(Reading time: 55 - 110 minutes)

 

ஹ்ம்ம்… என்று சிரித்தபடி அறையிலிருந்த வெளிவந்த மயூரி-சாகரி இருவரும் நந்துவின் நடனத்தைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்…

நந்து ஆடியபடியே… “எதுக்கு இப்போ சிரிக்குறீங்க ரெண்டுபேரும்..?...”

“ஒன்னுமில்லை… நீ ஆடுற பாட்டு ரொம்ப பொருத்தமா இருக்கு… அதும் இப்போ இந்நேரத்துக்கு அதான்…” என்று மயூரியைப் பார்த்துக்கொண்டே சொன்னாள் சாகரி…

“சரி சரி வா… சாகரி… நாம ஆடலாம்… ப்ளீஸ்… மயில் நீயும் வா…” என்று அவர்களை இழுத்தாள் நந்து…

நந்து அழகாக அந்த இசைக்கு தன் சின்ன கைகளை ஆட்டி ஆடினாள் பாடிக்கொண்டே…

குமுசுமு குமுசுமு குப்புச்சிக்குமுசுமு குப்புச்சிக்

குமுசுமு குமுசுமு குப்புச்சிக்குமுசுமு குப்புச்சிக்

சலசல சலசல சோலைக்கிளியே

சோடியைத் தேடிக்க சிலு சிலு சிலு சிலு சர்க்கரை நிலவே….

மாலையை மாத்திக்க மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்க…”

“சாகரி… இப்போ நீ தான் ரெடியா???… பாடு… அந்த ஹம்மிங்க் வாய்ஸ்…” என்றாள் நந்து…

“டீல்… டீல்… நீ குப்புச்சிக்… நல்லா ஆடு…” என்றாள் சாகரி…

“ஹ்ம்ம்… லைன் வந்துட்டு பாடு….”

மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க

மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசில வச்சிக்க…” என்று மயூரியின் காதில் கிசுகிசுத்தாள் சாகரி…

அவள் வெட்கமும், தயக்கமுமாய் பாடலை பாட ஆரம்பித்தாள்…

முகிலனை முதன் முதலில் பார்த்தபோது அவளின் கண்களை அவள் தொலைத்தாள்… அவளின் கண்களைப் பறித்துக்கொண்டவன் வாய் பேசாமல் மௌனமாக நின்றான் அவளைப் பார்த்தநொடி…

தான் வயதுக்கு வந்த பெண் என்பது கூட மறந்து அலைபாயும் மனதோடு நின்றிருந்தாள் அந்த மாது… அவனின் பெயர் தெரியாமலே அவளின் உள்ளம் அவனிடத்தில் இடம் மாறியது… வார்த்தைகள் பேச வாய் வராது தவித்தவள், இந்த சுகமான காதல் வலி தீர வழி என்ன என்று யோசித்தாள்…

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒருசேதி அறியாமலே அலைபாயும் சிறுபேதை நானோ?...

உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ?...

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ?...”

“என் ராமனே உன்னைப் பார்த்த கணமே என் கண்களை தொலைத்துவிட்டேன் உன்னிடத்தில்… என் கண்களைப் பறித்த நீயோ என்னைப் பற்றிய விவரங்கள் ஓரளவு நீ தெரிந்துகொண்டும் இன்னும் என்னுடன் பேசாமல் இருக்கின்றாய்…. நான் ஆளான சேதி கூட அறியாமல் அலைபாய்ந்த விழிகளோடு நேற்று உன் முன் நின்ற பேதை தானோ?... உன் பெயரும் என் பெயரும் தெரியாமலே நமது உள்ளங்கள் இடம் மாறியதும் ஏனோ?... உன் கண்களில் விழுந்த நொடி பேச வாய்ப்பு இல்லாது இருந்தேனே… இந்த காதல் பிரிவு தரும் வலி தீர வழி என்ன என் ஸ்ரீராமா?...” என்று சாகரியும் தன்னவனை எண்ணிக்கொண்டு பாடி ஆடினாள் அழகாக…

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒருசேதி அறியாமலே அலைபாயும் சிறுபேதை நானோ?...

உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ?...

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ?...”

அடுத்ததாக, சா, சா நி நி,,, ப ம.. என்று சித்து அந்த ஸ்வரங்களை ஒரு கையை காதில் வைத்துக்கொண்டு மறுகையை நீட்டி மடித்து ஆடியபடி உளறிக்கொண்டிருந்தான்…

சாகரி ஆதர்ஷை பிரியும்போது அவன் கண்ஜாடையிலே போய்வா என்றதும் அவளின் நெஞ்சம் தறிகெட்டு தளும்பியதை எண்ணிப் பார்த்தாள்…

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்

தறிகெட்டு தளும்புது நெஞ்சம்…”

அன்று அவளின் சேலை முந்தானை பறந்து அவன் மேல் விழுந்ததில் அவனது நெற்றி, கண்கள், நாசி என்று அவனது பிறைமுகம் கண்டாள் மயூரி…

எந்தன் நூலாடைப் பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்

பிறைமுகம் பார்த்தது கொஞ்சம்…”

ஆதர்ஷின் காதலினால் சாகரியின் குருதி கொதித்தது உலை நீரைப் போல…

ரத்தம் கொதி கொதிக்கும்….

உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல….”

முகிலன் தொட்டதும் அவளுடைய சித்தம் துடித்தது புயலோடு போராடும் இலை போல… அவனது அணைப்பில்…

சித்தம் துடி துடிக்கும்

புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல…”

சூரியனைக் கண்ட பனி போல், என்ன செய்வது என்று அறியாமல், மூங்கில் காட்டில் பனியாய் மாட்டிக்கொண்டவர்கள் சுட்டெரிக்கும் சூரியனின் காதலினால் அவனது நேசமேனும் வெப்பத்தை உள்வாங்கிக்கொண்டு மூங்கில் காடாக மாறிப் போயினர் மயூரியும் சாகரியும்…

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று ஆயினள் மாது…”

ஆதர்ஷின் கண்களோடு சாகரியின் கண்கள் கலந்த நேரம் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தாள் அவள்… அவனின் மின்சார பார்வை வேகத்தையும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை…

ஒரு மின்சாரப் பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டுகொண்டேன்…”

முகிலன் இழுத்து அணைத்ததில் பெண்ணாக முதல் முறை தாபம் கண்டு கொண்டாள் அவனால்…

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்

என்னோடு நான் கண்டுகொண்டேன்…”

ஆதர்ஷின் காதலை சொல்லிய தருணத்தில் அவளை மறந்தாள்… இந்த பூலோகத்திலே அவள் இல்லாத நிலை அடைந்தாள் சாகரி…

என்னை மறந்துவிட்டேன்….

இந்த உலகத்தில் நானில்லைநானில்லை…”

முகிலனை இழந்து நேரிட்டால், தேனில்லாத பூவின் நிலை தான் தனக்கும் என எண்ணிக்கொண்டாள் மயூரி…

உன்னை இழந்துவிட்டால்….

எந்த மலரிலும் தேனில்லைதேனில்லை…”

காதல் அரங்கேறிய நிகழ்வை இருவருமே முதலில் நம்பவில்லை… ஆதர்ஷை விட்டு வீடு வந்த சாகரியும், முகிலனை விட்டு வீடு வந்த மயூரியும் அன்றைக்கு இரவு அவர்களை அவர்களே கிள்ளிப் பார்த்து இது கனவு தானா? இல்லை நனவா என்று உறுதிபடுத்திக்கொண்டனர்… ஏனோ அவர்களது காதலர்களைப் பார்க்கும்போது இருவருக்கும் தாய்மொழியாம் தமிழ் மறந்து காதல் மொழியாம் மௌனம் சூழ்ந்துகொள்கிறது அவர்களை வெகுவாய்…

இது கனவா…. இல்லை நனவா?...

என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்

உன்னைப் பார்த்து எந்தன் தாய்மொழி மறந்தேன்…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.