(Reading time: 55 - 110 minutes)

 

ஹ்ம்ம்… ஹ்ம்ம்… போதும்… போதும்… நாங்களும் இங்கே தான் இருக்குறோம்….” என்றாள் கீர்த்து…

“அடடா…. ஹ்ம்ம்… இரு மது நான் வரேன் இப்போ…” என்றபடி கீர்த்து பக்கம் சென்றான் சித்து…

“எங்கே என் சாக்லேட்…?.... எல்லாத்தையும் நீயே சாப்பிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா?....”

“ஹேய்… சித்து குட்டி…. உனக்கில்லாத சாக்லேட்டா?.... இந்தா செல்லம் வச்சிக்கோ…” என்று அவனுக்காக வாங்கினதை அவனிடத்தில் கொடுத்தாள்…

அதை வாங்கியவன்., “அப்போ என் நந்துக்கு?....”

“ஹ்ம்ம்… பாசக்கார அண்ணன் தான்….” என்றபடி நந்துவிடம் கொடுத்தாள் கீர்த்து… அவளைக்கொஞ்சி கொண்டே….

“நீ எங்களை துரு துருன்னு சொல்லுற… ஆனா நீ தான் துரு துருன்னு இருக்குற… எங்களை விட… ஹ்ம்ம்… உன் சாக்லேட்க்கு எங்க கிஃப்ட்…. இந்தா….” என்றபடி… நந்துவும் சித்துவும் கீர்த்துவுக்கு முத்தமிட,..அவளும் அதை வாங்கிக்கொண்டு பதிலுக்கு முத்தமிட்டாள்….

“ஹாய் மீனு…. என்ன கனவுல இருக்கியா?....”

“இல்….ல…. சித்து….”

“அப்புறம் ஏன் அமைதியா இருக்குற?....”

“அது… உங்களைப் பார்த்த சந்தோஷம் தான்….”

“ஓ…. நந்து கேட்டியா…. மீனு சொன்னதை….”

“ஹ்ம்ம்… கேட்டேன் அண்ணா…”

“ஹாஹாஹா….” என்று சிரித்தான் சித்து…

“ஹாய்…. சுஜி…. நீ சாகரிக்கு ஃப்ரெண்டா?... இல்லை அண்ணியா?...”

“இரண்டும் தான் நந்து குட்டி….”

“ஓ…. அப்போ நீயும் எங்களுக்கு ஃப்ரெண்ட் தான் இனி…” என்று அவளின் கைப் பிடித்துக்கொண்டாள் நந்து… சித்துவும் அவளின் இன்னொரு கையை பிடித்துக்கொண்டான்….

“நீ தான் எங்களுக்கு உம்மா குடுத்ததா?...”

“ஹ்ம்ம்…..”

“சரி இந்தா வாங்கிக்கோ…. நாங்க யாருக்கும் கடன் காரங்களா இருக்க மாட்டோம்…. நந்து வா…” என்று அவளையும் அழைத்து சுஜியின் கன்னத்தில் முத்தமிட்டனர் இருவரும்…

“ஹாய்… நித்து…. என்னைப் பிடிச்சிருக்கா உனக்கு…” என்று கொஞ்சம் வெட்கத்துடன் கேட்டான் சித்து….

“ஆமா சித்து…. நந்துவையும் ரொம்பவே பிடிச்சிருக்கு….” என்றதும் அவன் முகம் கொஞ்சம் வாடி தான் விட்டது…

அதை கவனித்தவள்… “அய்யோ என் சித்து குட்டி… நிஜமாவே நீ க்யூட் தான் ரொம்ப…” என்று அவனை அணைத்துக்கொண்டாள்….

“ஹேய்… வளர்… என்னை எங்களைப் பற்றி சொல்லும்போது தான் ரசிப்பியா?... நேர்ல இருக்கும்போது கண்டுக்கவே மாட்டிக்க…”

“இல்லடா குட்டி… நீங்க பேசுறத ரசிச்சிட்டிருக்கேன்… அதான்…”

“ஹ்ம்ம்… வளர்.. வளர்… நீ பேருல தான் வளர்ந்திருக்க போல…. பேச்சிலேயும் வளரணும்…. சரியா?...”

“ஹ்ம்ம்… சரிங்க குட்டீஸ்….” என்றபடி அவளும் அவர்களை அணைத்துக்கொண்டாள்….

“காயூ….. நீயும் க்யூட் சொல்லிருக்க போல…. ஹ்ம்ம்….”

“ஹ்ம்ம்… ஆமாடா… உண்மையை தானே சொன்னேன்….”

“நீ கூட க்யூட் ஆ தான் இருக்க எங்களை மாதிரி….”

“ஹ்ம்ம்… நிஜமாவா?...”

“ஹ்ம்ம் ஆமா.. ஆமா…” என்றபடி அவளுடன் சிறிது நேரம் கொஞ்சிக் கொண்டிருந்தனர்…

“ஹ்ம்ம்… சரி சரி… இங்கே வா….” என்றபடி அவளை அழைத்து அவளின் தலையில் செல்லமாக முட்டினர் இருவரும்….

“புவி எங்கே… எனக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொன்னாளாமே…”

“ஹ்ம்ம்… ஆமா குட்டி….” என்றாள் சாகரி….

“ஹ்ம்ம்… அவளை எப்போ பார்ப்போம் சாகரி?...”

“சீக்கிரமே பார்ப்போம்டா….”

“ஹ்ம்ம்… சரி…” என்றனர் இருவரும்…. பின்னர்,

“ஓய்…. பேகம் எங்கே?.... அவ தான என்னை ஸ்மார்ட் சொன்னா?... எங்கே என் டார்லிங்க்…?...” என்றபடி தேடினான் சித்து ஃபெமினா பேகத்தை….

“அச்சோ… அவளை அடுத்த டைம் கூட்டிட்டு வறோம்…. குட்டீஸ்…”

“ஹ்ம்ம்… சரி சரி… எங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன உங்க க்ரூப் எல்லாரையும் நாங்க கேட்டதா சொல்லுங்க…. சரியா?... எங்களை பற்றி கேட்காதவங்களையும் கேட்டதா சொல்லுங்க… எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொன்னோன்னும் சொல்லுங்க சரியா?....” என்றனர் இருவரும்…

“கண்டிப்பா செல்லங்களா….”

சாகரி அனைத்தையும் பார்த்து சிரித்துக்கொண்டாலும், மனம் அவளது ராமை தேடியது என்னவோ உண்மைதான்….

அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பேசினர்…

பின், “சரி சாகரி… லேட் ஆயிட்டு….. நாங்க கிளம்புறோம்… இன்னொரு நாள் வீட்டுக்கு வருகிறோம்… இன்னும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிகிட்டு… சரியா…. ஹ்ம்ம்… டாட்டா சித்து நந்து..” என்றபடி விடைபெற்றனர் அனைவரும், சாகரி மற்றும் சித்து நந்துவிடமிருந்து….

“ஹ்ம்ம்… உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சூப்பரா பேசுறாங்க சாகரி…. ஹ்ம்ம்… ஆதி அங்கிளும் வந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்ல….” என்றனர் இருவரும்….

அவர்களுக்கு என்ன பதில் சொல்வாள் அந்த பேதை…. அவளும் அவளது ராமனை எதிர்பார்த்து தானே காத்திருக்கின்றாள்…. அவன் வருவானா என்று வாசலில் விழி பதித்து காத்திருந்தாள் அவள்…. விழிகளில் அளவில்லாத தவிப்புடனும்…. காதலுடனும்…. தேடலுடனும்….

அவளின் தேடுதலுக்கு விடை கிடைக்குமா?... ராமனின் வருகையாக……

பொருத்திருந்து பார்க்கலாம்… நாமும் தேடுதலுடன்… ஆதர்ஷ் ராமின் வருகையை நோக்கி….

எல்லாரும் என் மேல கொலை வெறியில் இருப்பீங்களே… ராம்-சீதா பேசுற மாதிரி இந்த வார கதை இல்லை… மன்னித்துவிடுங்கள்…

ஆதர்ஷ் சாகரியின் சந்திப்பு நிகழுமா?... அப்புறம் உங்களில் சிலரின் பெயரையும் இதில் கொஞ்சம் சொல்லியிருப்பேன்… அது நந்து-சித்து வேலைப்பா… நான் எதும் செய்யலை… அவங்க தான்…. எல்லாத்துக்கும் காரணம்… ஹ்ம்ம்…

மீண்டும் அடுத்த வார சீதா-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்…

அனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…

தொடரும்

Go to episode # 08

Go to episode # 10

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.