(Reading time: 55 - 110 minutes)

 

துள்ளல் பாட்டில் மூழ்கியிருந்தவன் “டேய்… நீயெல்லாம் நண்பனாடா?...” என்ற குரல் கேட்டு எழுந்து பார்த்தான்..

முகிலன், மூச்சு வாங்க, தலையில் சில இலை தழைகளுடன் நின்றிருந்தான்…

அவனைப் பார்க்க பார்க்க ஆதிக்கு சிரிப்பு தாங்கவில்லை… விழுந்து விழுந்து சிரித்தவன், பின், கட்டுப்படுத்திக்கொண்டு,

“என்னாச்சு மச்சான்…”

“ஆ…. உனக்கு ஒன்னுமே தெரியாதுல்ல…?...” என்றபடி அவன் ஆதியை முறைக்க, ஆதியோ வேறு பக்கம் திரும்பி சிரித்துக்கொண்டான்…

“டேய்… கிராதகா… செய்றதையும் செஞ்சுட்டு, சிரிப்பு வேறயாடா… பாவி?...”

“என்னடா செஞ்சேன் நான்?...”

“நீ என்னடா செய்யலை… பாருடா…. உன்னால அந்த பாட்டி என்ன செஞ்சு வச்சிருக்குற கோலத்தைப் பாரு… அரவிந்த்சாமி மாதிரி இருந்த என்னை இப்படி ஆக்கிடுச்சே…” என்றான் பாவமாக…

“ஹ்ம்ம்… இது நீயா இழுத்துக்கிட்டது தான்….”

“யாரு… நானா?...”

“ஆமா…”

“அடேய்… உன்னை…” என்றவன் ஆதியின் மேல் பாய, இருவரும் ஒருவரை ஒருவர் செல்லமாக அடித்துக்கொண்டனர்…

“அங்கே என்னங்கடா சத்தம்?...” என்ற பர்வதத்தின் குரல் கேட்க,

“ஒன்னுமில்லைப் பாட்டி…” என்றனர் இருவரும் கோரசாக…

“டேய்… பாட்டி அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆயிட்டாங்கன்னு தோணுது… வாடா உள்ளே போயிடலாம்… உனக்கு நான் ஆயின்மென்ட் போட்டு விடுறேன் மச்சான்… வா…”

“ஆமாண்டா… மச்சான்…. என்னால இன்னும் ஓட முடியாதுடா… எனக்கு நீ மருந்து போடப்போறியா மச்சான்… நீ என் நண்பேண்டா…” என்று ஆதியை அணைத்துக்கொண்டான் முகிலன்…

“சரிடா வா.. போகலாம்…”

“என்னால எழுந்துக்க முடியலைடா… கொஞ்சம் தூக்கிட்டு போயேண்டா…”

“நீ என்ன காதலியாடா?... உன்னை தூக்கிட்டு போக…”

“டேய்… டேய்… ப்ளீஸ் மச்சான்…” என்று கெஞ்சவும், அவனின் இன்னிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற எண்ணத்தில் சிரிப்பு மாறாமல் அவனை தூக்கிச்சென்றான் ஆதி…

“மச்சான்… சூப்பரா தூக்குற… போ… கலக்கிட்ட…”

“ஹ்ம்ம்…”

“என் தங்கை குடுத்து வச்சவள் தான்…”

“என்னடா சொல்லுற?...”

“ஆமாடா… ஃப்ரெண்ட் என்னையே இப்படி தாங்குற… அப்போ உனக்கு மனைவியா வரப்போற என் தங்கச்சி கொடுத்து வச்சவ தானடா… அதான் சொன்னேன்…”

மனைவி என்று சொன்னதும் அவனுக்குள் சாகரியின் நினைவு வந்துவிட்டது…

முகிலனை பொத்தென்று மெத்தையில் போட்டவன், “போ போய்… குளி.. சீக்கிரம்…” என்றான்..

“அய்யோ… பாவி… என் எலும்பை உடைச்சிட்டானே…”

“டேய்… சத்தம் போட்ட கொன்னுடுவேன்… போ குளிச்சிட்டு வா ஒழுங்கா…”

“ஹ்ம்ம்… போறேன்…” என்றபடி மெல்ல நடந்து குளியல் அறைக்குச்சென்றான் முகிலன்…

சோபாவில் கால் நீட்டி அமர்ந்தவன், டீவியை ஆன் செய்து விட்டு, மெல்ல விழி மூடி யோசித்தான்… இன்னைக்கு என்ன மீட்டிங்ஸ் இருக்கு என்று…

யோசித்தவன் மனம் மறுநொடியே அவளை காட்டியது….. இங்கேயும் வந்துட்டியா நீ… ஏண்டி… இப்படி படுத்துற… என்று தனியாக பேசி கொள்ளவும் செய்தான்… அவளின் காதல் பார்வை அவனுள் உதித்தது… ஹ்ம்ம்… அதை பார்த்து தானே விழுந்துட்டேன்… என்ன செய்ய… உன் கண்கள் வழியே நான் என்னை தானே பார்க்குறேன்… ஹ்ம்ம்… சீதை…. என்றவன் காதில் அந்த பாடல் கேட்டது…

அதை கேட்டவன் விழி திறந்து பார்த்தபோது, நடிகர் சூர்யா, ஆடிக்கொண்டிருந்தார் திரையில்.. அவனுக்கும் ஆட வேண்டும் என்பது போல் தோன்ற, எழுந்தான்… பாடலை பாடிக்கொண்டே அவனும் ஆடினான் அதற்கேற்றபடி…

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்பே முன்பே

தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா?...

மழைக்கிளியே மழைக்கிளியே உன் கண்ணைக் கண்டேனே….

விழி வழியேவிழி வழியேநான் என்னைக்கண்டேனே…. செந்தேனே…”

“அவளிடம் நேற்று பேசின வார்த்தைகள் அவனை சுற்றி சுற்றி வந்தது… இருப்பினும், அவள் மௌனம் பேசின பாஷை தான் அவளைப் புரிந்து கொள்ள செய்தது… அவள் சென்ற பாதையில் அவன் கால்களும் சென்றது தானாகவே, அவள் அவனிடம் விடைப்பெற்று செல்லும்போது… அவளுடன் இருந்தபோது நேரம் காலமெல்லாம் நகர்ந்ததே தெரியவில்லை… அவ்வளவு சுருக்கமாய் சென்றுவிட்டதோ என்று கூட அவன் எண்ணிக்கொண்டான்… காதல் வந்தாலே இப்படிதான் இருக்கும்போலும்… நைட் முழுவதும் விண்ணோடு விளையாட்டு… இப்போது காலையில் முகிலனோடும்… என்றவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை… சிரித்துக்கொண்டே வரிகளை பாட ஆரம்பித்தான்…

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே

தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே

அவன் மெய் மறந்து பாடி கொண்டிருக்க, முகிலன் வந்து அவனை பார்க்க, ஆதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… சட்டென்று

விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே…”

என்று அவனையும் பாட்டில் இழுத்து விட்டு அவனையும் ஆட வைத்தான்…

முகிலன் மயூரியை நினைத்து பாட, ஆதி சாகரியை நினைத்து பாடினான்…

ஆசை என்னும் தூண்டில் முள் தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்… - முகில்

மாட்டிக்கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்… - ஆதி

சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்… - முகில்

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்… - ஆதி

இது மாய வலை அல்லவாபுது மோன நிலை அல்லவா… - முகில்

உடை மாறும், நடை மாறும்ஒரு பாரம் எனைப் பிடிக்கும்…” - ஆதி

பின், சிரித்துக்கொண்டே இருவரும் ஆடியபடியே மீதி பாடலையும் பாடினர்…

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்பே முன்பே

தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா?...

மழைக்கிளியே மழைக்கிளியே உன் கண்ணைக் கண்டேனே….

விழி வழியேவிழி வழியேநான் என்னைக்கண்டேனே…. செந்தேனே…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.