(Reading time: 55 - 110 minutes)

 

து தான் குட்டீஸ் நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆன கதை…” என்றாள் சாகரி…

“ஹேய்… இதுல நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆன கதையும் சேர்ந்தே வருது?...”

“ஆமா… ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்ன்னு சொல்லுவாங்கல்ல.. அந்த மாதிரி தான் இதுவும்…”

“ஹையோ… ஹையோ… தீபாவளி போனஸ் மாதிரின்னு சொல்லு… ஹ்ம்ம்…” என்று சிரித்தனர் நந்துவும் சித்துவும்…

அப்போது, “சே… இங்கே தான இருந்துச்சு…. எங்கே போச்சு… ஹேய் சாகரி… இங்கே ஒன்னு வச்சிருந்தேன் பார்த்தியாடி?...” என்று குரல் கொடுத்தாள் மயூரி தன் அறையிலிருந்து….

“சாகரி… மயில் எதோ கேட்குறா… நீ போய் எடுத்துகொடு…”

“சரி சித்து… நீங்க சமத்தா, இங்கே இருங்க… நந்துவை பார்த்துக்கோ, நான் இப்போ வந்துடுறேன்…”

“சரி சாகரி…”

அங்கே அறையில், “ஹேய்… என்னடி… வேணும் உனக்கு இப்போ?...”

“இங்கே ஒன்னு வச்சிருந்தேண்டீ… இப்போ காணோம்…”

“என்னன்னு சொன்னாதானடி தெரியும்?...”

“அது… வந்து… சாகரி…”

“ஹ்ம்ம்… சொல்லுடா… என்னது..?..”

“வந்து சாகரி.. அது எனக்கு வேணும்… அது இல்லைன்னா… “ என்றவளின் கண்கள் கலங்கியது…

அதைப் பார்த்து பதறிய சாகரி, “ஹேய்… என்னடா ஆச்சு… என்ன காணாம போச்சுன்னு சொன்னா தானடா தெரியும்… சொல்லு… எங்கிட்ட…” என்றதும் அனைத்தையும் கொட்டத்தயாரானாள் மயூரி….

“ஹேய்… மயூரி… நில்லுடி… இங்கே தான் ஸ்டெப்ஸ் இருக்குல்ல… அப்புறம் எதுக்குடி அந்த பாழாய்ப்போன லிஃப்ட்…”

“நீ அடங்கமாட்ட… வீட்டில தான் இந்த அநியாயம் பண்ணுவேன்னா, இங்கேயும் இப்படியா… அது வீடு டி…. லேட்டா போனா அங்கே திட்டு விழாது.. பட் இங்கே விழும்.. அதும் முதல் நாளிலேயே…”

“ஹேய்.. ஹேய்… நில்லுடி..” என்று சாகரி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மயூரி லிஃப்டினுள் புகுந்து விட்டாள்…

“சே… இருடி… உன்னை மேல வந்ததும் பார்த்துக்குறேன்…” என்ற சாகரி மெல்ல நடந்தாள் அந்த படியில்…

“ஹேய்… மயில் இதுதான் எனக்கே தெரியுமே… இத எதுக்குடி சொல்லுற இப்போ?...”

“குறுக்கே பேசாமல் கேட்குறியா இல்லையா நீ இப்போ?...”

“சரி நீ சொல்லு…”

“ஹ்ம்ம்… அன்னைக்கு லிஃப்ட்டுக்குள்ள இருந்து நான் வர லேட் ஆயிடுச்சுன்னு நீ கோபப்பட்டல்ல… அது ஏன்னு உனக்கு தெரியுமா?...

“ஹ்ம்ம்… சொல்லு… ஏன்?...”

“அன்னைக்கு,,,,” என்று அவள் சொல்ல முனைந்தாள்…

தே நேரம், அந்த உடையை எடுத்து அணிந்த முகிலன் மெல்ல கண்ணாடி முன் நின்றவாறே அன்றைய நாளை நினைவு கூர்ந்தான்…

“யாரும் இல்லையா இந்த லிஃப்ட்ல, ஹ்ம்ம்.. இந்த சாகரியும் சேர்ந்தே வந்திருக்கலாம்… எங்கே… அவ கேட்டா தான?...” என்றபடி லிஃப்ட்டினுள் நுழைந்தாள் மயூரி… அவள் முதல் தளம் அடைந்ததும் ஒரு நெடியவன் அதனுள் நுழைந்தான்… அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை… அவனும் அவளை கவனிக்கவில்லை.. அவன் தன் செல்போனை பார்த்தபடியே தான் நுழைந்தான்… இரண்டாம் தளம் அடைந்த போதும் அங்கும் யாரும் ஏறவில்லை.. ஏழாம் தளமும் வந்தது… அவன் வேகமாக வெளியேறினான்… பின் லிஃப்ட் கதவு அருகே இவள் வந்து நின்று கொண்டாள்…

கதவு சரியாக மூடும்போது அவன் உள்நுழைய, அவளும் நம்பரை அழுத்த அவன் தடுமாறினான்… அவள் சட்டென்று அவனின் கைப்பிடித்து உள்ளே இழுத்துவிட்டாள்… அவளின் மூச்சு காற்று அவன் மார்பை சுட்டது… அவன் கை அவளின் முதுகை வளைத்திருந்தது… அவள் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள்.. கணப்பொழுது நிகழ்ந்த நிகழ்வில் சுதாரித்து அவள் அவனிடமிருந்து விலக முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை… சட்டென்று திரும்ப நினைத்தவளால் திரும்ப முடியவில்லை சிறிதும்… பலங்கொண்டு விலக எண்ணியவள் கீழே விழும் முன் இடையோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான் அவளை முகிலன் குனிந்து… அவனின் கண்கள் அவள் முகத்தில் மேய, அவளோ இறுக விழி மூடிக்கொண்டாள்… அவளின் துடிக்கும் இமைகளை இமைக்காமல் பார்த்திருந்தான் அவன்…

அவளின் உள்ளங்கழுத்தில் அணிந்திருந்த செயின் அவனின் சட்டைப் பட்டனில் மாட்டியிருந்தது… அதனாலும் அவன் அவளை நெருங்கியிருக்க வேண்டிய கட்டாயம் உண்டானது… இப்போது அவன் மூச்சுக்காற்று அவளது கன்னங்களை சுட்டது… அதை உணர்ந்தவளின் உடல் சிலிர்த்தது… அதை அவனும் உணர்ந்தான் அவளைப் பிடித்திருந்த அவனின் இரு கரங்கள் மூலம்… மெல்ல விழி திறந்தவள் அவனது கண்களை நேரடியாக பார்த்தாள்… அவ்வளவுதான் முகிலன் விழுந்துவிட்டான் அவளிடம் காதலில்…

பின் அவளை நிமிர்த்தினான்… அவள் அவளின் செயினை எடுக்கப் போராடினாள்… முடிந்தால் தானே… அது வரமாட்டேன் என அடம் பிடித்தது… அவள் அதை இழுக்க, அவன் அவளின் மேல் விழுந்தான் மீண்டும்… அவளைப் பார்த்ததிலிருந்து அவனால் தான் நிற்க முடியவில்லையே சிறிதும்… அவன் விழுந்ததில் அவள் உடல் மீண்டும் ஒருமுறை தூக்கிப்போட்டது… இம்முறை கண் மூடி அவன் தொடுகையை ரசித்தாள் அது ஒரு வினாடி என்றாலும்… அவன் மயக்கத்தில் இருக்கும்போதே, அவள் அவனின் பட்டனைப் பிய்த்து எடுத்து விட்டாள்… பின் அவனை விலக்கி விடவும் லிஃப்ட் கடைசி தளம் அடையவும் சரியாக இருந்தது… லிஃப்ட் திறந்ததும் கீழே விழுந்து கிடந்த அவளது பையினை எடுத்துக்கொண்டு அவனை திரும்பி கூட பார்க்காது ஓடியே விட்டாள் அவள்… அவனோ பட்டனில்லாத தனது சட்டையினைத் தொட்டுப் பார்த்து சிரித்துக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான்…

விட்டால் போதுமென ஓடியவள் வேகமாக படியில் ஏறி அதற்கும் மேலே உள்ள தளத்திற்கு சென்றாள்… அந்த தளம் மொட்டை மாடி… காற்று வீசிக்கொண்டிருந்தது… அங்கே வந்தவளுக்கு அப்போது தான் உறைத்தது… அவள் செல்ல வேண்டியது பன்னிரண்டாம் தளமென்பது… ஆள் யாருமில்லாத அந்த தளத்தில் அவளுக்கு நிற்கவே பயமாக இருந்தது… கால்கள் பின்னாடி செல்ல காற்றில் முந்தானை பறக்க திரும்பியவள் எதன் மேலோ இடித்துக்கொண்டாள்… மோதிய வேகத்தில் சட்டென திரும்பியவளின் பார்வை அவளின் முந்தானையில் பட்டது… ஆம்… அது யாரோ ஒருவரின் முகத்தை மறைத்திருந்தது… மெல்ல அதனை விலக்கியவளின் பார்வையில் முதலில் தென்பட்டது மாயக்கண்ணனாகிய முகிலனின் கருவிழிகள் தான்… காதலில் சிக்கிக்கொண்டாள் அந்த பதுமையும் அவனிடத்தில்… என்ன செய்வதென யோசித்தவள், அவனிடமிருந்து விலகி திரும்பி வந்த விழியே வேகமாய் நடந்தாள் விரைவாக…. அவசரத்துடன் லிஃப்ட்டை அடைந்தவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது… நிம்மதி அடைந்தவள், சேர வேண்டிய தளத்திற்குள் வந்த போது, அங்கே கோபத்துடன் சாகரி நின்றிருந்தாள்…

“எங்கே டீ போய் தொலஞ்ச?...”

“….” பதில் பேசாது அவள் திருதிருவென பார்க்கவும்,

“சரி.. சரி.. முழிக்காத… வா போகலாம்…” என்றபடி அவளை இழுத்துச் சென்றாள் சாகரி…

அதன் பிறகு, அவனை நேரே அவனுடைய தனி அறையில் அவளுடைய மேலதிகாரியாக பார்த்தபோது அவளின் மூச்சு திரும்ப காணாமல் போவது புரிந்தது…. …. அன்றிலிருந்து அவன் அவளிடம் பேச எவ்வளவோ முயற்சி செய்கின்றான் தான்… ஹ்ம்ம் ஹூம்… இவள் வேலை விஷயம் என்றால் மட்டுமே அவனது அறைக்குள் செல்வாள்… அதுவும் சரியாக அவன் வேலையைப் பற்றி பேசி முடித்ததும் கிளம்பிவிடுவாள்… “மயூ….” என்ற அவனது குரல் காற்றில் கலந்து அவள் செவிகளை எட்டும்போது அவள் அவனுடைய அறை வாசலுக்கே சென்றிருப்பாள்… ஒரு மாதமாக அவனுக்கு விளையாட்டு காட்டி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றாள் அவள்…

அனைத்தையும் படபடப்புடன் சொல்லி முடித்தவள் சாகரியை நிமிர்ந்து பார்க்கவில்லை… சாகரிக்கு அவள் நிலை புரிந்தது…. அவளை அணைத்துக்கொண்டாள்… அவளை இலகுவாக்க,

“ஆக… மயூ- வின் ரகசியம் இது தானோ?... ஹ்ம்ம்… அடிப்பாவி… அதனால தான் என்னை அப்படி கூப்பிட விடலையா நீ?... சரி இவ்வளவு ஆசை வச்சிருக்கிறவ, அவர் பேச வரும்போது நின்னு என்னன்னு கேட்கவேண்டியது தானடி… லூசு…”

“இல்லடி… அவரைப் பார்த்தா பேச்சே வரமாட்டிக்குது…”

“ஓ…ஹோ… ரேவதி மாதிரி காத்து தான் வருதுன்னு சொல்லாம விட்டீயே… அதுவரை சந்தோஷம் தாயே….”

“சீ… போடி…”

“பாருடா.. வெட்கத்தை…. சரி… எத தேடின?... அத சொல்லு முதலில்…” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாது, மறுபடியும் தேடிவளின் கண்களில் இம்முறை அது தென்பட்டது… அதை கையில் எடுத்தவள் சாகரியிடம் காட்டினாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.