(Reading time: 55 - 110 minutes)

 

தே நேரம் லண்டனில், “என்ன பண்ணுற சீதை?.... எனக்கு உன்னை இப்பவே பார்க்கணும் போல இருக்கு…. இன்னும் ஒருவாரம் ஆகுமே உன்னைப் பார்க்க…. ஹ்ம்ம்….” என்று ஏங்கினான் ஆதர்ஷ்…

“முகிலா…. எதும்னா எனக்கு உடனே போன் பண்ணு…. ஸ்கைப் ல வாடா… டெய்லி…. பேசலாம்…. மறந்துடாத… அப்பறம், நீ தான் டா பார்த்துக்கணும் எல்லாத்தையும்…. கொஞ்சம் பொறுத்துகோடா… நான் இன்னும் 6 டேஸ்ல வந்துடுவேன்….” என்றான் ஆதி படபடவென்று…

அவனோ மயக்கத்திலிருந்து மீள விரும்பாதவன் போல், சற்றுமுன் நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தான்…..

ஆதி சட்டென்று அவனது முதுகில் அடிக்க, சுயநினைவுக்கு வந்தவன், “ஏண்டா பாவி.. அடிச்ச?...”

“இங்கே எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன்…. நீ என்னடான்னா கனவு காணுற?...”

“டேய்…. நீயும் ஒருநாள் காதலிப்படா… அப்ப இருக்கு உனக்கு….”

காதலிப்பாய் என்று சொன்னதும், அவனுக்குள் அவளின் நினைவு எட்டிப்பார்க்க, தன்னை அறியாமல் சிரித்தவன்,

“கண்டிப்பா நீ சொல்லிட்டல்ல, காதலிச்சிட்டா போச்சு….” என்றான் ஆதி…

அவனை நம்ப முடியாமல் பார்த்தவன், “டேய்… நீயா இப்படி எல்லாம் பேசுற?...”

“நான் தாண்டா…”

“ஹ்ம்ம்… காதல் என்றாலே காத தூரம் ஓடின பையன் ஒருத்தன் இருந்தான்…. அவன் இப்படி திடீர்னு காணாம போவான்னு நான் நினைக்கவே இல்லடா….”

“சரி சரி…. என்னை புகழ்ந்தது போதும்…. எல்லாத்தையும் பார்த்துக்க… நான் சண்டே எர்லி மார்னிங்க் வந்துடுவேன்…சரியா?...”

“டேய்…. என்ன இப்படி பாதியிலே வரப் போறன்னு சொல்லுற?...”

“இல்லடா.. ஒரு சின்ன வேளை இருக்கு… அதான்…”

“அப்படி என்ன எனக்கு தெரியாத வேலை?...” என்று முகிலன் புருவம் உயர்த்த,

“நம்ம செல்வம் இருக்கான்லடா… அதான் நம்ம ஜீஎம்… அவன் இப்போ எடுத்துருக்குற  ப்ராஜெக்ட்டில் ஆட்கள் எப்படி பிரிக்குறதுன்னு ஐடியா கேட்டான்…. ஒருநாள் வந்துட்டு போக சொன்னான்…. அதான்…. சண்டே வருவேண்டா…”

“ஓ…. சரிடா… “ என்று நம்பிவிட்டான் அந்த அப்பாவி முகிலனும்….

(ஹ்ம்ம்… முகிலன் கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்… இல்லன்னா நம்ம விஷயத்தை கண்டு பிடிச்சிடுவான்….)

“ஆமாடா… மயூரி எப்படி ஓகே சொன்னா?...”

“அத ஏண்டா கேட்குற?... அவ கூட ஒரு பொண்ணு இருக்குறா?... அப்பா…. என்ன எப்படி எல்லாம் ஏமாத்திட்டா தெரியுமா?...” என்றபடி… நடந்ததை கூறினான்….

அதைக்கேட்ட ஆதி விழுந்து விழுந்து சிரித்தான்…

“அடப்பாவி… ஒரு பொண்ணு… உன்னை கலாய்ச்சிருக்கா… அது கூட தெரியாம… நீயும்… ஏமாந்த சோணகிரியாட்டம் தலையாட்டி ஃபீல் வேற பண்ணிருக்க… ஹாஹாஹா… அந்த பொண்ணை கண்டிப்பா பார்த்து தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்…” என்றான் ஆதி…

“அவ பேரு கூட எனக்கு தெரியாதுடா…”

“வெரி குட்… பேரு கூட தெரியாம உன்னை ஏமாத்திருக்கா பாரு… இப்போதான் அந்த பொண்ணை பார்த்தே ஆகணும்னு தோணுது எனக்கு… ஹாஹாஹா…”

“ரொம்ப தான் ஓட்டாத டா… உன் தங்கச்சிகிட்டயே கேளு…. அவளைப் பற்றி…”

“ஹ்ம்ம்… கேட்கலாம்… இப்போ டைம் ஆச்சு… நான் கிளம்புறேண்டா… கொஞ்சம் பார்த்து இருடா…”

“எனக்கென்னடா… லூசு… நீ போயிட்டுவா…”

“சரிடா…” என்றவன் முகிலனை அணைத்துவிட்டு சிரித்தபடி சென்றுவிட்டான்…

காலையில் அவசரம் அவசரமாக கிளம்பி இரவு லண்டன் வந்தவன்… “ஹ்ம்ம்… இந்த லண்டன் எதும் எனக்கு பிடிக்கலைடா… முகிலனும் பக்கத்தில் இல்லை… நீயும் இல்ல சீதை….” என்று புலம்பிக்கொண்டிருந்தான்…. எப்போது சண்டே வரும் என்று காத்திருக்க தொடங்கினான்…

அவனை அதிக நாள் காத்திருக்க விடாது அந்த நாளும் வந்தது….

“ஹேய்…. குட்டீஸ்…. சீக்கிரம் வாங்க… கோவிலுக்கு போகணும்… வாங்க… ரெடியா?...” என்று 100-ஆவது தடவையாக கேட்டாள் சாகரி…

“ஹேய்… நீ ஏண்டி இவ்வளவு அவசரப்படுத்துற இன்னைக்கு…?...”

“ஒன்னுமில்லைடீ… சீக்கிரம் போன சீக்கிரம் வந்துடலாம் இல்லையா…. அதான்….” என்று சிரித்தாள் சாகரி…

“ஹ்ம்ம்… சரி நானும் வரேன்…”

“நீயுமா?...!!!!!!!!!!”

“ஏண்டி…. நான் வந்தா என்ன?....”

“இல்ல… கூப்பிட்டா கூட வரமாட்டியே… அதான் கேட்டேன்….”

“இன்னைக்கு வரணும்னு தோணுது அதான்….”

“சரி வா….”

அந்த நேரம் மயூரிக்கு போன் வர, “யாரு உன் ஹீரோவா?.... ஹ்ம்ம்… போ பேசிட்டுவா…” என்றாள் சாகரி சிரிப்புடன்...

பேசிவிட்டு வந்தவள் “அவர் கோவிலுக்கு கூப்பிடுறார்டீ…”

“ஓ…. அவர் வெளியே கூப்பிட்டிருப்பார்…. நீ தான் எங்கூட சேர்ந்தவளாச்சே…. அதான் கோவிலுக்கு போகலாம்ன்னு சொல்லியிருப்ப… என்ன சரிதானே…?...”

“ஹ்ம்ம்… ஆமாடி….”

“சரி பார்த்து போயிட்டுவா…. பட் சீக்கிரம் வந்துடு….”

“ஓகேடா…”

விழிகளில் தேடலுடன் கோவிலுக்குள் நுழைந்தாள் சாகரி… மனம் நிறைய எதிர்பார்ப்புடனும், அவனைக் காணப் போகும் ஆவலுடனும் நடந்தாள் சாகரி….

அந்நேரம் “ஹேய்…. சாகரி….” என்ற குரல் கேட்க…. யாராக இருக்கும் என்று திரும்பியவள்…

அங்கே மது, கீர்த்து, மீனு, சுஜிதா, நித்யா, வளர், காயூ என ஒரு பெரும் பட்டாளமே வருவதைக் கண்டு புன்னகைத்தாள்…

“ஹேய்…. நீங்க எல்லாரும் இங்கே எங்க?...”

“ஆ…. நீ எதுக்கு வந்தியோ அதுக்குதான் நாங்களும் வந்தோம்….” என்றாள் கீர்த்து…

“ஆரம்பிச்சிட்டியா… ஹ்ம்ம்…” என்றாள் சாகரி…

“சரி எங்கே அந்த சித்து நந்து?...” என்று கேட்டாள் மது…

“பின்னாடி பூப்பறிக்க போயிருக்காங்க… இப்போ வந்துடுவாங்க….” என்று சொல்லிமுடிக்கும் முன் அங்கே வந்தனர் இருவரும்….

“ஹாய்…. நந்து, சித்து….” என்றபடி கீர்த்தனா அவர்களிடத்தில் பேச,

“ஹாய்… கீர்த்து…..” என்றனர் இருவரும்…

அதைக்கேட்டு ஆச்சர்யத்தில் அனைவரும் பார்க்க,

“என்ன மது… இப்படி முழிக்குற?... கவிதை எல்லாம் எழுதுவன்னு சாகரி சொன்னா…. நீ என்னடான்னா, ஏதோ ஆச்சரியத்தை பார்த்தது போல் பிரமிச்சு நிக்குற?... உன் கவிதையை விட இங்க ஒரு பிரமிப்பும் இல்லை… அய்யோ… அய்யோ… மது… ஹ்ம்ம் இங்கே வா…” என்றபடி இருவரும் அவளை அணைத்துக்கொண்டு முத்தமிட்டனர்…

அவளும் அந்த மழலை செல்வங்களை அள்ளி அணைத்துக்கொண்டாள்… மகிழ்ச்சி பொங்க….

“எப்படிடா… என்னை உங்களுக்கு தெரியும்?...”

“சாகரி சொன்னா… மது… நீங்க அடுத்த வாரம் வந்தாலும் வருவீங்கன்னு…. பட் நீங்க இன்னைக்கே வந்துட்டீங்க…. அப்புறம் அவ உங்களைப் பற்றி சொன்னாளா, அதான்… ஈசியா கண்டுபிடிச்சிட்டோம்….” என்றபடி குதூகலித்தனர் குட்டீஸ் இருவரும்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.