனிடம் பேசினாள்..அதேநேரம் கார்த்திக் கீதாவை அழைக்க, அப்போதாவது அந்த இடத்தைviddu நகருவோம் என்று இல்லாமல், சிரித்தபடி போனை எடுத்தவள்

" ஹே கார்த்திக் என்னடா இப்போ போன் ? "  என்றாள்....

" நான் உனக்கு மெசேஜ் பண்ணது அர்ஜுன் பாஸ்கு எப்படி தெரியும் ? "

" ஹான் ??? அர்ஜுன் பாஸ்க்கா ? அய்யோ சாரி டா ... சுபி அவர்கிட்ட பேசிட்டு இருக்குறதை தெரியாமல் சொல்லிடேன் "  என்று திருதிருவென முழித்தாள்...சுபத்ராவின் லைனில் இருந்த அர்ஜுனனுக்கு கீதாவின் குரல் கேட்டுக்கொண்டுதான இருந்தது ...

" போடி பிசாசு  உன்னால நல்ல மாட்டிகிட்டேன் .. நல்ல வேலை இப்போ தப்பிச்சேன் ... "

" நீ தப்பிக்கல கார்த்திக் "

" என்னடி சொல்றே ? "

" இப்பவும் சுபி லைன் ல பேசிட்டு  தான் இருக்கா " எனவும் கிட்ட தட்ட அலறியபடி போனை வைத்துவிட்டான் கார்த்திக் ..  இவர்களின் நாடகத்தை வேடிக்கை பார்த்த சுபத்ராவோ உரக்க சிரிக்க  கீதா கெஞ்சலுடன்

" அண்ணா கிட்ட சொல்லி ஏதும் பண்ண வேணாம்னு சொல்லி சுபா " என்றாள்.... அதற்கு அர்ஜுன் ஏதோ சொல்ல

" இன்னைக்கு கார்த்திக்கு எந்த பணிஷ்மேன்ட்டும் டிசைட் பண்ணலாம் .. அதுனால இன்று போயி நாளை வாங்கன்னு அர்ஜுன் சொல்றாரு ... நீ போய் தூங்கு " என்று அவளை அனுப்பி வைத்தாள்..கண்களில் கலவரத்தோடு பார்த்தவள் இனி இறைவன் விட்ட வழி என்று உள்ளே சென்றாள்...

" ஹஹஹா பாவம் அஜ்ஜு ரெண்டுபேரும்... ஆமா என்கிட்ட பேசிகிட்டே என்ன பண்ணிங்க நீங்க? "

" அதுவா  ........" என்றவன் நடந்ததை ரத்தின சுருக்கமாய் சொன்னான்

" ஹா ஹா ஹா "

" போதும் சுபி .. உன் வாய்ஸ் இன்னும் சரி ஆகல பாரு ... மருந்து சாப்ட்டுடு படுடா " என்றான்...

" ஹ்ம்ம் லைட்டா எனக்கும் தலைவலிக்கிது அர்ஜுன்.... ஏன்னு தெரில ..."

"  மக்கு இளவரசி முன்னாடியே சொல்றதுக்கு என்ன? நீ போய் ரெஸ்ட் எடு ... மிச்சத்தை நாளைக்கு பேசலாம் ..... "

" ஹ்ம்ம் சரி ... அர்ஜுன் ...."

" என்னடா ? "

" என்னனு தெரில ... நீங்க என் பக்கத்துலேயே இருக்குற மாதிரி இருக்கு "

ண்மைதான் ... அவர்கள் ஊட்டியை அடையும்போதே அங்கு வந்துவிட்டான் அர்ஜுனன்.. மீராவும் கிருஷ்ணனும் ஆகாஷின் வீட்டிற்கு சென்றுவிட .. எவ்வளோ அழைத்தும் சுபத்ராவை விட்டு விலகுவதாய் இல்லை என்று உறுதியுடன் சொன்னான் அர்ஜுனன் ..அவர்கள் தங்கிய ஹோட்டலில்  அவளின் அறையை பால்கனி மூலமாக பார்ப்பதற்கு  தோதான ஒரு அறையில் தங்கினான் ... அவன் அங்கு இருக்கும் வாய்ப்புகள் இல்லாததால் தன் கண்முன்னே இருந்த அறைகளில் மேல் தளத்தில் இருந்து அவன் தன்னை  பார்த்துக்கொண்டே பேசுவதை சுபத்ரா கவனிக்கவில்லை   ... எனினும் அவனின் அருகாமையை அவளால் உணர முடிகிறது என்றால், காதல் கொண்ட உள்ளத்திற்கு அதைவிட பெரும் பரிசு இருக்கிறதா என்ன? சுபத்ராவின் காதல் அவனுக்கு  நெகிழ்ச்சியையும்  ஆனந்தத்தையும் கர்வத்தையும் தந்தது ....

காதலில்  உருகும்  பாடல்  ஒன்று 

கேட்கிறதா  உன்  காதினிலே 

காதலில்  உயிரை  தேடி  வந்து 

கலந்திட  வா  என்   ஜீவனிலே 

உயிரினை  தேடும்  உயிர்  இங்கே 

ஜீவனை  தேடும்  ஜீவன்  இங்கே 

சேர்ந்திடவே  உனையே .. ...

எங்கிருந்தோ  அழைக்கும்  உன்  கீதம்  

என்  உயிரில்    கலந்தே  அது  பாடும் 

சேர்ந்திடவே  உனையே .....

ஏங்கிடுதே  மனமே 

சன்னகுரலில் அவளுக்காக உருகி பாடினான் அர்ஜுனன் ...

" அர்ஜுன் ..."

" சுபி ...."

"...."

" போயி தூங்கு குட்டிமா"

" குட் நைட் அர்ஜுன் .. "

" குட் நைட் டா "

அடுத்த நாள் அர்ஜுன்- சுபத்ரா மாதிரி ரகு- ஜானுவிற்கும் ரொம்ப ரொம்ப முக்கியமான நாள் ... அது எண்ணு சொல்றதுக்கு முன்னாடி ... எல்லாரும் உங்க கடிகாரத்தை  ரிவர்ஸ் ல திருப்புங்க பார்ப்போம்ம்... குட் அப்படித்தான் ... இப்போ ரகுராம் -ஜானகியை பார்ப்போம் ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.