(Reading time: 55 - 110 minutes)

 

சாகரி… நீயும் மயிலும் எப்படி ஃப்ரெண்ட்ஸ் ஆனீங்க?...”

“என்ன சித்து திடீர்னு?...”

“சும்மா தான் சொல்லேன்…”

“ஆமா… சாகரி சொல்லேன்… எனக்கும் ஆசையா இருக்கு கேட்க… ப்ளீஸ்…” என்றாள் நந்து….

“ஹேய்… நந்து இதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம்… நீங்க சொல்லுன்னு சொன்னா நான் சொல்லிடப்போறேன்… இப்போ என்ன உங்களுக்கு அந்த ஸ்டோரி தெரியனும்?... அவ்வளவுதான?... சரி ஒகே… ரெடியா?...”

“ரெடி…” என்றனர் இருவரும்….

“சரி… என்ன நடந்துச்சுன்னா…” என்றபடி சாகரி சொல்ல ஆரம்பிக்க….

“ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்….” என்றான் சித்து…

“ஹேய்… எதுக்குடா இப்போ நிறுத்த சொன்ன நீ?...”

“நந்து… வெயிட் வரேன்…” என்றவன் சென்று கையில் ஒன்றை கொண்டு வந்தான்…

“அண்ணா என்ன இது?...”

“அட… சித்து… எதுக்கு இப்போ இது?...”

அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் அந்த கொசுபத்தி சுருளை சுற்றினான் மெதுவாக…

“எல்லா சினிமாலயும் ஃப்ளாஷ்பேக் இப்படிதான் சுத்திவிட்டு சொல்லுவாங்க… நீ தான் செய்ய மறந்துட்ட… அதான் நான் செஞ்சேன்…” என்றான் சித்து…

“அய்யோ… என் அறிவு அண்ணா… கையை குடு…” என்றபடி தன் அண்ணனின் கரங்களைப் பற்றிக்கொண்டாள் நந்து…

“ஹ்ம்ம்… கதை சொல்லுறேன்னு சொல்லிட்டு, இங்கே எங்களைப் பார்த்தா என்ன அர்த்தம் சாகரி?...”

“இல்லை… அதைவிட, இங்க பெரிய கதை ஓடும்போல தெரிஞ்சது… அதான்…”

“ஹேய்.. எங்களை கிண்டல் பண்ணாம நீ ஸ்டோரி சொல்லு ஃபர்ஸ்ட்….” என்றான் சித்து…

“சரி ஒகே… டீல்…” என்று சொல்ல ஆரம்பித்தாள் அவள்….

“அப்பா… இங்கே பக்கத்தில தான் ஆஃபீஸ்… சோ, ஹாஸ்டல் எதாவது பார்த்துக்கலாம்…”

“சரிம்மா.. ஆனா…”

“என்னப்பா ஆனா…?...”

“தெரியாத ஊர்… அதான் யோசிக்கிறேண்டா…”

“அப்பா நான் இங்கே தான் காலேஜ் படிச்சேன்.. மறந்துட்டீங்களா?...”

“இல்லடா.. அப்போ ஷன்வி உங்கூட இருந்தா… இப்போ அவ வேற வெளிநாட்டுக்கு போயிட்டான்னு சொல்லுற… அதான்டா யோசிக்கிறேன்…”

“அவ இன்னும் இரண்டே வருஷத்துல திரும்பி வந்துடுவாப்பா…. பாவம் அவங்க அப்பாவுக்கு ஒரே தங்கை… ஷன்வி அம்மா இறந்தப்பவும், அவ அப்பா அவளை விட்டு போன பின்பும், சூழ்நிலை காரணமா அவங்களால இங்கே ஷன்வி கூட இருக்க முடியாம போயிடுச்சு … அவங்க ரொம்ப நாள் முடியாம அங்கே இருக்காங்களாம்ப்பா… அவங்க சொத்துக்கு வாரிசு யாருமில்லை… அவங்க தனிமரம்… பாவம்… அவங்க படுக்கையில விழுந்து 20 வருஷம் மேல ஆகுது… ஆனாலும் திடமா தான் இருந்தாங்க… சமீபத்துல அவங்களுக்கு கண் பார்வை மங்கலாயிடுச்சாம்… அத வச்சு அவங்க சொத்தை எழுதி வாங்க முயற்சி பண்ணுறங்களாம்ப்பா… ஹ்ம்ம்.. அப்போ எல்லாம் வராதவங்க இப்போ அவங்ககிட்ட இருக்குற சொத்துக்கு ஆசைப்பட்டு அவங்ககூட வந்து ஒட்டி உறவாடுறாங்க… அது தெரிஞ்சு தான் ஷன்வியை அவங்க ரொம்ப நாள் கூப்பிட்டுகிட்டே இருந்தாங்க… இவளும் படிச்சு முடிச்சதும் அவங்களை இங்கேயே கூட்டிட்டு வந்து பார்த்துக்கணும்னு சொல்லிட்டு இருந்தா… அதுக்குள்ள இவளே படிப்பை முடிச்சு அங்கே போய் தங்குற நிலைமை வந்துட்டு…”

“ஹ்ம்ம்.. மனுஷங்க… பணம் பணம்ன்னு அலைஞ்சு உறவுகளோட அர்த்தத்தை தொலைச்சிடுறாங்க… அந்த அம்மாவுக்கு எதும் ஆகாது… ஷன்வி இருக்கால்ல, அவ பார்த்துப்பா. கடவுள் அவங்க கூட இருக்கட்டும் துணையா…”

“கண்டிப்பா கடவுளும் ஷன்வியும் கூட இருப்பாங்கப்பா அவங்க கூட…”

“சரிம்மா… இப்போ நாம எங்கே போறது?...” என்றபடி அவளின் பையை எடுத்தவரை, எதிரே அவரின் வயது ஒத்த ஒருவர் இடித்துவிட,

“மன்னிச்சிடுங்க… தெரியாம இடிச்சிட்டேன்…” என்றார் இடித்த அந்த வெளியூர் காரர்….

“பரவாயில்லைங்க… அதனால என்ன… மன்னிப்பெல்லாம் வேண்டாங்க…”

“சரிங்க… நீங்க வெளியூறா?..”

“ஆமாங்க…. எப்படி கண்டுபிடிச்சீங்க?...”

“நானும் வெளியூர் தாங்க… இந்த சென்னையில் இப்படி தெரியாம இடிச்சிட்டா, அவ்வளவுதான்… ஆனா… நீங்க பதில் சொன்ன விதத்துலயே தெரிஞ்சுட்டு எனக்கு… நீங்களும் என் மாதிரி வெளியூர்ன்னு…”

“சரியா தான் சொன்னீங்க… இந்த ஊருலயும் மனுஷங்க தான் வாழுறாங்கன்ற உணர்வே இல்லாம இருக்குறாங்க… ஹ்ம்ம்… என்ன செய்யுறது… எல்லாம் காலம் தான் மாத்தணும்…”

“ஹ்ம்ம்… அப்படி மாத்தினா சந்தோஷம்ங்க… இது உங்க பொண்ணா?...” என்றபடி கேட்டார் அந்த வெளியூர்காரர்…

“ஆமாங்க… இது உங்க பொண்ணா?...”

“ஆமாங்க… இவ தான் என் மூத்தபொண்ணு…”

“ஓ… நல்லதுங்க… என் பேரு ஜனகன்… இது என் பொண்ணு சாகரிகா சீதை…”

“நான் செல்வராஜ்… இது என் பொண்ணு மயூரி லக்ஷ்மி…” என்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள் பெரியவர் இருவரும்…

“ஜனகனா?... நீங்க எந்த ஊரு?...”

“தஞ்சாவூர் பக்கமுங்க… உங்களை கூட எங்கேயோ பார்த்த நியாபகம் இருக்கு…”

“ஹ்ம்ம்… எனக்கும் அப்படிதான் தோணுது…”

“நீங்க பொள்ளாச்சி பக்கமா?...”

“அட ஆமா.. எப்படி சரியா சொன்னீங்க?...”

“மேலத்தெருவா?...”

“அட ஆமாங்க…”

“டேய்… ராசு.. நான் ஜனா டா…”

“ஜ… னா…. டேய்..  நீயா?...” என்றபடி பால்ய நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்…

இரு பெண்களும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் சிறிது நேரம்…

“அப்பா… யாருப்பா… இவர்?...”

“சாகரி… நான் சொல்லுவேன்ல, என்கூட எட்டாவது வரைக்கும் ஒன்னா படிச்ச என் பால்ய ஸ்நேகிதன் ராசுன்னு… அது இவன் தான்மா…”

“ஓ… அந்த மாமாவா?...”

“ஹ்ம்ம் ஆமாடா…”

மயூரியும் சாகரி போல தன் தந்தையிடம் விவரத்தை கேட்க அவரும் ஜனா சொன்னது போலவே பதில் சொன்னார்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.