(Reading time: 55 - 110 minutes)

 

சிரிக்கையில் விழும் கன்னத்துக்குழியில் பார்ப்போரை கொள்ளை கொள்ளும் கண்ணனாக மாயவனாக இருந்தான் முகிலன் புகைப்படத்தில்… அவனது புகைப்படத்தின் கீழே சின்ன அழகான மயிலிறகை வைத்து அதன் நடுவே, அவனது சட்டைப்பட்டன் ஒட்டப்பட்டிருந்தது…

“இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற ரேஞ்சில் இருந்துக்கிட்டு நீ செஞ்ச வேலையைப் பார்த்தா எனக்கு கண்ணே கட்டுதுடி…”

“….”

“என்னடி… டூயட் பாட போயிட்டியா?...”

“சீ… போ…”

“அடடா…. சரி வா இன்னைக்கு அவர்கிட்ட பேசிடலாம்…”

“எ….ன்….ன…. பேசப்போற?....”

“ஹேய்…. மயில்… ரிலாக்ஸ்… அத அப்புறமா பார்த்துக்கலாம்… இப்போ எங்கூடவா….”

“ஹ்ம்ம்…சரி…”

“ஹ்ம்ம்.. இப்போதான் நீ குட்கேர்ள்…”

“ஹ்ம்ம்… நீயும் குட்கேர்ள் தான்…”

“ஹாஹாஹா நாம ரெண்டுபேரும் தான்… ஓகேயா?...”

“டபுள் ஓகே…” என்றாள் மயில்…

“டேய் என்னடா… கனவா?... பகலிலேயா…?...”

“இல்லடா மச்சான்… சும்மா அவளைப் பார்த்த முதல் நாள் நினைவு வந்தது… அதான்…”

“சரி சரி… என்ஜாய்…”

“ஹ்ம்ம்.. ஆமாடா அதெப்படிடா…?..”

“என்னதுடா?...”

“இல்ல… அன்னைக்கு ஒரு நாள் தான் நான் உன்னை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்… நீ எனக்கு ஃப்ரெண்ட் என்று… அதை கூட அவள் ஹ்ம்ம் என்று தான் கேட்டுக்கொண்டாள்… எனக்கு தெரிந்து அவள் உன்னிடம் பேசிய மாதிரி தெரியவில்லை… நீயும் தான்… பிறகு எப்படிடா?... அவளை நீ தங்கை சொல்கிறாய்…?...”

“ஹாஹாஹா… அதெல்லாம் அப்படிதான்… சீக்ரெட்…” என்று மர்மமாக புன்னகைத்தான் ஆதர்ஷ்…

“டேய்… டேய்… ஒருநாள் இல்ல ஒருநாள் தெரியாமலா போயிடும்?... அப்போ பார்த்துக்கறேண்டா உன்னை…” என்று அழுத்தமாக சொன்னான் முகிலன்….

“ஹ்ம்ம்…. பார்த்துக்கோ… பார்த்துக்கோ…” என்றபடி முகிலனைச் சுற்றி நடந்தான் ஆதி…

அவன் புரியாமல் விழிக்க,

“இல்ல… நீதான் பார்த்துக்கறேன்னு சொன்ன, அதான்… பார்த்துக்கன்னு நடந்தேன்,…”

“டேய்… பாவி… உன்னை…” என்றபடி முகிலன் ஆதியை அடிக்க கை ஒங்க… அவன் சிரித்துக்கொண்டே “வாடா போகலாம்…” என்றபடி முகிலனை சாப்பிட அழைத்துச்சென்றான்…

“என்ன ஆதி?... ஒரே சிரிப்பா இருக்கு…”

“அதெல்லாம் ஒன்னுமில்லை பாட்டி….”

“இல்லையே ஏதோ இருக்கே…” என்று சந்தேகத்தோடு பர்வதம் பார்க்க…

“பாட்டி, அது வேற ஒன்னுமில்லை… நான் காலையில உங்ககிட்ட அடிவாங்கினேன்ல… அதான்.. துரைக்கு சிரிப்பு வருது…”

“ஓ… அதுவா…” ஹ்ம்ம்.. “ஆமா… முகிலா பாட்டி மேல கோபமாடா?.. ரொம்ப அடிச்சிட்டேனாடா?...” என்று பாசமுடன் தலையை வருடியபடி கேட்டார் பர்வதம்…

எழுந்து பாட்டியின் கைகளை பிடித்துக்கொண்டவன், “அச்சோ… பர்வதம்… என்ன நீ இப்படி ஃபீல் பண்ணுற?... என்கிட்ட உனக்கு இல்லாத உரிமையா?...”

“இல்லடா கண்ணா… நான் உன்னை…”

“பர்வதம்… இப்போ நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா?...”

“ஹ்ம்ம்…”

“ஹ்ம்ம்.. ஹூம்… இது சரிப்படாது… டேய்… ஆதி… அந்த உலக்கையை எடுடா… அதை மறுபடியும் ஒளிச்சு வைச்சா தான் பர்வதம் பழைய மாதிரி ஆவா…”

“சரிடா… மச்சான்…” என்றபடி ஆதி அதை எடுக்க செல்ல…

“டேய்… படவாக்களா… என்னடா… கொழுப்பா…” என்று பர்வதம் முறைக்க….

“இது இது இது தான் நம்ம பர்வதமாக்கும்… இல்லடா ஆதி…” என்றபடி பர்வதத்தின் தோள் மேல் கையைப் போட்டுக்கொண்டான் முகிலன்…

ஆதியும் அவற்றைப் பார்த்துக்கொண்டே சிரித்தபடி நின்றான் மனம் நிறைய சந்தோஷத்துடன்…

அந்த நேரம் ஆதிக்கு போன் வர, அதை எடுத்தவன்…

“சொல்லுங்க அம்மா,,,,”

“என்னடா பண்ணுற?...”

“ஆஃபீஸிற்கு கிளம்பிட்டிருக்கோம் அம்மா…”

“ஹ்ம்ம்… சரிப்பா… சீதாவைப் பற்றி விசாரிச்சியா?...”

“இல்லம்மா… விசாரிக்கப் போறேன்… அவளைப் பற்றி நேரடியா விசாரிக்க முடியாதும்மா… அவ வேலை செய்யுற கம்பெனி, சென்னையில மட்டும் பதினைந்து கிளைகள் மேல இருக்கும்மா… அதுல ஏகப்பட்ட டிபார்ட்மென்ட்ஸ் வேற இருக்கு… அது உங்களுக்கே தெரியுமே… சோ, அந்தந்த கம்பெனி கிளையோட ஜீஎம் கிட்ட பேசி எம்ப்ளாயீஸ் டீடைல்ஸ் கேட்டிருக்கேன்… அவங்க டைம் கேட்டிருக்காங்க… ஹ்ம்ம்… பார்க்கலாம்…”

“என்னைக்கு கொடுக்க சொல்லியிருக்க?...”

“வித் இன் டுடே ஈவ்னிங்…”

“அதுசரி தான்… நீ தேறிட்ட…”

“ஹாஹாஹா…”

“சிரிப்பு வேறயா?...”

“ஹ்ம்ம் யெஸ் அம்மா…”

“ஏன் கேட்குறீங்கன்னு ஒரு ஜீஎம் கூட உன்னை கேட்கலையா?...”

“இல்லம்மா…”

“அதெப்படி கேட்பாங்க… அவங்க வெரும் ஜீஎம் தான்…. எம்டி இல்லையே…”

“ஓ…”

“என்னடா.. ஓ….?... அத்தனை கம்பெனிக்கும் எம்டி மாதிரியா நீயும் முகிலனும் நடந்துக்கறீங்க?... உங்க அப்பா பேரை எம்டியா வெளி உலகத்துக்கு காட்டிட்டு நீங்க இரண்டு பேரும் ஆளுக்கொரு கம்பெனியில சும்மா ப்ராஜெக்ட் ஹெட்-ஆ வேலைப் பார்த்தா யாருக்கு தான் தெரியும் நீங்க தான் எம்டின்னு…. இந்த லட்சனத்துல ஜீஎம் எல்லாரும் நீங்க பார்த்து வைச்ச ஆட்கள்… பின்ன அவங்க உங்களுக்கு தானடா ஜால்ரா தட்டுவாங்க…”

“ஹாஹாஹா… அப்படியா அம்மா…”

“செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு அப்படியான்னு கேளு ஒன்னும் தெரியாத மாதிரி….”

“சரிம்மா.. கேட்குறேன்.. அம்மா சொன்னா கேட்கணும்… நான் கேட்பேன்…”

“அய்யோ.. அய்யோ…. எனக்கு இப்படி ஒரு பிள்ளையா?...”

“இப்படிதான் அம்மா உங்க ஐஞ்சு பிள்ளைங்களும்…”

“ஆமாடா.. நீங்க நாலு பேரு… அப்புறம் உங்க அக்கா… ஆனாலும் என் பையன் ஹரி தான் ரொம்ப பொறுப்பான பையன்… டாக்டர் வேலையை ஒழுங்கா செய்யுறான்…”

“சரியா சொன்னீங்கம்மா…” என்று சிரித்துக்கொண்டே தாயிடம் பேசி முடித்தான் ஆதி….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.